BJP Meghalaya Saffronization Terrorism

மேகாலயா: பாஜக துணைத் தலைவரின் பண்ணை வீட்டில் வெடிபொருட்கள், ஆயுதங்களை மீட்ட போலீசார்!

மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் ரிசார்ட் என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்ட மேகாலயா பாஜக துணைத் தலைவர் பெர்னாட் என் மராக்கின் பண்ணை வீட்டில் ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் குறுக்கு வில்களை மேகாலயா போலீஸார் மீட்டுள்ளனர்.

ஜூலை 22 ஆம் தேதி நடந்த போலீசார் சோதனையின் போது மீட்கப்பட்ட சிறுமிகளின் உடைகள் மற்றும் புத்தகங்களை சேகரிக்க மாவட்ட சிறார் பாதுகாப்பு பிரிவு மற்றும் மேகாலயா காவல்துறையின் குழு இன்று ‘ரிம்பு பாகன்’ சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சோதனையின் போது, ​​ஒரு சிறிய கதவு போன்ற அமைப்பு இருப்பதை கவனித்த போசார், அதை திறந்தபோது, ​​அதிலிருந்து 35 ஜெலட்டின் குச்சிகள், 100 டெட்டனேட்டர்கள், நான்கு குறுக்கு வில்கள் மற்றும் 15 அம்புகள் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பெர்னார்ட் மீது வெடிபொருள்கள் சட்டம், 1908 இன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறார் ஒருவரின் மருத்துவ அறிக்கைகள், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை சுட்டிக்காட்டியதை அடுத்து, அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் புதிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேகாலாய் பாஜக துணைத் தலைவரான பெர்னாட், ஜூலை 26ஆம் தேதி உத்தரப் பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினரின் சோதனையைத் தொடர்ந்து, 24 பெண்கள் உட்பட மொத்தம் 73 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐந்து சிறார்களும் பூட்டிய அறையிலிருந்து சுகாதாரமற்ற நிலையில் மீட்கப்பட்டனர்.