Corona Virus Delhi Islamophobia

பாசிஸ்டுகளின் பொய் செய்திகளால் பழம், காய்கறிகளை விற்க தடை செய்யப்படும் முஸ்லிம் வியாபாரிகள்!

தப்லிகி ஜமாஅத்தினர் தான் கொரோனா வைரஸ் பரப்புகின்றனர் என்ற கருத்து கொண்ட போலி செய்திகள், வதந்திகளை தொடர்ந்து பாசிஸ்டுகள் பகிர்ந்து வருகின்றனர். இதனால் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளது.

முஸ்லிம் பழ மற்றும் காய்கறி வியாபாரிகள் எச்சில் தடவி பொருட்களை விற்பதை போன்ற போலி வீடியோக்களை பாசிச பயங்கரவாதிகள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில், தெருக்களில் விற்கும் வியபாரிகளிடம் ஆதார் அட்டை கேட்கப்பட்டு அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் விரட்டி அடிக்கப்படுகின்ற கொடூரம் அரங்கேறி வருகிறது.

டில்லி சாஸ்த்ரி நகரில் 20 க்கும் மேற்பட்டோர் ரோட்டில் நாற்காலிகளில் அமர்ந்தவாறு நம் பகுதியில் இனி ஒரு முஸ்லிமை கூட காய்கறி, பழங்களை விற்க அனுமதிக்கக்கூடாது , இதற்காக அனைவரிடமும் ஆதார் கேட்போம் என பேசி கொள்ளும் வீடியோ வைரல் ஆகி உள்ளது.

இந்த காணொளி பதிவு செய்யப்படும் போதே இரு தள்ளுவண்டி வியாபாரிகள் வருகின்றனர் அவர்களை மிரட்டி, ஆதார் கார்ட் கேட்கின்றனர் அவர்கள்.

இதனால் அங்கு முஸ்லிம் பழ மற்றும் காய்கறி வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனினும் காணொளி வைரல் ஆகியும் கூட இது வரை எந்த ஒரு வழக்கும் பதியப்பட வில்லை.

கொரோனா பரவி வரும் நிலையிலும் பாசிஸ்டுகள் இந்து முஸ்லிம்கள் என பிரிவினை உண்டாக்கி , சைக்கோ வேலையில் ஈடுபட்டு வருவது கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரை பலஹீனமடையவே செய்யும். பக்தால்கள் உணருவார்களா?