மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் நகரில் ஒரு கோயிலை சேதம் செய்ததாக 28 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் உண்மை நிலவரத்தை சொல்வதற்குள் பாசிச பயங்கரவாதிகள் இதை செய்தது முஸ்லிம்கள் தான் என்ற ரீதியில் பொய் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு சிவன் சிலைகள் இடம்பெயர்க்கப்பட்டதாகவும், கற்கள் மற்றும் செங்கற்கள் கோயிலில் பரவலாக கிடந்ததாகவும் கூறி, பாசிம் பூரியில் உள்ள வைஷ்ணோ மாதா கோயில் அர்ச்சகர் ரஞ்சீத் ஃபதக் (47) என்பவரிடமிருந்து சனிக்கிழமை காலை காவல் நிலைய கட்டுப்பட்டு அறைக்கு அழைப்பு வந்ததாக டி.சி.பி (மேற்கு) கோயல் தெரிவித்தார்.
சி.சி.டி.வி காட்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டபோது, ரகுபீர் நகரில் வசிக்கும் விக்கி மால் என அடையாளம் காணப்பட்ட ஒரு நபர் தான் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக என்று கோயல் கூறினார். அவர் நிலையான இருப்பிடம் இல்லாமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்ததும், தனக்கு இப்படிப்பட்ட நாடோடி வாழ்க்கையை வழங்கியதற்காக பழி தீர்க்கும் முகமாக கோயிலில் இவ்வாறு செய்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
“வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில், அவர் கோவிலுக்கு வந்து கற்களை வீசினார்,” என்று கோயல் கூறினார். அவரை கைது செய்த போலீசார், ஐபிசி 295 ஏ மற்றும் 457 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யது விசாரணை செய்து வருகின்றனர்.