புகழ்பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் உட்பட 300க்கும் மேற்பட்ட மதரஸாக்களை சட்ட விரோதமாக்கிய உத்தரபிரதேச பாஜக அரசாங்கத்தின் செயல் முஸ்லீம் சமூகத்தை அந்நியப்படுத்தும் ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தின் ஒரு பகுதி என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் வழ.ஷர்புதீன் அஹமத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாருல் உலூம் தேவ்பந்த் உட்பட 300க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் மாநில மதரஸா கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அவர்கள் ஒரு கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்ததாக உத்தரபிரதேச அரசாங்கம் […]
Uttar Pradesh
உ.பி : கும்பலாக வீட்டிற்குள் புகுந்து முஸ்லிம் விவசாயியை அடித்து கொன்ற கொடூரம்!
உ.பி.யில் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமியர்! கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அன்று, இரவு 10:15 மணியளவில், உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள வினய்பூர் கிராமத்தில் வசிக்கும் தாவூத் அலி தியாகி, தனது வீட்டிற்கு வெளியே ஒரு கட்டிலில் அமர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். தாவூத்தின் மருமகன் நயீம் தியாகி மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் அக்ரம், அவருக்கு அருகில் அமர்ந்திருந்தனர். திடீரென்று 6,7 பைக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த ஒரு கும்பல், தியாகி மீது தாக்குதல் […]
உபி: ஆடு தனது வீட்டில் மேய்ந்ததற்காக , பாஜக தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகளால் அடித்துக் கொல்லப்பட்ட முஸ்தகீம்.!
உ.பி: கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி, பதோஹியின் கத்ரா பஜாரின் ரசூலியத் கான் பகுதியில் பாஜக தலைவர் அடங்கிய 21 பேர் கொண்ட கும்பலால் முஸ்தகீம் (55) படுகொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பிறகு பலவந்தமாக உடல் அடக்கமும் செய்யப்பட்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். எனினும் இது ஊடகங்களில் பெரிய அளவில் செய்தியாக வெளி வரவில்லை. “எங்களிடம் 2, 3 ஆடுகள் உள்ளன. அருகில் உள்ள பாஜக தலைவர் சந்தீப்பின் வீட்டில் புல்லை மேய்ந்து விட்டது. இதில் […]
உபி: 19 வயது ஷாருக் சுட்டுக்கொலை!
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள பராலி கிராமத்தில் ஷாருக் என்ற 19 வயது இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். முசாபர்நகரில் வசிப்பவரும் கூலித் தொழிலாளியுமான ஷாருக் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரும் அவரது நண்பரும் வீடு திரும்பி கொண்டிருக்கும் போது, நீங்கள் திருடர்கள் என முத்திரை குத்தி, தாக்கத் தொடங்கப்பட்டதாக ஷாருக்கின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இறந்தவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட தரம்வீர் மற்றும் ஓம்பல் ஆகிய […]
கிறிஸ்தவர்கள் மீது 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்; உச்சநீதிமன்றத்தில் தரவுகளின் அடிப்படையில் மனு !
ஒரு அரசு சாரா நிறுவனத்தின் உதவி எண் மூலம் பெறப்பட்ட அழைப்புகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜூலை வரை கிறிஸ்தவர்கள் மீது 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்தல்கள் நடைபெற்றுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல். இந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ‘பொய்யானவை’ ‘உள்நோக்கம் கொண்டவை’ என்றும் உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு தெரிவித்துள்ளது. உபியில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்: கடந்த ஆகஸ்ட் 28 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஹர்சந்த்பூர் என்ற கிராமத்தில் மூன்று நபர்கள் […]
உபி : ஜமா பள்ளிவாசல் கோவில் என அங்கு வழிபாடு நடத்த வழக்கு; விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்!
பதாவுன் நகரில் உள்ள ஜமா மஸ்ஜித் ஷம்சி, சிவன் கோயில் என்றும், சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்து மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் சனிக்கிழமை தெரிவித்தார் உபி: பதாவுன் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களின் ஜமா பள்ளிவாசல், கோவிலை இடித்து கட்டப்பட்டது என்று இந்துத்துவா அமைப்பான அகில பாரதீய இந்து மகாசபா (ABHM) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்: ஆகஸ்ட் […]
உபி: தனது பைக்கை தொட்டதால் தலித் சமூக மாணவரை மெட்டல் ராடால் தாக்கிய ஆசிரியர்!
ஆசிரியர் கிருஷ்ண மோகன் சர்மா தன்னை மெட்டல் ராடால் (உலோகத்தாலான ராடு) மற்றும் துடைப்பத்தால் தாக்கி, கழுத்தை நெரித்ததாகவும் பாதிக்கப்பட்ட தலித் சமூக மாணவர் தெரிவித்துள்ளார். ‘பள்ளியின் மற்ற ஊழியர்கள் சிறுவனை மீட்டனர்’ என போலீசார் தெரிவித்தனர். பல்லியா (உத்தரப்பிரதேசம்): தனது மோட்டார் சைக்கிளைத் தொட்டதற்காக, தலித் மாணவர் ஒருவர் வகுப்பறையில் அடைத்து வைக்கப்பட்டு, அவரது ஆசிரியரால் உலோகக் கம்பியால் தாக்கப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். கிருஷ்ண மோகன் சர்மா என்ற ஆசிரியர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். […]
உ.பி : பல சமய பிரார்த்தனையில் முஸ்லிம் பிரார்த்தனையும் இணைக்கப்பட்டதை அறிந்து பள்ளிக்கு சீல் வைப்பு !
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அனைத்து மத வழிபாட்டின் ஒரு பகுதியாக இஸ்லாமிய பிரார்த்தனைகளையும் இணைத்துள்ளது தொடர்பாக விஎச்பி உள்ளிட்ட இந்துத்துவா குழுக்களின் புகார் மற்றும் எதிர்ப்பைத் தொடர்ந்து, பள்ளியின் இயக்குநர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295A (மத உணர்வுகளை புண்படுத்தல்) மற்றும் மதமாற்ற தடைச் சட்டம் 2021 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கான்பூரில் உள்ள புளோரெட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, இந்துத்துவாவினரின் விஷம பிரச்சாரம் காரணமாக இரண்டு […]
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தில் இருந்து பாகிஸ்தானிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நீக்கம்!
உபி: புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களான மௌலானா அபுல் அலா மௌதூதி மற்றும் சையத் குதுப் ஆகியோரின் புத்தகங்களை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக (AMU) நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. முஸ்லிம் கல்வி நிலையங்களில் மூக்கை நுழைக்கும் இந்துத்துவாவினர்: இந்துத்துவா ஆர்வலர் மது கிஷ்வர் மற்றும் பிற இந்து மேலாதிக்க தேசியவாத கல்வியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. இந்த புத்தகங்கள் ஏ.எம்.யுவின் […]
உபி : “பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவேன் ” என முஸ்லிம் வியாபாரியை மிரட்டிய எஸ்.ஐ !
கான்பூர்,உத்தரப்பிரதேசம், ஆகஸ்ட் 4 (ஐஏஎன்எஸ்): ‘பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவேன்’ என்று ஒரு முஸ்லிம் விடுவேன் வியாபாரியை போலீஸ் அதிகாரி மிரட்டும் ஆடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உ.பி. போலீஸ்காரர் ஒருவருக்கும் முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கும் இடையிலான உரையாடல் ஆடியோ கிளிப்பில் சப்-இன்ஸ்பெக்டர் அந்த நபரிடம் தனது பெயரைக் கேட்டு முஸ்லிம் என்பதை அறிந்து கொண்ட உடன் “உன்னை பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவேன்” என கூறுவதைக் கேட்க முடிகிறது. பணத்தை உரிய தவணையில் செலுத்த […]
உபி: 4 கிலோ அரிசி திருடியதாக தலித் சமூக சிறுவன் அடித்து கொலை!
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ள சூல்ரா கிராமத்தில் நான்கு கிலோ அரிசி மற்றும் மாம்பழங்களைத் திருடியதாக கூறி தலித் சமூக சிறுவன் விஜய் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வாரணாசி-படோஹி சாலையில் உள்ள கப்சேதியில் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தந்தை அளித்த புகாரின் பேரில், கப்சேதி போலீசார் […]
உபி: தலித் சமூக பெண்ணின் ஆடையை கழற்ற முயன்றதற்காக 4 ‘உயர்சாதியினர்’ மீது வழக்கு பதிவு !
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் 38 வயது தலித் சமூக பெண்ணை வியாழக்கிழமை அன்று மானபங்கப்படுத்த முயன்றதாக உயர் சாதி சமூகத்தை சேர்ந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். “நான் அந்த இடத்தை அடைந்தபோது, அவர்கள் என் மகன்களை தாக்குவதை கண்டேன், என் மகன்களை விட்டுவிடும்படி அவர்களிடம் மன்றாடினேன், ஆனால் அவர்கள் என் பேச்சை கேட்கவில்லை. […]
முஸ்லிம் தொழிலதிபரை லவ் ஜிஹாத் & கற்பழிப்பு வழக்கில் சிக்க வைக்க ‘செட்டப்’ செய்யப்பட்ட பெண் !
உபி: டெல்லியைச் சேர்ந்த 24 வயது இந்துப் பெண், உத்தரப் பிரதேசத்தில் உள்ள கஸ்கஞ்சைச் சேர்ந்த 27 வயது முஸ்லீம் தொழிலதிபரை போலி கற்பழிப்பு மற்றும் ‘லவ் ஜிஹாத்’ வழக்கில் சிக்க வைக்க இரண்டு நபர்கள் ‘தன்னை பணியமர்த்தியதை’ ஒப்புக்கொண்டுள்ளார். அமன் சவுகான் (34) மற்றும் ஆகாஷ் சோலங்கி (28) என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த இருவரில் ஒருவரான அமன் “பாஜக இளைஞர் பிரிவின் மாவட்ட துணைத் தலைவர்” என்று அவரது முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி டைம்ஸ் […]
உபி: வெடிகுண்டுகளுடன் சிக்கிய 6 பேர்; தீவிரவாத பட்டம் சுமத்தப்படாத வினோதம்!
உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை (STF) சனிக்கிழமையன்று காஜிபூரில் இரண்டு கையெறி குண்டுகளுடன் ஆறு பேரை கைது செய்தது. குற்றவாளிகள் கையெறி குண்டுகளை பூர்வாஞ்சலின் தன்ஜி கும்பலுக்கு விற்க முயன்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர. கைது செய்யப்பட்ட 6 பேரும் மகேஷ் ரஜ்பர், நவீன் பஸ்வான், அபிஷேக் சிங், ரோகன் ராஜ்பர் மற்றும் ராகேஷ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் காஜிபூரில் வசிப்பவர்கள். சென்னையில் பணிபுரியும் காஜிபூரைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் கையெறி குண்டுகளை தன்னிடம் […]
உ.பி: போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட தலித் நபர்.. உடலும் வலுக்கட்டாயமாக எரிப்பு!
உத்தரபிரதேசத்தின் ஃபரூகாபாத் பகுதியைச் சேர்ந்த 35 வயதான தலித் கௌதம், ஜூன் 24 அன்று இரவு அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ஃபரூகாபாத் மாவட்டம் மேராபூர் காவல் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக மது விற்பவர்களை பிடிக்கவே போலீசார் கவுதமின் வீட்டை சோதனையிட சென்றதாக போலீசார் தெரிவித்தனர். பெரும் போராட்டத்திற்கு பிறகே எஃப்ஐஆர் : ஆரம்பத்தில் கௌதமின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல […]