உபி: உபியில் உள்ள கிராமம் ஒன்றில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையில் கண்ட உள்ளூர் தலித் மக்கள், செவ்வாய்க்கிழமை (30-3-21) போராட்டத்தில் ஈடுபட்டனர். குந்தா கிராமத்தில் உள்ள அம்பேத்கார் சிலை திங்கள்கிழமை அதிகாலையில் சில “சமூக விரோத சக்திகளால்” சேதம் செய்யப்பட்டதாக பில்தாரா சாலையில் உள்ள சப் டிவிஷன் மாஜிஸ்திரேட் (எஸ்.டி.எம்), சர்வேஷ் யாதவ் தெரிவித்தார். எஸ்.டி.எம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர், விரைவில் ஒரு புதிய சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்தனர். […]
Uttar Pradesh
உபி: வீட்டின் முன்னே ஹோலி கொண்டாட அனுமதி மறுத்த 60 வயது முதியவர் அடித்து கொலை !
உபி: மெவதி டோலா பகுதியில், தங்கள் வீட்டிற்கு முன் ஹோலி கொண்டாட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்த 60 வயது முதியவர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இத்தாக்குதல் சம்பவத்தில் அவரது குடும்பத்தினர் மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். காலை 10 மணியளவில் போதையில் தள்ளாடி கொண்டே ஹோலி கொண்டாடி கொண்டிருந்த ஒரு கூட்டம் , அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து கட்டைகள் மற்றும் கல்லால் அடித்து கொலை செய்ததாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு […]
உபி: நீதிமன்றத்திற்குள் நுழைந்து நீதிபதியை எட்டி மிதித்து, அறைந்த கொடூரம் !
உன்னாவ் பார் அசோசியேஷன் உறுப்பினர்களால் கடந்த வியாழக்கிழமை தாக்கப்பட்டதாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் கூறியதையடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமை தாங்கி கொண்டிருந்த நீதிமன்ற அறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தபட்டுள்ளது. நாட்டையே உலுக்கி இருக்க வேண்டிய இந்த சம்பவம் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது. நீதிபதிக்கே இந்த நிலை: கடந்த மார்ச் 25 அன்று, உன்னாவோவில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி (சிறப்பு நீதிமன்றம், போக்ஸோ சட்டம்), பிரஹ்லாத் டோண்டன் […]
பாலியல் வழக்கில் முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் குற்றமற்றவர் என சிறப்பு நீதிமன்றம் விடுவிப்பு !
உபி: சட்ட கல்லூரி மாணவி தாக்கல் செய்த கற்பழிப்பு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கில், முன்னாள் பாரதீய ஜனதா தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தை மார்ச் 26 தேதி, வெள்ளிக்கிழமையன்று குற்றமற்றவர் என சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்த் கட்டுப்பாட்டில் இயங்கும் எஸ்.எஸ். சட்டக் கல்லூரியில் மாணவியாக இருந்த அவர்,கடந்த 2019 ஆகஸ்டில் சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பாஜக […]
உபி: பெயர் கேட்டு விட்டு என்னை தாக்க ஆரம்பித்து விட்டனர் – முஸ்லீம் இளைஞர் குற்றச்சாட்டு!
காஜியாபாத்தின் தஸ்னா கோவிலில் ஒரு சிறு முஸ்லீம் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற ஒரு சில நாட்களில் இதுபோன்ற மற்றொரு சம்பவம் உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில், 18 வயது சிறுவன் முஸ்லீம் இளைஞர் ஒருவர் எட்டாவாவில் உள்ள ஒரு கோவிலில் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். எட்டாவா மாவட்டத்தின் கோட்வாலி பகுதியில் உள்ள பிதாம்பர மாதா கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. […]
‘முஸ்லீம் பெண்கள் ‘புர்கா’ அணிவதில் இருந்து விடுவிக்கப்படுவார்கள், அது ஒரு தீய வழக்கம்’ – பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப்
உத்தரபிரதேச பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா கடந்த புதன்கிழமையன்று முஸ்லீம் பெண்கள் ‘புர்கா’ அணிவதில் இருந்து “விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறினார். இதை தீய வழக்கம் என்று வர்ணித்த அவர், இதனை இந்தியாவில் தடை செய்யப்பட்ட மூன்று தலாக் சட்டத்துடன் ஒப்பிட்டு பேசினார். மசூதிகளில் ஒலிபெருக்கிகள் காரணமாக தனது கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், நீதிமன்ற உத்தரவுகளின்படி சப்தத்தின் அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் கூறி, பல்லியா மாவட்ட மாஜிஸ்திரேடுக்கு அமைச்சர் எழுதிய கடிதம் எழுதியுள்ள […]
உபி: கோயில் புனரமைக்க உதவிய முஸ்லிம்களுக்கு, கோயில் செல்ல தடை!
காஸியாபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு முஸ்லிம் சிறுவன் தண்ணீர் குடிப்பதற்க்காக கோயிலில் நுழைந்ததற்காக ஷ்ரிங்கி யாதவ் என்பவனும் , அவன் சகாக்களும் அந்த சிறுவனின் தந்தை பெயரையும் , அவன் பெயரையும் கேட்டு அச்சிறுவனை பலமாக தாக்கி அதை வீடியோவும் எடுத்தனர். பின்னர் சிறுவனின் தலையில் ரத்தம் கசிந்து கொண்டிருக்க அவனை கோயிலின் வெளியே தூக்கி வீசி விட்டு சென்றுள்ளனர். இந்த அதிர்ச்சியான காணொளி நடுநிலையாளர்களையும், பாசிசத்திற்கு எதிரான மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. […]
உபி : கோயிலில் பூசாரி வெட்டி கொலை; மவுனம் சாதிக்கும் இந்துத்துவாவினர் – காரணம் என்ன?
உபி,ஆக்ரா: புதிய ஆக்ரா போலீஸ் அதிகார எல்லைக்குட்பட்ட ஆக்ராவின் மவு கிராமத்தில் 55 வயதான கோயில் பூசாரி ஒருவர் கோடரியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, குற்றம் நடந்த சில மணி நேரங்களுக்குள் சந்தேக நபரை கைது செய்தனர். புதன்கிழமை காலை 6:30 மணியளவில் கோயில் வளாகத்தில் ரத்தக் கறை படிந்த நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறை சம்பவ இடத்தை அடைந்து விசாரணையைத் தொடங்கியது. கொலை நடைபெற்ற முந்தைய […]
உபி : முபாரக் கான் தர்காவை இடிக்க தடை விதித்து இடைக்கால உத்தரவிட்டது உச்சநீதிமன்றம் !
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள தர்கா முபாரக் கான் ஷஹீத்தில் அமைந்துள்ள எந்தவொரு கட்டமைப்பையும் இடிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம், உபி அரசுக்கு திங்களன்று நோட்டீஸ் அனுப்பியது. புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் தனது மிகப் பிரபலமான கதைகளில் ஒன்றான ‘இத்கா’வை தர்கா முபாரக் கான் ஷஹீதில் வைத்து எழுதினார், இது தர்காவை பிரபலமாக்கியது. இந்த விவகாரத்தில் நீதிபதி நவின் சின்ஹா மற்றும் நீதிபதி கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரபிரதேச மாநிலத்திற்கு நோட்டீஸ் […]
உபி : 16 வயது சிறுவனுக்கு ஆசன வாயில் வழியாக காற்று செலுத்தப்பட்டதில் கொடூர மரணம் !
பிலிபிட்: உபி யில் 16 வயது சிறுவனைப் பிடித்து, ஆசனவாயில் வழியாக உயர் சக்தி கொண்ட காற்று அமுக்கி மூலம் காற்றை உந்தி, அவரது உள் உறுப்புகளை சேதப்படுத்தி உள்ளனர் மூன்று கயவர்கள். பரேலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிர் இழந்துள்ளார். சிறுவன் ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்ததையடுத்து, 22 முதல் 26 வயது இடையிலான மூன்று நபர்கள் மீது பிலிபிட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் […]
உபியில் கூட்டு பலாத்கார குற்றம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சித்திக்குக்கு சிறையில் கடும் டார்ச்சர்- பிபிசி ரிப்போர்ட் !
உபி ஹத்ராஸில் உள்ள புல்கரி கிராமத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர், உயர் சாதியை சேர்ந்த நான்கு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் காயங்களுடன் உயிர் இழந்தார். பெண்ணின் மரணம் மற்றும் நள்ளிரவில் அவரது குடும்பத்தின் அனுமதியின்றி யோகியின் காவல்துறையினர் கட்டாய உடல் தகனம் செய்தது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக அமைந்தது. குடும்பத்தினரையும் ஊடகங்களையும் இறுதி சடங்கிலிருந்து விலக்கி வைத்தனர்,காவல்துறையினர். இது குறித்து செய்தி வெளியிட ஆர்மபத்தில் கோதி மீடியாக்கள் மறுத்தன, […]
உபி : ‘குழந்தைகளை நீங்கள் பெற்றெடுத்துவிட்டு கல்வி செலவை அரசிடம் கேட்பீர்களா?’ – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து..
குழந்தைகளை நீங்கள் பெற்றெடுத்துவிட்டு குழந்தைகளின் கல்வி செலவுக்காக அரசாங்கத்திடம் செலவழிக்க சொல்கிறீர்களா என உபி பாஜக எம்.எல்.ஏ பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தனியார் பள்ளிகளில் கட்டணம் தள்ளுபடி செய்வதற்கு உதவிட வேண்டும் என பெண்கள் அவ்ரையா பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் திவாகரை அணுகியபோது தான் அவர் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது தொகுதியில் மக்களுடன் உரையாடி கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. “பச்சே ஆப் பேடா கரோ […]
உபி: நீதிமன்ற உத்தரவிற்கு பின்னும் முஸ்லிம் பெண்ணை பெற்றோரிடம் அனுப்ப மறுக்கும் அவலம்!
உபி, ஃபிரோஸாபாத் நகரை சேர்ந்தவர் 20 வயதுப்பெண் அஸ்ரா, இவர் தருண் என்கிற இந்து இளைஞனோடு காதல் வயப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அஸ்ராவை திருமணம் செய்து கொண்டதாக தருண் கூறி வருகிறார். தருணின் தொடர் சித்திரவதைகளை தாங்கி கொள்ள முடியாமல் பெற்றோரிடம் செல்ல விரும்பி உள்ளார் அஸ்ரா, எனினும் தருண் அஸ்ராவை விட மறுத்து பிரச்சனை செய்யவே. பெண்ணின் குடும்பத்தார் மாயின்பூர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றத்தில் இருதரப்பிலும் விசாரணை மேற்கொண்ட போது அஸ்ரா ஒரு மேஜர் எனவும், […]
உபி : மதரசா சென்று வீடு திரும்பும் வழியில் கடத்தப்பட்ட இரு சிறுமிகளில் ஒருவர் கொலை, தொடரும் கொடூரம்!..
பாஜக ஆளும் உபியில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உன்னாவ் கொடூரம் நடைபெற்ற சில தினங்களில் அடுத்துஅடுத்து பாலியல் கொடூரங்கள் நடந்த வண்ணமே உள்ளன. அந்த வரிசையில் மதரசா விற்கு சென்று வீடு திரும்பி கொண்டு இருந்த இரு சிறுமிகள் கடத்தப்பட்டு அதில் ஒருவர் கொல்லப்பட்ட சமபவம் அரங்கேறி உள்ளது. ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு சிறுமிகள் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகவும், அதில் 5 வயதுடைய சிறுமி மேற்கு உத்தரப்பிரதேசத்தின் […]
உபி: தர்காவில் நுழைந்து பாசிஸ்டுகள் வெறியாட்டம்; முதியவர் தாக்கப்பட்டு விரட்டியடிப்பு ..
உபி மாநிலம் , அம்பேத்கர் நகரில் உள்ளது வரலாற்று சிறப்புமிக்க “ஷாஹ்நூர் பாபா” தர்கா. இந்த பாபாவுடைய தர்கா அப்பகுதியில் மிகப்பிரபலமில்லை என்ற போதும் இந்துக்களும் முஸ்லீம்களும் அங்கே மிக இணக்கமாக சகோதர பாசத்தோடு பழகிவந்துள்ளனர். உரூஸ் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் அங்கு நடக்கப்பெறாது காரணம் அது மிகவும் பின்தங்கிய பகுதியில் இருக்கும் ஒர் இடம் ஆதலாலும் மக்கள் பரவலாக வந்துபோகாத இடம் என்பதாலும் அங்குள்ளவர்கள் மட்டுமே வழிபடுவார்கள். இந்நிலையில் நூற்றாண்டு காலமாக பாபாவின் தர்காவினை பராமரித்து […]