States News Uttar Pradesh

உங்கள் குண்டர்களை பின்வாங்கச் சொல்லுங்கள்: பாஜக எம்எல்ஏவின் மகள் தலித் சகோதரரை மணந்த பிறகு உயிருக்கு அஞ்சி பேசும் வைரல் வீடியோ

உ .பி. மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகள் தலித் நபரை மணந்து காவல்துறையினரிடம் பாதுகாப்பு கேட்டுக் கொண்டதையடுத்து தனது தந்தையிடமிருந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பரேலி மாவட்டம் பித்தாரி செயின்பூரைச் சேர்ந்த எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்ஷி மிஸ்ரா (23). இவர் கடந்த புதன்கிழமை ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றி உள்ளார். அதில் அவர் கடந்த வியாழக்கிழமை அன்றே அஜிதேஷ்குமார் (29) என்பவருடன் தனது திருமணம் ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

மற்றொரு வீடியோவில், அவர் தனது தந்தை, சகோதரர் மற்றும் அவர்களின் மற்றொரு கூட்டாளியிடமிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இருவரும் மேஜர் என்பதால் தங்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறு பரேலி எஸ்எஸ்பியை கேட்டுக்கொண்டுள்ளார்.

தன்னை அழிக்க தனது தந்தையும் மற்றவர்களும் காத்துகொண்டு உள்ளனர். எனவே ராஜேஷ் மிஸ்ராவுக்கு உதவ வேண்டாம் என்று திருமதி ஷாக்ஷி பரேலியின் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அறிய பாஜக சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம் ஆனால் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.கே.பாண்டே, வீடியோ செய்திகளை தான் அறிந்திருப்பதாகவும், தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு எஸ்.எஸ்.பி.யிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். ஆனால் அவர் தனது இருப்பிடத்தை வெளியிடாததால் அவருக்கு எங்கு பாதுகாப்பு வழங்குவது என்பது போலீசாருக்கு தெரியாது என்று டி.ஐ.ஜி கூறினார்.

அந்த வீடியோவில், சாக்ஷி தனது தந்தையிடம் தனது வாழ்க்கையை வாழ அனுமதிக்கும்படி கூறியுள்ளார். தனக்கு அல்லது கணவருக்கு ஏதேனும் நேர்ந்தால், அவரை சிறையில் அடைக்கும் ஏதாவது ஒன்றை செய்வேன் என்று அந்தப் பெண் எச்சரித்தார். – PTI