NRC

NRC: மோடி இல்லை என்பாராம், அமித் ஷா உண்டு என்பாராம் ! என்ன தான் நடக்குது ?

‘தேசம் முழுவதும் NRC கொண்டு வரும் திட்டமே அரசிடம் இருந்ததில்லை,’ என்று பிரதமர் பேசி இருக்கிறார். தில்லியில் நேற்று ஆற்றிய உரையில் அவர் அப்படி குறிப்பிட்டு ‘ஆகவே யாரும் பயப்படத் தேவையில்லை,’ என்று சொல்லி இருக்கிறார்.

இது பச்சைப்பொய் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையிலேயே ‘தேசம் முழுக்க NRC வந்தே தீரும்,’ என்று பேசியிருக்கிறார். அப்போது பிரதமர் அவையில் இல்லையா என்று தெரியவில்லை. இல்லையெனில் அவைக்குறிப்புகளை பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.

Image result for amit shah modi

நாடாளுமன்றத்தை தாண்டிப் பார்த்தால், CAA NRC இரண்டையும் இணைத்து அமித் ஷா பேசிய மேடைப்பேச்சுகள், நேர்காணல்கள் கணக்கற்ற எண்ணிக்கையில் இருக்கின்றன. நானே அப்படிப்பட்ட ஒரு வீடியோவை பகிர்ந்து மொழிபெயர்த்து காட்டி இருக்கிறேன். சட்டவிரோத குடியேறிகளை கப்பலில் ஏற்றி வங்காள விரிகுடாவில் தூக்கி எறிவோம் என்ற அமித் ஷாவின் பேச்சையும் குறிப்பிட்டு தரவுகளுடன் பகிர்ந்திருக்கிறேன்.

அது ஒரு புறம் இருக்க, CAA பற்றி பயப்பட வேண்டாம் என்ற ‘விழிப்புணர்வு’ விளம்பரம் ஒன்று அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் கீழ்கண்ட வரிகள் உள்ளன.

‘No nationwide NRC has been announced.If and when it is announced, rules and guidelines would be framed such that no Indian citizen would face any harassment whatsoever.’

அதாவது ‘தேசிய அளவில் NRC இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அப்படி வரும் பட்சத்தில் இந்தியக் குடிமக்கள் யாரும் இதில் பாதிக்கப்பட மாட்டார்கள்.’ பிரதமர் உரையாற்றிய அதே நாளில் மத்திய அரசே அதிகாரபூர்வமாக (அரசு இலச்சினையுடன்) வெளியிட்ட விளம்பரத்தில் மேற்கண்ட வரிகள் உள்ளன. இதுதான் இவர்களின் ‘உண்மையின்’ லட்சணம்.

https://www.youtube.com/watch?v=tEfaRmQIDU4

அது சரிதானே, இந்தியக்குடிமக்களுக்கு பாதிப்பு இருக்காது என்றுதானே சொல்கிறது? என்று கேட்கும் அப்பாவிகளுக்கு: யார் இந்தியக்குடிமகன் என்று எப்படி நிரூபிப்பது என்பதுதான் இங்கே இருக்கும் சிக்கலே. நான் முன்பே குறிப்பிட்ட மாதிரி ஆதார், பாஸ்போர்ட் போன்றவை போதாது. சரி, அப்படியே பிறந்த தேதியும், பிறந்த இடமும் உள்ள எல்லா ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் (Date of Birth, Place of Birth) என்றே அறிவிக்கப்பட்டாலும் அதுவும் கூட போதாது.

Image result for passport aadhar voter card

* பிறப்பு சான்றிதழ்: 2000ம் ஆண்டு வரை பிறந்த குழந்தைகளில் 56% பேருக்குத்தான் பதியப்பட்டுள்ளது. 2015ல் பிறந்த குழந்தைகளுக்கும் கூட 89%தான் இருக்கலாம் என்று அனுமானிக்கிறார்கள். (Civil Registration System)

* ஆதார் அட்டை: மொத்தம் 90% இந்தியர்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் இந்த எண்ணிக்கை மோசம்: அஸ்ஸாம் 17%, மேகாலயா 29%, நாகாலாந்து 29%. (UIDAI, 2018)

* பாஸ்போர்ட்: இதுவரை கிட்டத்தட்ட 8 கோடி பாஸ்போர்ட் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. (MEA, 2018)

* வங்கிக்கணக்கு: மொத்தம் 80% இந்தியர்களிடம்தான் வங்கிக்கணக்கு இருக்கிறது. (RBI, 2017)

* வாக்காளர் அட்டை: மொத்தம் 92 சதவிகித மேஜர் இந்தியர்களிடம் வாக்காளர் அட்டை இருக்கிறது. (Election Commission, 2017)

* இடைநிலைப்பள்ளி சான்றிதழ்: 80% மக்களிடம் இடைநிலைப்பள்ளி சான்றிதழ் இருக்கலாம். 2004 வரை 51% பேரிடம்தான் இருக்கலாம். (HRD Ministry, 2016-17)

எந்த வகையில் பார்த்தாலும் கிட்டத்தட்ட 10 முதல் 15 சதம் வரை மக்கள் விடுபட்டுப் போவார்கள். அதாவது 13 முதல் 18 கோடிப்பேர் வரை இந்தியரல்லர் என்று ஆகும் சாத்தியக்கூறு இருக்கிறது. இதுவே கூட இந்த அடையாள அட்டைகள் எல்லாம் செல்லும் என்று அரசு அறிவித்தால்தான்.

NRC எங்கள் திட்டத்தில் இல்லை, பயம் தேவையில்லை என்றெல்லாம் பொய் சொல்லி தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டு இருக்கத்தேவையில்லை, CAA மற்றும் NRC இரண்டிலும் மாற்றம் கொண்டு வருகிறோம், வேறு ஆவணங்களை சேர்க்கிறோம் என்றெல்லாம் எந்த ஜல்லியடியும் தேவையில்லை.

Image result for modi lies
Courtesy:Modilies.in

நமக்குத் தேவையான தீர்வு அமித் ஷாவின் திட்டத்தில் சிறு மாறுதல்:

ஒரு கப்பலை ரெடி பண்ணி அதில் CAA மற்றும் NRC கோப்புகளை எல்லாம் ஏற்ற வேண்டும் கப்பலை வங்காள விரிகுடாவின் மையத்தில் கொண்டு நிறுத்தி அனைத்து கோப்புகளையும் கடலில் தூக்கி வீசி எறிய வேண்டும்.!

இது மட்டுமே ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரே தீர்வு.

ஆக்கம் ஸ்ரீதர்