CAA Muslims Uttar Pradesh

உபி :பொது சொத்துக்களை சேதப்படுத்தாமலும் ரூ.6.27 லட்சத்தை வழங்கிய முஸ்லிம்கள். பயனளிக்கும் செயலா ?

உபியில் கலவரத்தை ஏற்படுத்தியது, அர்த்த ராத்திரியில் முஸ்லிம் வீடுகளில் புகுந்து பொருட்களை தாக்கி உடைத்து நகையும் பணமும் கொள்ளையடித்துப்போன காவிவல்துறை பற்றி காட்டுத்தீயாய் செய்திகள் உலாவரும் நிலையில்…. கலவரத்தை ஏற்படுத்தியமைக்காகவும் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதற்காகவும் மீரட் புலந்த்சாஹர் முஸ்லிம்கள் சிலர் சேர்ந்து யோகி அரசுக்கு ரூ.6.27 லட்சத்தை வழங்கியுள்ளனர்.

பொது சொத்தை சேதப்படுத்தினர் என கூறி சொத்துக்களை பறிமுதல் செய்ய யோகி அரசு பழிவாங்கும்(யோகியே சொன்ன வார்த்தை) நடவடிக்கை எடுத்து வரும் வேலையில் முஸ்லிம்கள் இவ்வாறு பணத்தை வசூலித்து கொடுத்துள்ளது, இந்த பணத்தை பெற்று கொண்டாவது முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விட்டுட மாட்டார்களா எனும் எண்ணத்தில் தான் என்றே தெரிகிறது. ஏனெனில் இதுவரை வெளியான வீடியோக்களில் எங்குமே முஸ்லிம்கள் பொது சொத்தை சேதம் செய்ததாக பதிவானதாக தெரியவில்லை. எனினும் போலீசார் பொது சொத்துக்களை சேத படுத்தும் வீடியோக்கள் பல நம்மால் காண முடிகிறது.

காசோலை டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட் ரவீந்திர குமாரிடம் வழங்கப்பட்டது.

ஆனால் ஆளுங்கட்சியே முன்னின்று முஸ்லிம்கள் மீது தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் பரப்பி வரும் வரை ராமர் கோயில் கட்ட இஸ்லாமியர் பணம் கொடுப்பது, சேத படுத்தாத பொது சொத்துக்களுக்கு வலிய வந்து பணம் கொடுப்பது போன்ற இவ்வாறான செயல்கள் எல்லாம் பயன் அளிக்காது என்பதை முஸ்லிம் சமூகம் உணர்வதாக தெரியவில்லை.