கடந்த ஜனவரி 20 திங்கள் நள்ளிரவில் பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூரு தேவாலயம் ஒன்றிற்குள் புகுந்த பாசிச கும்பல் ஒன்று தேவாலயத்தை சூறையாடியுள்ளது. அடையாளம் காணப்படாத சிலர் கெங்கேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செயின்ட் பிரான்சிஸ் ஆஃப் அசிசி தேவாலயத்தை சூறையாடியுள்ளனர். எனினும் இது பரவலாக மீடியாக்களில் வெளியாகாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது. “இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. தேவாலயத்தின் புனிதத்தை அழிக்கும் நோக்கிலும், இயேசுவை இழிவுபடுத்தும் நோக்கி லும் இப்படி செய்யப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த […]
Author: NewsCap.in Staff
கேரளா: நாளை 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்; 620 கி.மீ நீளமுள்ள மாபெரும் மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு !
நாளை குடியரசு தினத்தன்று கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) கூட்டணி கட்சிகளின் சார்பில் மனுஷ்ய மஹா ஸ்ரீங்கலா என்ற பெயரில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை மாபெரும் மனித சங்கிலியை அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 620 கி.மீ மனித சங்கிலி : கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களின் வழியாக 620 கி.மீ மனித சங்கிலி அமைக்கப்பட்டும். வடக்கே காசர்கோடு தொடங்கி தெற்கு கேரளாவின் திருவனந்தபுரம் வரை […]
“அவல் பொரி சாப்பிட்டதால் பங்களாதேஷியாக இருக்கலாம் என முடிவு செய்தேன்” – பாஜக தேசிய பொதுச் செயலாளர் விஜயவர்ஜியாவின் அறிவு கூர்மை!
அண்மையில் தனது வீட்டில் பணிபுரிந்த கட்டுமானத் தொழிலாளர்களில் சிலர் பங்களாதேஷிகளாக இருக்கலாம் என தான் சந்தேகித்ததாக பாரதீய ஜனதா தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா வியாழக்கிழமையன்று கருத்து தெரிவித்தார். பாஜக தலைவர் விஜயவர்ஜியாவின் அறிவு கூர்மை: அவர்களின் “விசித்திரமான” உணவுப் பழக்கம் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என சந்தேகத்தைத் தூண்டியது என்று பாஜக பொதுச் செயலாளர் விஜயவர்ஜியா குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) ஆதரவாக நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் கூறினார். சமீபத்தில் அவரது வீட்டின் புதிய […]
ஆதார் எண்களை வாக்காளர் அட்டையுடன் இணைக்க சட்ட அமைச்சகம் அனுமதி !
ஆதார் எண்களுடன் வாக்காளர் அட்டைகளை இணைப்பதற்கான பணியை மீண்டும் துவக்குவதற்கான சட்ட அதிகாரங்களைக் கோரி தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்தை நாடியுள்ளது. அதனை தொடர்ந்து இந்த கோரிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்று கொண்டுள்ளதாகவும், எனினும் தரவுகளின் “திருட்டு, இடைமறிப்பு மற்றும் ஹைஜேக்” ஆகியவற்றைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆதார் எண்ணை வாக்காளர் எண்ணுடன் இணைக்க அனுமதி கோரி கடிதம்: கடந்த ஆகஸ்ட் […]
‘நான் இந்துத்துவாவை விட்டுவிடவுமில்லை, எனது நிறத்தை மாற்றி கொள்ளவுமில்லை’- உத்தவ் தாக்ரே அறிவிப்பு!
சிவ சேனா கட்சி நிறுவனர் மறைந்த பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சிவசேனா கட்சி கட்சியினரிடம் உரையாற்றினார் உத்தவ் தாக்கரே. நமது பழைய கூட்டாளிகள் நம்மை முதுகில் குத்திவிட்டனர். நான் இந்துத்துவா கொள்கையை விட்டுவிடவில்லை. எனது நிறத்தையும் மாற்றி கொள்ளவில்லை என அவர் பேசியுள்ளார். பாஜகவின் நம்பிக்கை துரோகம்: “நம் பழைய கூட்டாளிகள் நமது முதுகில் குத்திவிட்டதால் தான் நாம் இந்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அவர்கள் […]
‘சிஏஏ சட்டம் மாற்றப்படவில்லை என்றால் கட்சியில் இருக்க மாட்டேன்’ ; நேதாஜி சிலையில் பாஜக கொடி வைக்கப்பட்டதற்கும் கண்டனம் – நேதாஜி பேரன் அறிவிப்பு !
நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் அவர்களின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு அவரது பேரன் சந்திர குமார் போஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின் சிஏஏ சட்டம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய திரு.போஸ் சிஏஏ சட்டத்தை மாற்றவில்லை என்றால் பாஜக கட்சியில் நீதிபதி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் நேதாஜி சிலையின் புகைப்படம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தது. பாஜக வை விட்டு […]
‘இந்து மகாசபாவின் பிரிவினைவாத அரசியலை எதிர்த்தவர் நேதாஜி’ – மம்தா பானர்ஜி புகழாரம் !
இன்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 123 வது பிறந்த நாளை கொண்டாடும் நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு கீழ்கண்ட கருத்துக்களை தெரிவித்தார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்து மகாசபாவின் “பிரிவினைவாத அரசியலை” எதிர்த்ததாகவும், மதச்சார்பற்ற மற்றும் ஒன்றுப்பட்ட இந்தியாவுக்காக போராடியதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். நேதாஜிக்கான சிறந்த அஞ்சலி: நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிய திருமதி பானர்ஜி, சுபாஸ் […]
மறக்க வேண்டியதை ரஜினிகாந்த் நினைவூட்டியது ஏன்? – வைகோ கேள்வி !
பெரியார் விவகாரம் என்பது மறக்க வேண்டியது என கூறிவிட்டு, அதனை ரஜினி நினைவூட்டியது ஏன்? என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார். தந்தை பெரியார் ஆற்றிய அருந்தொண்டிற்காக ஐ.நா.வின் அனைத்து நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம், யுனெஸ்கோ மன்றம் (UNESCO) 1970 ஆம் ஆண்டு பெரியாருக்குச் சிறப்பு விருது வழங்கி கவுரப்படுத்தியது. அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடந்த விழாவில், மத்திய அரசின் கல்வி அமைச்சர் டாக்டர் திரிகுணசென் […]
பாதிரியார் மற்றும் அவரது 2 மகன்களும் பாசிச பயங்கவாதிகளால் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட நாள் இன்று!
வரலாற்றில் இன்று கிரஹாம் ஸ்டேன்ஸ் பாதிரியாரும் அவரது இருகுழந்தைகளும் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட நாள் ஜனவரி 22, 1999 என்ற விஷயம் எத்தனை நபர்களுக்கு தெரியும் ..! ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்துத்துவ பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று… அம்மாநிலத்தில் கிறித்துவ மதத்தையும் பரப்பி கொண்டு பல்வேறு மக்கள் தொண்டுகளையும் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் […]
சென்னையில் தமிழரை காணோம் – பான்பராக் வாய்களால் நிறம்பிவிட்ட மாநகரம்!!
சென்னையில் எங்கு பார்த்தாலும் வடநாட்டுக்காரர்கள் தான் எனும் அளவிற்கு தற்போது நிலைமை உள்ளது . அவர்களுடைய அங்க அடையாளங்கள் வைத்து இவர்கள் தமிழர்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கடைத்தெருக்களில் காய்கறி மார்கெட்களில் பெண்களை இடித்து நகட்டிக்கொண்டு சாதாரணமாக போகிறார்கள். யாருக்கும் அடுத்த பெண்களை இடிக்கிறோம், நெருக்கமாக முட்டுவது போல நடக்கிறோம் என்கிற அக்கறையே இல்லை. காய்கறி மார்க்கெட்டில் ஒரு பெண் கூறுகிறார்….யப்பா…இதுங்க தொல்ல தாங்கல….ரேசன் கடை போனாலும் இதுங்கதான், குழாயடிக்கு போனாலும் இதுங்கதான் –என்ற சலிப்பு […]
கேரளா: குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி கைது !
கடந்த வாரம் கேரளாவின் கதிரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னியம் நயனார் சாலையில் அமைந்துள்ள காவல் சோதனை சாவடி மீது வெடிகுண்டு வீசிய குற்றத்தின் பேரில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கை சேர்ந்த கே.பிரபேஷை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கேரளாவில் உள்ள மலால் பகுதியை சேர்ந்த அவர் சம்பவத்தன்று வெடிகுண்டை வீசிவிட்டு கோவையில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் பதுங்கி உள்ளார். வெடிகுண்டு வீசிய தீவிரவாதியை தேடி வந்த திரு.நிஜீஷ் தலைமையிலான போலீசார் தீவிரவாதி பிரபேஷை அவரது […]
மைசூருவின் முதல் முஸ்லிம் பெண் மேயரானார் தஸ்னீம் சமியுல்லாஹ்!
மைசூர் மாநகராட்சியின் 158 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக முஸ்லீம் பெண் மேயராக தேர்வாகியுள்ளார் தஸ்னீம், வயது 33. மைசூர் நகரத்தின் மிக இள வயது மேயர் என்ற பெருமையும் பெறுகிறார் தஸ்னீம் . பிஏ பட்டதாரியான இவர், மைசூருவின் மகாராணி கல்லூரியில் பயின்றவர் இவரது கணவர் சமியுல்லாஹ், மீனா பஜாரில் எம்பிராய்டரி தொழில் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். தஸ்னீம் தந்தை, முனவ்வர் பாஷா, தையல்காரர் மற்றும் தாய், தஹ்ஸீன் பானு, […]
டெல்லி ஷஹீன்பாக்: வயசானாலும் வீரம் குறையாத புரட்சி பெண்கள்!
டெல்லி ஷஹீன்பாக்கில் சிஏஏ , என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தை வழிநடத்தும் அஸ்மா காத்தூன் (90), பில்கீஸ் (82), சர்வாரி (75) ஆகிய மூன்று பாட்டிகளை கண்டு இன்று உலகமே வியப்பில் உள்ளது. நாங்கள் காந்தியின் வாரிசுகள்: “ராணிகளே, தேசமக்களின் தாய்மாரே, வீரர்களின் மனைவிகளே ஈமானின் நல்வாழ்த்து பெற்ற நீங்கள் இந்த பூமியின் ஆசிர்வாதம் ஆவீர்கள்” — என்கிற 1905ம் ஆண்டு சுதந்திர போராட்டக்களத்தில் நெஞ்சுரத்துடன் களமிறங்கிய பெண்களை கண்ணியப்படுத்தும் விதமாக மௌலானா அல்தாப் ஹுசைன் […]
மங்களூர் வெடிகுண்டு சம்பவம்: முஸ்லிம்கள் மீது பாஜக மற்றும் ஊடகங்கள் பழி சுமத்தி வந்த நிலையில் தீவிரவாதி ஆதித்யா ராவ் சரண்!
கடந்த திங்கட்கிழமையன்று மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் வெடி பொருட்களைக் கொண்ட பையை கண்டெடுத்தார். பின்னர் அதை ஆளில்லா இடத்தில் பாதுகாப்பான முறையில் அதிகாரிகள் வெடிக்க செய்தனர். ஊடக பயங்கரவாதம்: ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. குண்டு வைத்த தீவிரவாதியின் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பாகின. இதை செய்துள்ளது முஸ்லிம்கள் என்ற தொனியில் வழக்கம் போல தங்கள் மறைமுக சமிக்ஞைகள் மூலம் விஷம […]
கர்நாடகா : ‘மதம் மாறுங்கள்’ – பள்ளிவாசல்களுக்கு அனுப்பட்ட மிரட்டல் கடிதங்கள்!
கடந்த சனிக்கிழமையன்று கர்நாடக மாநிலத்தின் ஹஸ்ஸான் மாவட்டத்தில் உள்ள பல்வேரு பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு அச்சுறுத்தும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக எம்எல்ஏக்கள் பெயர் குறிப்பிட்டு கடிதங்கள்: ஹசன், அர்சிகேர், சக்லேஷ்பூர் மற்றும் பேலூரில் பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு இதுபோன்ற அநாமதேய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.கடிதங்களில் பெல்லாரி பகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ சோமாஷேகர ரெட்டி மற்றும் விஜயநகர பாஜக எம்.எல்.ஏ ஆனந்த் சிங் ஆகியோரின் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடிதத்தில் ஒரு குறிப்பிட்ட […]