CAA Christians Kerala

கேரள தேவாலயத்திற்குள் முஸ்லிம்களை போல் ஆடை அணிந்து CAA எதிர்ப்பு: விழித்தெழும் பழைய இந்தியா!

சுமார் 62 லட்சம் கிறுஸ்தவ ஜனத்தொகையை உடையது கேரளம். 3.34 கோடி மக்களில் அவர்கள் மூன்றாவது பெரிய மக்கட்தொகையுடைய குடிமக்களாக அங்கு வாழ்கின்றனர். இந்திய அரசு அறிவித்திருக்கும் குடியுரிமை சட்டத்திருந்த்த்திற்கு தங்களது ஆதரவு இல்லை என்பதை அவர்கள் வித்யாசமான முறையில் வெளிப்படுத்தி தங்களது தொப்புள்கொடி உறவுகளான முஸ்லிம்களுக்கு அனுசரணை செய்துள்ளனர்.

கடந்த வாரம் 22ந்தேதி- Catholic Bishops’ Conference of India (CBCI) சார்பாக ஒரு நிகழ்ச்சியில், “ஒருவரது குடியுரிமை அவரது சாதி,மதம் சார்ந்த அடையாளப்படுத்தப்பட கூடாது” என்பதனை முதன்மை கருத்தாக வைத்தனர். மறுநாள் மறுநாள் கொளஞ்சேரி மர் தோமா சர்ச் மற்றும் புனித தோமா சர்ச் சார்பில் கிறிஸ்துமஸ் பாடல்கள் இசைக்கப்படும் கச்சேரி நடத்தப்பட்டது அதில் ஆண் பாடகர்கள் முஸ்லிம்கள் அணியும் தொப்பியுடனும் பெண் பாடகர்கள் தலையில் ஹிஜாப் அணிந்தும் இஸ்லாமிய மாப்பிளா பாடல்களை பாடி முஸ்லிம்களுக்கான தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

இதுபற்றிய விபரங்களை கூறிய டேனியல் .டி. பிலிப் என்ற பாதிரியார் கூறுகையில் , CAA சட்டத்தினை அஸாமில் அமல்படுத்தியது போக ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அமல்படுத்தவிருப்பதாக அமித்ஷா தெரிவித்திருப்பது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது. பல்வகை மதமும் பல்வகை இனமும் சேர்ந்து வாழும் இந்த நாட்டில் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து NRC பட்டியல் தயாரித்து அவர்களை நாடில்லாதவர்களாக மாற்ற நினைப்பது கைவிடப்பட வேண்டியது.

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் மோடி கூறியது போல இது இந்திய முஸ்லிம்களை பாதிக்காது என்கிற வாக்குறுதிகளை அவர்கள் காப்பாற்ற வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் வைக்கின்றோம் என்றார்.

தமிழகத்திலும் கிருஸ்துவ திருச்சபைகள் சிஏஏ வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.