டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு, லோதி காலனி பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) தலைமையகத்தின் கட்டுமான தளத்தில் நடந்தது.
காவல் துறையினருக்கு அழைப்பு:
கட்டிட கட்டுமான பகுதியில் இருந்து 6 வயது சிறுவனின் கழுத்தை இருவர் அறுத்து கொலை செய்து விட்டதாக டெல்லி காவல்துறைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லோதி காலனியில் ஒரு பிசிஆர் அழைப்பு வந்துள்ளது.
ஏற்கனவே சம்பவ இடத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களிடம் சிக்கிக்கொண்ட இரு குற்றவாளிகளையும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கைது செய்தனர்.
கொல்லப்பட்ட சிறுவன் அதே இடத்தில் பணிபுரியும் உத்தரபிரதேசத்தின் பரேலியை பூர்வீகமாகக் கொண்டவ தொழிலாளி ஒருவரின் மகன் என அடையாளம் காணப்பட்டது.
புகார்:
தம்பதியினர் போலீசில் அளித்த புகாரில், இரவு உணவுக்குப் பிறகு கட்டுமானப் பகுதியில் பஜனை பாடிக்கொண்டிருந்தபோது, தங்கள் மகன் காணாமல் போனதை உணர்ந்தோம். சிறுவனின் தந்தை, அருகில் உள்ள சேரிகளில் தேடிச் சென்றபோது, தரையில் இரத்தம் இருப்பதைக் கண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட விஜய் குமார் மற்றும் அமன் குமார் இருவரும் பீகாரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் அந்த இடத்தில் சிமென்ட் கட்டர்களாக வேலை செய்தவர்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இரவில் கொலை:
சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் தனது கூடாரத்துக்கு செல்லும் போது விஜய் & அமன் சிறுவனை அழைத்துள்ளனர். அவர்கள் சிறுவனை சமையல் செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்று கொலைச் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
சிவ பெருமான் கூறினார் :
சிவபெருமானின் பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு, பஜனை பாடும் பெண்களிடம் சென்று ஊதுபத்தியை கேட்டதாகவும், ஆனால் அப்பெண்கள் தர மறுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அவர்களிடம் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும், தங்கள் கூடாரத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சிவபெருமான் அவர்களிடம் சிறுவனைப் பலியிடச் சொல்வதை உணர்ந்ததாக, குற்றவாளிகள் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை:
பின்னர் அவர்கள் சிறுவனை தங்கள் கூடாரத்துக்குள் அழைத்துச் சென்று சமையலறை கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
முதற்கட்ட பொலிஸாரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் போதையில் இருந்தபோது சிறுவனின் கழுத்தை அறுத்ததாக தெரிகிறது என்றனர். குற்றம் சாட்டப்பட்டவருக்கும் சிறுவனை ஏற்கனவே நன்கு தெரியும் என்றும், குடும்பத்துடன் எந்த முன் விரோதமும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.