உபி: கியான்வாபி பள்ளிவாசலில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு; செலவை அரசு ஏற்குமாறு தீர்ப்பு.
Indian Judiciary Muslims Uttar Pradesh

உபி: கியான்வாபி பள்ளிவாசலில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு; செலவை அரசே ஏற்குமாறும் உத்தரவு!

உபி காஷி விஸ்வநாத் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி பள்ளிவாசலில்இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ஏ.எஸ்.ஐ) ஆராய்ச்சி செய்திட வாரணாசி சிவில் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2000 ஆண்டு பழமையான காஷி விஸ்வநாத் கோயிலின் ஒரு பகுதியை 1669 ஆம் ஆண்டில் கியான்யாபி மசூதியைக் கட்டுவதற்காக முகலாய பேரரசர் அவுரங்கசீப் இடித்ததாக எந்த ஒரு ஆதாரமுமின்றி இந்துத்துவாவினர் கூறி வருகின்றனர், இந்நிலையில் கியான்வாபி மசூதி அமைந்துள்ள மீட்டெடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. “… மேற்கண்ட கியான்வாபி நிலத்தின் நடுவில், […]

என்.சி.பி.யூ.எல் மூலம் ஆர்எஸ்எஸ் தலைவரின் புத்தகம் வெளியீடு; உருது அறிஞர்கள் முன்னால் கவுன்சில் தலைவர்கள் கண்டனம் !
Minority RSS

என்.சி.பி.யூ.எல் மூலம் ஆர்எஸ்எஸ் தலைவரின் புத்தகம் வெளியீடு; உருது அறிஞர்கள் முன்னால் கவுன்சில் தலைவர்கள் கண்டனம் !

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் அனைத்துப் பணியாளர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என உருது மொழி ஊக்குவிப்பிற்கான தேசிய கவுன்சில் (என்.சி.பி.யூ.எல்) உத்தரவிட்டுள்ளது. மோகன் பகவத் எழுதியுள்ள ’முஸ்தக்பில் கா பாரத்’ புத்தகத்தின்  உருது பதிப்பு வெளியிடுட்டு விழாவில் கலந்து கொள்ள பணியாளர்க்ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கலந்து கொள்ள தவறுபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்ச் 31 ஆம் தேதி மத்திய உயர் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஏப்ரல் […]

Election Commission Maharashtra Shiva sena

‘நாட்டில் தேர்தல் ஆணையம் செத்துவிட்டது அல்லது பாஜக அரசாங்கத்தின் சார்பாக செயல்படுகிறது’ – சிவசேனா கடும் விமர்சனம் !

சிவசேனா தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது 2 குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளது. அசாமில் பாஜக வேட்பாளரின் காரில் ஈ.வி.எம் கண்டெடுக்கப்பட்டது குறித்தும் அஸ்ஸாம் அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் 24 மணி நேரமாக தேர்தல் ஆணையம் குறைத்து அறிவித்தது ஆகிய இரண்டு விஷயங்களை சாம்னா எழுப்பியுள்ளது. சாம்னா தலையங்கத்தில், தேர்தல் ஆணையம் நாட்டில் இறந்துவிட்டது அல்லது […]

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உபி அரசு தவறாகப் பயன்படுத்துவதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு; 120 தேச துரோக வழக்கில் 94 வழக்குகள் ரத்து!
Indian Judiciary Uttar Pradesh

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உபி அரசு தவறாகப் பயன்படுத்துவதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு; 120 தேச துரோக வழக்கில் 94 வழக்குகள் ரத்து!

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை (என்.எஸ்.ஏ) உபி அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவல்துறை மற்றும் நீதிமன்ற ஆவணங்களை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்ததில், ஜனவரி 2018 முதல் 2020 டிசம்பர் வரையிலான காலத்தில் பதியப்பட்ட 120 வழக்குகளில் 94 வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கண்டறிந்துள்ளது. மொத்த வழக்குகளில் 41 தேச துரோக வழக்குகள், பசுவதை தொடர்பாகப் பதியப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்குகள் அனைத்தும் சிறுபான்மையினர் மீது பதியப்பட்டிருப்பதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. […]

gujart model
BJP Gujarat

குஜராத் : குப்பை லாரியில் வெண்டிலேட்டர்கள் எடுத்து செல்லப்பட்ட அவலம் !

குஜராத்தில் கோவிட் -19 தாறுமாறாக பரவி வரும் நிலையில், பற்றாக்குறையையின் காரணத்தால் 34 வென்டிலேட்டர்கள் குப்பை லாரி ஒன்றில் சூரத் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. திங்களன்று முதல் முறையாக 3,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை அதிகமாகி உள்ளது. குப்பை லாரியில் வெண்டிலேட்டர் : மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்கள் (இயந்திரத்தின் காற்றுவாரி) பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு குஜராத் அரசு 34 வென்டிலேட்டர்களை வல்சாட்டில் இருந்து சூரத்துக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டது. […]

உபி: ஹோலி கொண்டாட்டத்தின் பெயரில் முஸ்லிம் குடும்பத்தார் வீட்டினுள் நுழைந்து பொருட்களை நாசம் செய்த பாசிச கும்பல் !
BJP Islamophobia Minority Muslims Uttar Pradesh

உபி: ஹோலி கொண்டாட்டத்தின் பெயரில் முஸ்லிம் குடும்பத்தார் வீட்டினுள் நுழைந்து பொருட்களை நாசம் செய்த பாசிச கும்பல் !

உபி யில் மோடியின் தொகுதியான வாரணாசியில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பாசிச கும்பல் ஒன்று ஒரு முஸ்லீம் குடும்பத்தார் வீட்டினுள் நுழைந்து, அவர்களின் வீட்டு பொருட்களையும், ஒரு சிறிய தொழிற்சாலையையும் அடித்து நொறுக்கி, அங்கு வசிக்கும் பெண்களையும் தாக்கி உள்ளனர். வீட்டில் இருந்த பணத்தையும் திருடி சென்றுள்ளனர். காவல்துறையினர் குண்டர்களுடன் பக்கபலமாக இருந்து பாதிக்கப்பட்டவர்களை மேலும் தாக்கி முஸ்லிம்கள் மீதே வழக்கு பதிவு செய்தனர் என சப்ரங் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. காவல்துறை மற்றும் சட்டத்தை […]

‘மீண்டும் 24 மணி நேரமாக உணவு வழங்கப்படவில்லை’: யோகி அரசால் கைது செய்யப்பட்டுள்ள சித்திக் கப்பனின் மனைவி வேதனை
Activists Arrests Islamophobia Journalist Muslims Uttar Pradesh

‘மீண்டும் 24 மணி நேரமாக உணவு வழங்கப்படவில்லை’: சித்திக் கப்பனின் மனைவி வேதனை ..

யுஏபிஏ குற்றம் சாட்டப்பட்டவரும், கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளருமான சித்திக் கப்பன், மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட அழைத்து வரப்பட்ட நாளில், அதற்கு முன்பான 24 மணி நேத்தில் அவருக்கு எந்த உணவும் வழங்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல் தி க்விண்ட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். அவரது மனைவி 37 வயதான ரைஹானா சித்திக்கிடம் பேசினோம், இவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல என்று கூறினார். அவரது வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸையும் நாங்கள் அணுகினோம்,இவ்வாறு மீண்டும் […]

Corruption Rafale

இந்திய இடைத் தரகருக்கு ரஃபேல் தயாரிப்பு டசாலட் நிறுவனம் ரூ. 9 கோடி லஞ்சம்; அம்பலப்படுத்திய பிரான்ஸ் ஊழல் தடுப்பு அமைப்பு!

ரஃபேல் போர்விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த இடைத் தரகருக்கு 8.62 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது குறித்து ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இது தற்போது அந்நாட்டில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது, எனினும் பெரும்பான்மை இந்திய ஊடகங்கள் இதை ஒரு விவாத பொருளாக கூட ஆக்க முடியாத நிலையில் உள்ளன. ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 126 விமானங்கள் […]

Assam Election Commission

90 பேர் கொண்ட வாக்குச்சாவடியில் 171 ஓட்டுகள் பதிவு; தேர்தல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் !

ஹாஃப்லாங் (அஸ்ஸாம்): அசாமின் டிமா ஹசாவோ மாவட்டத்தில் 90 வாக்காளர்கள் மட்டுமே உள்ள ஒரு வாக்குச் சாவடியில் மொத்தம் 171 வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் கடும் குளறுபடி ஏற்பட்டதை அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். ஏப்ரல் 1 ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற ஹஃப்லாங் தொகுதியில் இந்த வாக்குச்சாவடி அமைந்துள்ளது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும், மாவட்ட தேர்தல் அதிகாரி, 107 (ஏ) கோட்லீர் எல்பி பள்ளியில் உள்ள இவ்வாக்குச் சாவடியின் ஐந்து வாக்கெடுப்பு அதிகாரிகளை […]

பள்ளிவாசல் முன் நின்று வாக்குசேகரிப்பு ; பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்குப்பதிவு
Actors BJP Tamil Nadu

பள்ளிவாசல் முன் நின்று வாக்குசேகரிப்பு ; பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்குப்பதிவு !

சென்னை: தேர்தல் நடத்தை சட்டத்தை மீறி வெள்ளிக்கிழமை மசூதி முன் பிரச்சாரம் செய்ததாக நடிகரும் பாஜக வேட்பாளருமான (ஆயிரம் விளக்குகள் தொகுதி) குஷ்பு சுந்தர் மீது கோடம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் பிரச்சார விதிமுறைகளை மீறி நடிகை குஷ்பு பள்ளிவாசலுக்கு முன், அவரும் அவரது ஆதரவாளர்களும் முறையான அனுமதியைப் பெறாமல் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதை கண்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து […]

'பாஜக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை' என பதிவிட்ட பாஜக எம்.எல்.ஏ மகள் பணியிடை நீக்கம்!
Activists BJP Tripura

‘பாஜக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை’ என பதிவிட்ட பாஜக எம்.எல்.ஏ மகள் பணியிடை நீக்கம்!

திரிபுரா மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் அனிந்திதா பவுமிக். முறையான டெண்டர் மூலம் மருத்துவமனையின் விலை உயர்ந்த உபகரணம் வாங்கப்படவில்லை என அவர் முகநூலில் பதிவிட்ட காரணத்தால் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திரிபுராவின் தெற்கு மாவட்டத்தின் பெலோனியா சப் டிவிஷனைச் சேர்ந்த ஆளும் பாஜக எம்.எல்.ஏ., அருண் சந்திர பவுமிக் என்பவரின் மகள் தான் அனிந்திதா பவுமிக். “திரிபுராவில் 2018 ல் பாரதீய ஜனதா கட்சி அமைக்கப்பட்ட […]

உபி: முசாபர்நகர் கலவர வழக்கில் பாஜக தலைவர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு!
BJP Uttar Pradesh

உபி: முசாபர்நகர் கலவர வழக்கில் பாஜக தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்பபெற்றது சிறப்பு நீதிமன்றம் !

உபி பாஜக அமைச்சர் சுரேஷ் ராணா, பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம், வி.எச்.பி தலைவர் சாத்வி பிராச்சி உள்ளிட்ட 12 பாஜக தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முசாபர்நகர் கலவர குற்ற வழக்குகளை வாபஸ் பெற உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள எம்.பி. / எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் 27 அன்று அனுமதித்தது. முக்கிய பாஜக தலைவர்கள் அனைவர் மீதும் ஒரு வழக்கும் கூட இல்லாமல் ‘கிளீன் சிட்’ வழங்கியுள்ளது நீதிமன்றம். அறுபது பேர் கொல்லப்பட்டு, […]

DMK Tamil Nadu

திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன், மகள் வீட்டில் ஐடி ரெய்டு !

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மற்றும் அவரது மகள் செந்தமரை ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகத்தில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலகரை என்ற இல்லத்தைத் தவிர, தேனம்பேட்டையில் உள்ள அலுவலக வளாகத்திலும் மேலும் இரண்டு இடங்களிலும் ஐ-டி ரெய்டு நடந்து வருகின்றன. சபரீசன் பல ஆண்டுகளாக ஸ்டாலினின் நெருங்கிய ஆலோசகராக […]

கோவையில் வானதி சீனிவாசன் போட்டியிட தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு !
BJP Coimbatore

கோவையில் வானதி சீனிவாசன் போட்டியிட தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு !

கோயம்புத்தூர்: உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை வரவேற்பதற்கான ஊர்வலமாக சென்ற பாஜக மற்றும் இந்து முன்னணியினர், கடை ஷட்டர்களைக் கீழே இறக்குமாறு கூறிக் கொண்டே மோட்டார் சைக்கிள்களில் பயணித்தனர். ஒரு கட்டத்தில் வன்முறையில் இறங்கி கடைகளின் மீது கற்களை வீசி தாக்கினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட […]

Rohingya Union Government

14 வயது ரோஹிங்கியா சிறுமியை மியான்மாருக்கு திருப்பி அனுப்பும் மோடி அரசு!

குவஹாத்தி, மார்ச் 30: மியான்மரில் அதிகரித்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கு இடையே, ஒரு ரோஹிங்கியா சிறுமியை மியன்மார் நாட்டிற்கு அதிகாரபூர்வமாக திருப்பி அனுப்ப உள்ளது மோடி அரசு. இது குறித்து அசாம் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. மியான்மரில் தற்போது இராணுவ ஆட்சி அமைந்த பின்னர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் ரோஹிங்கியா சிறுமிக்கு வயது 14!. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த அச்சிறுமி, சில்சார் சார்ந்த தன்னார்வ தொண்டு […]