டெல்லி பல்கலையில் கடந்த 26ம் தேதி CAA , NRC, NPR ஆகியவற்றை எதிர்த்து போராட்ட உரையாற்றிய எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியதாவது , ” NRC – NPR ஆகியவற்றிற்காக அதிகாரிகள் உங்களிடம் கணக்கெடுக்க வந்தால் பொய்யான பெயரையும், போலியான தகவலையும் கொடுத்து அவர்களை விரட்டிவிடுங்கள், பிறந்த சான்றிதழ், ஆதார் கார்டு, முகவரிச்சான்று, டிரைவிங் லைசன்ஸ் என எது கேட்டு வந்தாலும் அவர்களுக்கு காண்பிக்காதீர்கள். போலீசாரிடம் லத்தி அடி வாங்கவும், புல்லட்டுகளால் துளைக்கப்படவும் நாம் இங்கே […]
Author: NewsCap.in Staff
இந்து முஸ்லிம் இணைந்துவிட்டால் நாஸிகளால் என்ன செய்து விட முடியும்?- மாணவரின் மெய்சிலிர்க்க வைக்கும் பேட்டி..
இந்த பதாகையை கையிலேந்திய இரு மாணவர்கள் ஜாமியா போராட்டக்களத்தில் நின்றிருந்தனர். அவர்களை நெருங்கிய ரிப்போர்ட்டர் ஒருவர், நீங்களும் இந்து போலவே தெரிகிறீர்கள், உங்களது பதாகை அதை கூறுகிறது…! முஸ்ல்மான்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லையா? அவர்களுக்காக எதற்கு இந்த அரசு மீதான எதிர்ப்பு? — என்ற கேள்விக்கு அந்த மாணவர் கூறிய பதில். ( மெய்சிலிர்க்க வைக்கிறது) இந்த ஜாமியாவில் எனது அப்பா-அம்மா படித்த அதே டிபார்ட்மெண்ட் பேராசிரியர்களிடம் தான் நாங்களும் தற்போது பாடம் கற்கிறோம், சிலர் இடம் மாறிப்போயிருந்தாலும், […]
CAAக்கு எதிராக கருத்து: உபியில் 124 பேர் கைது 19,000 சமூகவலைத்தள கணுக்குகள் ரிப்போர்ட்!
தலைமை பூசாரி யோகி ஆதித்யநாத் ஆளும் உபி மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 20,000 இணையதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, அதில் 181 யூடியூப் புரோபைல்களை முற்றிலுமாக அழித்துள்ளது. இதுவரை 9,372 ட்விட்டர் பதிவுகளும், 9,856 முகநூல் பதிவுகளும் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளன. போராட்டகாரர்களுக்கு ஆதரவாகவும் அரசுக்கு எதிராகவும் பதிவிட்டதால் 124 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இன்னும் 93 பேர் மீது FIR பதிந்துள்ளது. 19,000 சமூகவலைதள கணக்குகள் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளது. யோகியின் தலைமையிலான போலீசாரால் […]
உபி :பொது சொத்துக்களை சேதப்படுத்தாமலும் ரூ.6.27 லட்சத்தை வழங்கிய முஸ்லிம்கள். பயனளிக்கும் செயலா ?
உபியில் கலவரத்தை ஏற்படுத்தியது, அர்த்த ராத்திரியில் முஸ்லிம் வீடுகளில் புகுந்து பொருட்களை தாக்கி உடைத்து நகையும் பணமும் கொள்ளையடித்துப்போன காவிவல்துறை பற்றி காட்டுத்தீயாய் செய்திகள் உலாவரும் நிலையில்…. கலவரத்தை ஏற்படுத்தியமைக்காகவும் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதற்காகவும் மீரட் புலந்த்சாஹர் முஸ்லிம்கள் சிலர் சேர்ந்து யோகி அரசுக்கு ரூ.6.27 லட்சத்தை வழங்கியுள்ளனர். பொது சொத்தை சேதப்படுத்தினர் என கூறி சொத்துக்களை பறிமுதல் செய்ய யோகி அரசு பழிவாங்கும்(யோகியே சொன்ன வார்த்தை) நடவடிக்கை எடுத்து வரும் வேலையில் முஸ்லிம்கள் இவ்வாறு பணத்தை வசூலித்து […]
கேரள தேவாலயத்திற்குள் முஸ்லிம்களை போல் ஆடை அணிந்து CAA எதிர்ப்பு: விழித்தெழும் பழைய இந்தியா!
சுமார் 62 லட்சம் கிறுஸ்தவ ஜனத்தொகையை உடையது கேரளம். 3.34 கோடி மக்களில் அவர்கள் மூன்றாவது பெரிய மக்கட்தொகையுடைய குடிமக்களாக அங்கு வாழ்கின்றனர். இந்திய அரசு அறிவித்திருக்கும் குடியுரிமை சட்டத்திருந்த்த்திற்கு தங்களது ஆதரவு இல்லை என்பதை அவர்கள் வித்யாசமான முறையில் வெளிப்படுத்தி தங்களது தொப்புள்கொடி உறவுகளான முஸ்லிம்களுக்கு அனுசரணை செய்துள்ளனர். கடந்த வாரம் 22ந்தேதி- Catholic Bishops’ Conference of India (CBCI) சார்பாக ஒரு நிகழ்ச்சியில், “ஒருவரது குடியுரிமை அவரது சாதி,மதம் சார்ந்த அடையாளப்படுத்தப்பட கூடாது” […]
அஸ்ஸாம் :NRC குடியுரிமையை நிரூபித்த 426 முஸ்லிம் குடும்பத்தினர் வீடுகள் தகர்ப்பு,விரட்டியடிப்பு – பாஜக எம்எல்ஏ அராஜகம் ?
http://jamaateislamihind.org/eng/jamaat-provides-the-healing-touch-to-evicted-people-of-chotia-assam/
CAA – NRC போராட்டக்களத்தில் பங்கெடுத்த நார்வே சுற்றுலாப்பயணி வெளியேற்றம் !
இந்திய ஒன்றியம் கொண்டுவந்த CAA – NRC சட்டங்களுக்கு எதிரான அமைதி பேரணியில் கலந்துகொண்ட காரணத்திற்காக நார்வே நாட்டு சுற்றுலாப்பயணி ஜேன் மேட்டி ஜோஹன்ஸன் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இவர் கடந்த அக்டோபரில் டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்து கொச்சியில் தங்கியுள்ளார். மக்கள் நடத்திய பேரணியில் அவரும் ஆர்வத்துடன் பதாகை ஏந்தி கோஷங்களை எழுப்பியுள்ளார். அவரது பேஸ்புக் தளத்திலும் தாம் பங்குபெற்ற பேரணி பற்றிய படங்களை பதிவேற்றியுள்ளார். இதனை அறிந்து இந்திய அரசு இவரை […]
அன்புள்ள இந்துத்துவர்களுக்கு ஹிட்லர்,ஒசாமா மேலுள்ள வெறுப்பு சாவர்க்கர், ஹெட்கேவார் மீது ஏன் இல்லை? – ஸ்ரீதர் சுப்ரமணியம்
அன்புள்ள இந்துத்துவர்களுக்கு, எல்லா அடிப்படைவாதத்துக்கும் ஒரு நியாய தர்மம், ஒரு ஆறாத வடு இருக்கும். குற்றங்களில் ஈடுபடும் எல்லா ஹீரோவுக்கும் பிளாஷ்பேக்கில் ஒரு அநீதி இருப்பது போல. ஒசாமா பின் லாடன் ஒன்றும் ரேபிஸ் வியாதி பீடித்து இரட்டை கோபுரத்தை தகர்க்கவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய வெறியாட்டங்கள், ஆடிய இரட்டை வேடங்கள் ஏற்படுத்திய பாதிப்பின் பின்னணியில் வலுவான ஒரு கோபம் இருக்கிறது. அதே போல யூதர்களுக்கு எதிரான கோபங்களும் வெறுப்புகளும் நூற்றாண்டுகளாகவே ஐரோப்பாவில் இருந்தன. பன்றியின் […]
நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கடும் கணடனம்!
நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் CAAவை விமர்சித்து பேசி இருக்கிறார். ‘சுமார் 20 கோடிப்பேரிடம் “உங்கள் மதம் இதர மதங்களுக்கு சமமானதில்லை,” என்று சொல்வது தேச ஒற்றுமைக்கு ஆபத்தான விஷயம்,’ என்று கூறி இருக்கிறார். ‘நான் அந்நிய நாட்டில் வசித்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை பேசும் இந்தியா பற்றிய பெருமையில் வாழ்பவன். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று மனதார விரும்புபவன்,’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். பாகிஸ்தானில் முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவார்களா என்று மக்களவையில் அமித் ஷா […]
உபி : முதியவரை தாக்கி, வீட்டு பொருட்களை உடைத்து, நகை, பணத்தை திருடி சென்ற போலீசார் !
முஸ்லிம்கள் மீது தொடரும் யோகியின் பழிவாங்கும் படலம்? முஸாஃபர்நகரில் மரக்கடை வியாபாரம் நடத்தி வருபவர் 72 வயது ஹாஜி ஹமீத் ஹஸன். கடந்த வெள்ளியன்று அவரது வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் உபி போலீசார். இரவு 11 மணியளவில் , 8 வயது பேரனுடன் உறங்கிக்கொண்டிருந்த அவருக்கு வாயிலில் ஏதோ சத்தம் கேட்டு விழிப்புத்தட்டியுள்ளது. படுக்கையைவிட்டு எழுந்து பார்த்த போது 30 போலீசார், யூனிபார்மிலும் , மஃப்டியிலுமாக நின்று வீட்டின் கேட்டை உடைத்து , பெரிய சுத்தியலை […]
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி: உடனடி நடவடிக்கை தேவை – தொல்.திருமா வலியுறுத்தல்!
மத்திய அரசு மக்கள் நலனை கருத்தில்கொண்டுபொருளாதார கொள்கை முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டும்!- தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் இந்தியப் பொருளாதாரம் சரிவில் சென்றுக் கொண்டிருப்பதாகவும் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் 4.5% ஆக குறைந்திருப்பதாகவும் சர்வதேச செலாவணி நிதியம் (INTERNATIONAL MONETARY FUNDS) அறிவித்துள்ளது. மேலும், இந்த பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தி சீராக்குவதற்கு உடனடியாக அரசு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறது. இந்தியப் பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி 189 நாடுகளை உறுப்புநாடுகளாக […]
சூரிய கிரகணம்: சிறுவர்களை மண்ணில் புதைத்து சித்திரவதை !
இன்று இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சூரிய கிரகணம் தெரிந்தது. சூரிய கிரகணம் என்பது ஒரு விஞ்ஞான நிகழ்வே,ஆனால் இதையொட்டி பல்வேறு மூட நம்பிக்கையில் ஊறியவர்களாக மக்களை காண முடிகிறது. கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது, பயணம் செய்யக்கூடாது போன்ற மூட நம்பிக்கைகளாவது ஜீரணிக்க முடிகிறது. ஆனால் கர்நாடகாவில் காலாபுராகி பகுதியில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிலரை கழுத்து/தலை மட்டும் வெளியே தரும் விதத்தில் பெற்றோரே மண்ணில் புதைத்து சித்திரவதை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுளளது. கலாபுராகி நகரத்தின் புறநகரில் […]
ஏழை தாயின் மகன்: ரூ 1.5 லட்சம் மதிப்பில் கண்ணாடியா?
பிரதமர் மோதி இன்று சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக முயற்சி மேற்கொண்டதாகவும் எனினும் மேகமூட்டத்தால் அவரால் பார்க்க முடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் ஸ்டைல் ஆக நின்று போஸ் கொடுக்கும் கண்ணாடியின்(Maybach) மதிப்பு 2159 டாலர்(USD) என தெரியவந்துள்ளது. இந்திய மதிப்பில் ஒரு 1.5 லட்சத்திற்கும் மேல் (1,54,313.01) . நான் ஒரு பக்கீர் என்று மேடை தோறும் பேசி கொண்டு மறுபுறம் மக்கள் வரி பணத்தில் லட்ச ருபாய் […]
உபி : 7 மாத குழந்தைக்கு பால் வாங்க சென்ற அனஸை (21) சுட்டு கொன்ற போலீஸ்- அராஜக வெறியாட்டம்!
யோகி அரசின் வன்முறை வெறியாட்டம்? உபியின் பிஜ்னோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று உபி போலீசாரால் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களை பற்றிய விபரங்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகி வருகிறது. வீடியோ ஆதாரங்களை பார்க்கவும், பத்திரைகைகள் வெளியிடும் தரவுகளையும் படிக்கும் போதும் மனம் பதறுகிறது. டிசம்பர் 20 , அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவினை எதிர்த்து முஸ்லிம்கள் கூட்டமாக காந்தி சிலை முன்பு குழுமினர். அங்கிருந்து மக்களின் அணிவகுப்பு தொடர்ந்தது அதனை தடுத்து […]
உபி : ‘ஜெய் ஸ்ரீ ராம் என கத்திக்கொண்டு அலிகார் பல்கலை மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்’ : உண்மை கண்டறியும் குழுவின் கூட்டறிக்கை வெளியீடு!
ஜாமியா போராட்டத்தை போலவே வீரியம் பெற்ற அலிகார் மாணவர் போராட்டம், அங்கு உபி போலீசாரால் அரங்கேற்றப்பட்ட வன்முறை வெறியாட்டம் தொடர்பான செய்திகள் ஊடகங்களால் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்டுள்ளது. மாணவர்களை தேடித்தேடி தாக்கிய போலீசாரும் ஆர்ஏஎஃப் எனப்படும் ராபிட் ஆக்ஷன் ஃபோர்ஸும் , ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்களை எழுப்பியவாறு தாக்கியதாக மாணவர்கள் மற்றும் சம்பவத்தை நேரே கண்ட பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்னர் டெல்லி ஜாமியா மிலியாவில் தொடங்கிய பாஜக அரசின் […]