CAA NRC

மோடி அரசின் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி க்கு எதிராக அமெரிக்க சியாட்டில் நகர சபையில் நிறைவேறியது கண்டன தீர்மானம்!

அமெரிக்காவின் மிக வலிமையான நகர கவுன்சில்களில் ஒன்று தான் சியாட்டில் நகர சபை. இந்நிலையில் மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றைக் கண்டித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது சியாட்டில் நகர சபை.

கண்டன தீர்மானம் :

சியாட்டில் நகர சபை தேசிய குடிமக்களின் பதிவு மற்றும் இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறது. மேலும் இந்த சட்டங்கள், முஸ்லிம்கள், ஒடுக்கப்பட்ட ஜாதிகள், பெண்கள், பழங்குடியினர், LGBTQ மற்றும் பிற சாமானிய மக்களுக்கு இடையே பாகுபாட்டை காட்டுகிறது ” என்று தீர்மானத்தில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

சியாட்டில் நகர சபை உறுப்பினர் க்ஷாமா சாவந்த் இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். CAAவை ரத்து செய்வதன் மூலம் இந்திய அரசியலமைப்பை நிலைநிறுத்த வேண்டும், குடிமக்களின் தேசிய பதிவேட்டை (NRC) நிறுத்த வேண்டும், அகதிகள் தொடர்பான பல்வேறு ஐ.நா. ஒப்பந்தங்களை அங்கீகரிப்பதன் மூலம் அகதிகளுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய நாடாளுமன்றத்தை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

சர்வதேச சமூகம் CAAவை கண்டிப்பதன் மூலம், சியாட்டில் சிட்டியின் பன்மைத்துவத்தையும் மத சுதந்திரத்தையும் அனைவருக்கும் எடுத்துக் காட்ட வேண்டும். இந்தியா வெறுப்பு மற்றும் மதவெறி ஆகியவற்றில் ஈடுபட முடியாது.

ஒருபக்கம் அப்படி செய்தபடியே, சர்வதேச சமூகம் தங்களை ஏற்க வேண்டும் என்றும் நினைக்க முடியாது, என்று இந்திய அமெரிக்க முஸ்லீம் கவுன்சிலின் தலைவர் அஹ்சன் கான் தீர்மானத்தின் மீதான உரையில் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.

தமிழக பெண்மணி தேன்மொழி :

தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்க சமூகத்தை ஒருங்கிணைப்பதில், Equality Labs அமைப்பின், தேன்மொழி சவுந்தர்ராஜன் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த அமைப்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதன் செயல் இயக்குநர் பொறுப்பில் இருப்பவர்தான் தேன்மொழி சவுந்தர்ராஜன். இந்த தீர்மானத்த அவர் வரவேற்றார். “சியாட்டில் நகர சபை இன்று வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்பதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். CAAக்கு எதிரான உலகளாவிய கூக்குரலில் தார்மீக ஒருமித்த கருத்தை சியாட்டில் வழிநடத்துகிறது,” என்று அவர் பெருமிதத்தோடு கூறினார்.

வெற்றி பெற்றது தீர்மானம்:

இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான அமைப்புகளை சேர்ந்தவர்கள், சியாட்டில் நகர சபை உறுப்பினர்களை, மின்னஞ்சல் மூலம் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இது அமெரிக்காவிலுள்ள பிற நகரங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது என்றும் அவர் கூறினார். பொறுப்பு “இந்தியாவில் ஆளும் கட்சிக்கு டிரம்ப் ஆதரவாக உள்ளார். முஸ்லீம்களுக்கு தடை மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான போர் நூற்றுக்கணக்கான மில்லியன் சிறுபான்மையினரை பாதிக்கிறது.

இதுபோன்ற காலகட்டத்தில், அமெரிக்கர்களுக்கு இந்த மனித உரிமை நெருக்கடி பற்றி பேச ஒரு தனித்துவமான பொறுப்பு உள்ளது. சியாட்டில் இதற்கு வழிவகுத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று தேன்மொழி கூறினார்.

இந்த தீர்மானம் வெற்றிபெறுவதற்கு ஒரு முக்கிய காரணம் தேன்மொழி என்பதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.