Karnataka Muslims

மைசூருவின் முதல் முஸ்லிம் பெண் மேயரானார் தஸ்னீம் சமியுல்லாஹ்!

மைசூர் மாநகராட்சியின் 158 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக முஸ்லீம் பெண் மேயராக தேர்வாகியுள்ளார் தஸ்னீம், வயது 33. மைசூர் நகரத்தின் மிக இள வயது மேயர் என்ற பெருமையும் பெறுகிறார் தஸ்னீம் .

பிஏ பட்டதாரியான இவர், மைசூருவின் மகாராணி கல்லூரியில் பயின்றவர் இவரது கணவர் சமியுல்லாஹ், மீனா பஜாரில் எம்பிராய்டரி தொழில் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். தஸ்னீம் தந்தை, முனவ்வர் பாஷா, தையல்காரர் மற்றும் தாய், தஹ்ஸீன் பானு, ஒரு இல்லத்தரசி ஆவர்.

பாஜக வேட்பாளரை தோற்கடித்த தஸ்னீம்:

முன்னாள் மேயர் பிஜெபியை சேர்ந்த குரு விநாயக், சமர்பித்த சாதி சான்றிதழ் போலியானது என தெரியவந்த பிறகு அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மேயர் பதவி பிடுங்கப்பட்டது. அதற்கு பிறகு அப்பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பிஜெபி சார்பாக கிதா யோகானந்த் என்பவரும் , மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி சார்பாக தஸ்னீமும் போட்டியிட்டனர். 70 வாக்குகளையுடைய அந்த பதவிக்கு 47 வாக்குகளை பெற்று தஸ்னீம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக வேட்பாளர் கீதா யோகானந்தா 23 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

துணை மேயர் பதவிக்கு கைலாசபுரத்தை சேர்ந்த சி.ஸ்ரீதர் என்பவரும் தேர்வாகியுள்ளார். இவர் எஸ்சி கோட்டாவில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார்.

மைசூரை முதன்மை தூய்மை நகரமாக ஆக்குவேன் தஸ்னீம் பேட்டி:

மைசூரு தனது “தூய்மையான நகரம்” என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தஸ்னீம் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். “2019 தரவரிசையில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் நாங்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தாலும், இப்போது பட்டியலில் முதலிடத்தைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் பூரகர்மிகாக்கள், அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் எங்கள் குடியிருப்பாளர்களின் உதவியுடன், இந்த முறை ‘தூய்மையான நகரம்’ என்ற பட்டத்தை உறுதியாக வெல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம். இப்போதைக்கு இதற்கு தான் எனது முன்னுரிமை” என்றார் தஸ்னீம்.