Assam Floods States News

அசாம் வெள்ளத்தில் 6 பேர் இறப்பு,8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு !

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் பருவமழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் மிகப் பெரிய நகரமான குவஹாத்தி வழியாக செல்லும் உலகின் மிகப்பெரிய பிரம்மபுத்ரா நதியும், மேலும் ஐந்து இடங்களும் அபாய அடையாளத்திற்கு மேலே பாய்ந்து செல்கின்ற என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

27,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளநீருக்கு அடியில் இருப்பதாகவும், அசாம் முழுவதும் 68 நிவாரண முகாம்களுக்கு 7,000 க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

An village in Kamrup district of Assam on July 12. (Photo: IANS)

வார இறுதியில் அதிக மழை பெய்யக்கூடும் என்பதால், மாநிலம் முழுவதும் படகு சேவைகள் வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியான தேமாஜி ,லக்கிம்பூர்,பொங்கைகான் மற்றும் பார்பேட்டா ஆகிய பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. உயர்ந்த பகுதிகளில் இருந்து வெள்ள நீர் பள்ளத்தாக்குகளை நோக்கி பாய்வதால் நிலைமை இன்னும் மோசம் அடைய கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிலும் வெள்ளநீர் நுழைந்தது – வெள்ளத்தின் போது விலங்குகள் தங்கள் பாதுகாப்பிற்காக கட்டப்பட்ட தளங்களில் தஞ்சம் புகுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விலங்குகள் வெள்ளநீரைத் தவிர்த்து, உயர்ந்த மைதானங்களை அடைய, நெடுஞ்சாலையைக் கடக்க முயற்சிக்கும் என்பதால் பூங்காவிற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை செல்ல வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் துணை ஆணையர்களுடன் வியாழக்கிழமை வீடியோ கான்பிரன்சிங் மூலம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசினார். 24 மணி நேர கண்பாணிப்பு அறைகளை அமைக்கவும், அவசரகாலத்தில் உதவி கோரும் மக்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்கவும் அவர் துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டார்.

வெள்ளத்தின் மத்தியில், அசாம் அதிகரித்து வரும் என்செபலிடிஸ் நோயும் கடுமையாக பரவி வருகிறது. இதை சமாளிக்க செப்டம்பர் இறுதி வரை அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களின் விடுப்புகளையும் மாநில அரசு ரத்து செய்துள்ளது.

அசாமில் உள்ள ஒன்பது மாவட்டங்கள் என்செபலிடீஸ் நோயால் அதிகம் பாதிக்கபட்டுள்ளன. 2013 ஆண்டு முதல், 700 க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் இறந்துள்ளனர்.