சேலம், அன்னதானப்பட்டி, சண்முகா நகரில் பாதுஷா மைதீன், 28, என்பவர் மாலை நேரத்தில் மாட்டிறைச்சி சில்லி கடை நடத்தி வந்தார். வட மாநிலங்களை போல தமிழ் நாட்டில் மாட்டிறைச்சி விற்க எந்த தடையுமில்லை. இந்து மக்களும் இவரது கடைக்கு வாடிக்கையாளர்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்து முன்னணியினர் அருகில் முனியப்பன் கோவில் உள்ளதாக கூறி அங்கு வந்து எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனை செய்ததால் பாதுஷாவின் கடை தற்போது மூடப்பட்டு விட்டது. 28-07-22 அன்று இரவு அசம்பாவிதத்தை […]
States News
குஜராத் : பாஜக அமைச்சர் சட்டவிரோதமாக பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு !
குஜராத் மாநில ஊரக வளர்ச்சி அமைச்சரும் பாஜக எம்எல்ஏவுமான அர்ஜுன்சின் சவுகான் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் சட்ட விரோதமாக பெண்ணை அடைத்து வைத்தது தொடர்பான புகார்களை குஜராத் மாநில கெடா போலீசார் விரைவில் விசாரிக்கவுள்ளனர். காவல்துறை விளக்கம்: கெடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திவி மிஸ்ரா ஐஏஎன்எஸ்ஸிடம் கூறுகையில், “மெஹ்மதாபாத் தாலுகாவின் ஹல்தர்வாஸ் கிராமத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து எங்களுக்கு ஒரு புகார் வந்துள்ளது. புகார்தாரரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் சட்டவிரோதமாக அடைத்து வைத்தது […]
மேகாலயா: பாஜக துணைத் தலைவரின் பண்ணை வீட்டில் வெடிபொருட்கள், ஆயுதங்களை மீட்ட போலீசார்!
மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் ரிசார்ட் என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்ட மேகாலயா பாஜக துணைத் தலைவர் பெர்னாட் என் மராக்கின் பண்ணை வீட்டில் ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் குறுக்கு வில்களை மேகாலயா போலீஸார் மீட்டுள்ளனர். ஜூலை 22 ஆம் தேதி நடந்த போலீசார் சோதனையின் போது மீட்கப்பட்ட சிறுமிகளின் உடைகள் மற்றும் புத்தகங்களை சேகரிக்க மாவட்ட சிறார் பாதுகாப்பு பிரிவு மற்றும் மேகாலயா காவல்துறையின் குழு இன்று ‘ரிம்பு […]
உபி: தலித் சமூக பெண்ணின் ஆடையை கழற்ற முயன்றதற்காக 4 ‘உயர்சாதியினர்’ மீது வழக்கு பதிவு !
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் 38 வயது தலித் சமூக பெண்ணை வியாழக்கிழமை அன்று மானபங்கப்படுத்த முயன்றதாக உயர் சாதி சமூகத்தை சேர்ந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். “நான் அந்த இடத்தை அடைந்தபோது, அவர்கள் என் மகன்களை தாக்குவதை கண்டேன், என் மகன்களை விட்டுவிடும்படி அவர்களிடம் மன்றாடினேன், ஆனால் அவர்கள் என் பேச்சை கேட்கவில்லை. […]
முஸ்லிம் தொழிலதிபரை லவ் ஜிஹாத் & கற்பழிப்பு வழக்கில் சிக்க வைக்க ‘செட்டப்’ செய்யப்பட்ட பெண் !
உபி: டெல்லியைச் சேர்ந்த 24 வயது இந்துப் பெண், உத்தரப் பிரதேசத்தில் உள்ள கஸ்கஞ்சைச் சேர்ந்த 27 வயது முஸ்லீம் தொழிலதிபரை போலி கற்பழிப்பு மற்றும் ‘லவ் ஜிஹாத்’ வழக்கில் சிக்க வைக்க இரண்டு நபர்கள் ‘தன்னை பணியமர்த்தியதை’ ஒப்புக்கொண்டுள்ளார். அமன் சவுகான் (34) மற்றும் ஆகாஷ் சோலங்கி (28) என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த இருவரில் ஒருவரான அமன் “பாஜக இளைஞர் பிரிவின் மாவட்ட துணைத் தலைவர்” என்று அவரது முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி டைம்ஸ் […]
உபி: வெடிகுண்டுகளுடன் சிக்கிய 6 பேர்; தீவிரவாத பட்டம் சுமத்தப்படாத வினோதம்!
உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை (STF) சனிக்கிழமையன்று காஜிபூரில் இரண்டு கையெறி குண்டுகளுடன் ஆறு பேரை கைது செய்தது. குற்றவாளிகள் கையெறி குண்டுகளை பூர்வாஞ்சலின் தன்ஜி கும்பலுக்கு விற்க முயன்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர. கைது செய்யப்பட்ட 6 பேரும் மகேஷ் ரஜ்பர், நவீன் பஸ்வான், அபிஷேக் சிங், ரோகன் ராஜ்பர் மற்றும் ராகேஷ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் காஜிபூரில் வசிப்பவர்கள். சென்னையில் பணிபுரியும் காஜிபூரைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் கையெறி குண்டுகளை தன்னிடம் […]
ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் ‘Silly Souls’ சொகுசு பாருக்கு போலி ஆவணங்கள் மூலம் உரிமம்!
வடக்கு கோவா-வில் உள்ள அசாகோ பகுதியில் ‘சில்லி சோல்ஸ் கஃபே அண்ட் பார்” என்ற பெயரில் பாஜக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி நடத்தி வரும் பாருக்கு போலி ஆவணங்கள் மூலம் இறந்தவர் பெயரில் உரிமம் வாங்கி நடத்திவருவது குறித்து செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஐரிஸ் ரோட்ரிகியூஸ் என்ற வழக்கறிஞர் நேற்று அளித்துள்ள புகாரின் அடிப்படையில், கோவா கலால் ஆணையர் நாராயண் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் ஜூலை 29 […]
உ.பி: போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட தலித் நபர்.. உடலும் வலுக்கட்டாயமாக எரிப்பு!
உத்தரபிரதேசத்தின் ஃபரூகாபாத் பகுதியைச் சேர்ந்த 35 வயதான தலித் கௌதம், ஜூன் 24 அன்று இரவு அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். ஃபரூகாபாத் மாவட்டம் மேராபூர் காவல் நிலைய எல்லைக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக மது விற்பவர்களை பிடிக்கவே போலீசார் கவுதமின் வீட்டை சோதனையிட சென்றதாக போலீசார் தெரிவித்தனர். பெரும் போராட்டத்திற்கு பிறகே எஃப்ஐஆர் : ஆரம்பத்தில் கௌதமின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல […]
ஹரியானா: அக்னிவீர் படிவங்களை நிரப்பும் இளைஞர்களை ‘சமூக ரீதியாக தனிமைப்படுத்துவோம்’ !
ரோஹ்தக்: மோடி அரசின் அக்னிபத் ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தில் படிவத்தை நிரப்பும் அல்லது பங்கேற்கும் இளைஞர்களை “சமூக ரீதியாக தனிமைப்படுத்துவோம்” என காப் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் விவசாய சங்க போராட்ட பிரதிநிதிகள் புதன்கிழமை அறிவித்தனர். ரோஹ்தக் மாவட்டத்தின் சாம்ப்லா நகரில் புதன்கிழமை (23-4-22) ஒரு பஞ்சாயத்து அழைப்பு விடுக்கப்பட்டது, இதில் ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு காப்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். வழக்குகள் […]
கோவை: ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்க ஆர்ப்பாட்டம் !
ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் என கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம், தெய்வத் தமிழ் பேரவை இயக்கத்தினர் மற்றும் பொது மக்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஈஷாவிலிருந்து வெளியேறும் கழிவுநீரை விளை நிலத்தில் வெளியேற்றக் கூடாது, பழங்குடியினர் நில அபகரிப்பதற்கு எதிர்ப்பு , பெண்களைத் துறவிகள் ஆக்கக் கூடாது என்ற கருத்துடைய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், ஈஷாவில் […]
உபி அரசின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கடிதம் !
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்ட விரோத கடுங்காவல், வீடுகளை புல்டோசர்களால் இடிப்பது , போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ் காவலில் உள்ளவர்கள் மீது போலீஸ் வன்முறை என்பன உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், போராட்டக்காரர்களை விசாரிக்கவும், அமைதியான போராட்டங்களில் ஈடுபடவும் வாய்ப்பளிப்பதற்கு பதிலாக, உத்தரபிரதேச மாநில நிர்வாகம் “அத்தகைய நபர்களுக்கு […]
குஜராத்: 35% கட்டிடங்கள் சட்டவிரோதமானவை என ஆய்வில் தகவல்!
8, 320 கட்டிட உள்ளீடுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஆய்வில் குஜராத்தில் கிட்டத்தட்ட 35% கட்டமைப்புகள் கட்டிட-பயன்பாட்டு (BU) அனுமதிகள் இல்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜனவரியில் தொடங்கிய இந்த கணக்கெடுப்பு மாநகராட்சிகள் மற்றும் நகரபாலிகாக்கள் (நகராட்சிகள்) முழுவதிலும் நடத்தப்பட்டது. குஜராத்தின் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மூன்று மாதக் கணக்கெடுப்பின் முடிவில், மாநிலத்தில் கிட்டத்தட்ட 35% கட்டிடக் கட்டமைப்புகள் சட்டத்திற்குப் புறம்பானது, ஏனெனில் அவை கட்டிட பயன்பாட்டு (BU) அனுமதிகள் இல்லாதவை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின் […]
உபி: முதல்வர் ஆதித்யானத்தை விரமர்சித்ததாக கூறி 19 வயது அக்ரம் கைது !
பெயிண்டர் அக்ரம் அலியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் தாமாக முன்வந்து, அவர் மீது “பகைமையை ஊக்குவித்தல், மதத்தை அவமதிக்கும் நோக்குடன் செயல்படல் மற்றும் வேண்டுமென்றே அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படல்” ஆகிய குற்றங்களை அக்ரம் மீது சுமத்தி அவரை கைது செய்துள்ளனர். புதுடெல்லி: சமூக வலைதளங்களில் உபி முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி 19 வயது இளைஞனை உத்தரபிரதேச போலீசார் ஜூன் 13ம் தேதி திங்கள்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட […]
‘2021ல் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 486 வன்முறை தாக்குதல் சம்பவங்கள்’ – கேரள முதல்வர் பினராயி
கொச்சி: இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டுமே, 486 கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நினைவுகூர்ந்தார். வரவிருக்கும் திருக்காக்கரை இடைத்தேர்தலை ஒட்டி பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் எம்எல்ஏ பிசி ஜார்ஜின் வெறுப்புப் பேச்சு குறித்தும், அவருக்கு பாஜக ஆதரவு அளித்து வருவது குறித்தும் அவர் குறிப்பிட்டு பேசினார். கடந்த ஆண்டு, நாட்டின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 486 தாக்குதல்கள் நடந்தன. […]
மும்பை: பாஜக தலைவர் மோஹித் மீது ரூ.52 கோடி வங்கி மோசடி வழக்கு பதிவு !
மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மோஹித் கம்போஜ் பாரதியா மீது மோசடி புகாரை பதிவு செய்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து ரூபாய் 52 கோடி கடனை பெற்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர், பாஜக இளைஞர் பிரிவின் முன்னாள் மும்பை யூனிட் தலைவர் மோஹித் என்று வங்கியின் மேலாளர் தெரிவித்தார். கடனைப் பெறும்போது மேற்கோள் காட்டப்பட்ட நோக்கங்களுக்காக அல்லாமல் அவர்கள் அந்தத் தொகையை வேறு நோக்கத்திற்காக […]