நேற்று (29-12-19) ஆர்எஸ்எஸ் /பாஜக வை சேர்ந்த 8 நபர்கள் அடங்கிய கும்பல் ஒன்று மேற்கு வங்கத்தில் உள்ள கிருஸ்துவ தேவாலயதில் கையெறி குண்டுகளை வீசியும் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளதாகவும் தேவாலய நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற சமயத்தில் தேவாலயத்திற்குள் மக்கள் இருந்ததாகவும் குண்டு சப்தத்தை கேட்டு பயந்த ஓடிய பிறகு அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்ததாகவும் நிர்வாகிகள் கூறியுள்ளனர். கொல்கத்தாவிலிருந்து 120 கி.மீ தூரத்தில் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் பகவான்பூரில் மதியம் 2 மணியளவில் […]
States News
சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து வருகிறது அதிமுக – அன்வர் ராஜா ஒப்புதல்!
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அ.தி.மு.க. தொடர்ந்து ஆதரவாக செய்யப்பட்டு வருவதால் சிறுபான்மை சமூகத்தவரின் வாக்குகளை இழக்க நேரிடுகிறது என அ.தி.மு.க முன்னாள் எம்.பி.யும் அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு செயலாளருமான அன்வர்ராஜா கூறியுள்ளார். CAA வுக்கு அ.தி.மு.க. ஆதரவு: குடியுரிமை சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் ஓட்டெடுப்புக்கு வந்தபோது இந்த மசோதாவை ஆதரித்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் வாக்களித்ததால் குடியுரிமை சட்ட திருத்த மசோதா 125 வாக்குகளை பெற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவை எதிர்த்து 105 […]
ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம்!
புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் (1.1.2020 அன்று), சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடனும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரத்தில் (எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்) சிறப்பு சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலாப் பொருள்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகனந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோயில், […]
உபி : சமூக ஆர்வலர் சதாஃபை வயிற்றில் உதைத்து, லத்தியாலும் தாக்கிய போலீஸ்-10 நாட்கள் மேலாகியும் பெயில் இல்லை.
செத்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன்- சதாஃப் சமூக ஆர்வலரும், காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரகருமான சதாஃப் ஜாஃபர், கடந்த 19ந்தேதியன்று , லக்னோவில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது படம்பிடித்து கொண்டிருந்த அவரை போலீசார் அநியாயமாக இழுத்து சென்று கைது செய்தனர். ஆரம்பத்தில் ஜாஃபர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றே தெரியாமல் தவிக்கவிட்ட போலீஸ் 2நாட்கள் கழித்த பிறகே அவரது சகோதரிக்கு அவர் இருக்கும் இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் மீரா நாயர் போன்ற திரைத்துறையினர் சமூக ஊடகத்தின் வாயிலாக […]
CAAக்கு எதிராக கருத்து: உபியில் 124 பேர் கைது 19,000 சமூகவலைத்தள கணுக்குகள் ரிப்போர்ட்!
தலைமை பூசாரி யோகி ஆதித்யநாத் ஆளும் உபி மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 20,000 இணையதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, அதில் 181 யூடியூப் புரோபைல்களை முற்றிலுமாக அழித்துள்ளது. இதுவரை 9,372 ட்விட்டர் பதிவுகளும், 9,856 முகநூல் பதிவுகளும் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளன. போராட்டகாரர்களுக்கு ஆதரவாகவும் அரசுக்கு எதிராகவும் பதிவிட்டதால் 124 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இன்னும் 93 பேர் மீது FIR பதிந்துள்ளது. 19,000 சமூகவலைதள கணக்குகள் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளது. யோகியின் தலைமையிலான போலீசாரால் […]
உபி :பொது சொத்துக்களை சேதப்படுத்தாமலும் ரூ.6.27 லட்சத்தை வழங்கிய முஸ்லிம்கள். பயனளிக்கும் செயலா ?
உபியில் கலவரத்தை ஏற்படுத்தியது, அர்த்த ராத்திரியில் முஸ்லிம் வீடுகளில் புகுந்து பொருட்களை தாக்கி உடைத்து நகையும் பணமும் கொள்ளையடித்துப்போன காவிவல்துறை பற்றி காட்டுத்தீயாய் செய்திகள் உலாவரும் நிலையில்…. கலவரத்தை ஏற்படுத்தியமைக்காகவும் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதற்காகவும் மீரட் புலந்த்சாஹர் முஸ்லிம்கள் சிலர் சேர்ந்து யோகி அரசுக்கு ரூ.6.27 லட்சத்தை வழங்கியுள்ளனர். பொது சொத்தை சேதப்படுத்தினர் என கூறி சொத்துக்களை பறிமுதல் செய்ய யோகி அரசு பழிவாங்கும்(யோகியே சொன்ன வார்த்தை) நடவடிக்கை எடுத்து வரும் வேலையில் முஸ்லிம்கள் இவ்வாறு பணத்தை வசூலித்து […]
கேரள தேவாலயத்திற்குள் முஸ்லிம்களை போல் ஆடை அணிந்து CAA எதிர்ப்பு: விழித்தெழும் பழைய இந்தியா!
சுமார் 62 லட்சம் கிறுஸ்தவ ஜனத்தொகையை உடையது கேரளம். 3.34 கோடி மக்களில் அவர்கள் மூன்றாவது பெரிய மக்கட்தொகையுடைய குடிமக்களாக அங்கு வாழ்கின்றனர். இந்திய அரசு அறிவித்திருக்கும் குடியுரிமை சட்டத்திருந்த்த்திற்கு தங்களது ஆதரவு இல்லை என்பதை அவர்கள் வித்யாசமான முறையில் வெளிப்படுத்தி தங்களது தொப்புள்கொடி உறவுகளான முஸ்லிம்களுக்கு அனுசரணை செய்துள்ளனர். கடந்த வாரம் 22ந்தேதி- Catholic Bishops’ Conference of India (CBCI) சார்பாக ஒரு நிகழ்ச்சியில், “ஒருவரது குடியுரிமை அவரது சாதி,மதம் சார்ந்த அடையாளப்படுத்தப்பட கூடாது” […]
அஸ்ஸாம் :NRC குடியுரிமையை நிரூபித்த 426 முஸ்லிம் குடும்பத்தினர் வீடுகள் தகர்ப்பு,விரட்டியடிப்பு – பாஜக எம்எல்ஏ அராஜகம் ?
http://jamaateislamihind.org/eng/jamaat-provides-the-healing-touch-to-evicted-people-of-chotia-assam/
உபி : முதியவரை தாக்கி, வீட்டு பொருட்களை உடைத்து, நகை, பணத்தை திருடி சென்ற போலீசார் !
முஸ்லிம்கள் மீது தொடரும் யோகியின் பழிவாங்கும் படலம்? முஸாஃபர்நகரில் மரக்கடை வியாபாரம் நடத்தி வருபவர் 72 வயது ஹாஜி ஹமீத் ஹஸன். கடந்த வெள்ளியன்று அவரது வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் உபி போலீசார். இரவு 11 மணியளவில் , 8 வயது பேரனுடன் உறங்கிக்கொண்டிருந்த அவருக்கு வாயிலில் ஏதோ சத்தம் கேட்டு விழிப்புத்தட்டியுள்ளது. படுக்கையைவிட்டு எழுந்து பார்த்த போது 30 போலீசார், யூனிபார்மிலும் , மஃப்டியிலுமாக நின்று வீட்டின் கேட்டை உடைத்து , பெரிய சுத்தியலை […]
உபி : 7 மாத குழந்தைக்கு பால் வாங்க சென்ற அனஸை (21) சுட்டு கொன்ற போலீஸ்- அராஜக வெறியாட்டம்!
யோகி அரசின் வன்முறை வெறியாட்டம்? உபியின் பிஜ்னோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளியன்று உபி போலீசாரால் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களை பற்றிய விபரங்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகி வருகிறது. வீடியோ ஆதாரங்களை பார்க்கவும், பத்திரைகைகள் வெளியிடும் தரவுகளையும் படிக்கும் போதும் மனம் பதறுகிறது. டிசம்பர் 20 , அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவினை எதிர்த்து முஸ்லிம்கள் கூட்டமாக காந்தி சிலை முன்பு குழுமினர். அங்கிருந்து மக்களின் அணிவகுப்பு தொடர்ந்தது அதனை தடுத்து […]
உபி : ‘ஜெய் ஸ்ரீ ராம் என கத்திக்கொண்டு அலிகார் பல்கலை மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்’ : உண்மை கண்டறியும் குழுவின் கூட்டறிக்கை வெளியீடு!
ஜாமியா போராட்டத்தை போலவே வீரியம் பெற்ற அலிகார் மாணவர் போராட்டம், அங்கு உபி போலீசாரால் அரங்கேற்றப்பட்ட வன்முறை வெறியாட்டம் தொடர்பான செய்திகள் ஊடகங்களால் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்டுள்ளது. மாணவர்களை தேடித்தேடி தாக்கிய போலீசாரும் ஆர்ஏஎஃப் எனப்படும் ராபிட் ஆக்ஷன் ஃபோர்ஸும் , ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்களை எழுப்பியவாறு தாக்கியதாக மாணவர்கள் மற்றும் சம்பவத்தை நேரே கண்ட பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்னர் டெல்லி ஜாமியா மிலியாவில் தொடங்கிய பாஜக அரசின் […]
உபி : மக்களுக்கு உதவ சென்ற வழக்கறிஞரை பொய் வழக்கில் கைது செய்த போலீசார்!
உபி மாநில முதல்வரும் கோவில் தலைமை பூசாரியுமான யோகி தலைமையிலான போலீசார் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூர வன்மங்களை அரங்கேற்றி வருவது குறித்து பல்வேறு இணையவழி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் உ.பி.யில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்ட ரீதியாக உதவி வழங்குவதற்காக உபியில் உள்ள ஷம்லிக்குச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த 24 வயதான முஸ்லீம் வழக்கறிஞரான முகமது பைசலை உத்தரபிரதேச போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஐபிசி 145,149, […]
‘IAS லட்சியத்துடன் இருந்த 20வயதேயான எனது மகனை சுட்டு கொன்றுவிட்டனர்-‘ சுலைமானின் தாய் வேதனை !
உபி மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் வெள்ளியன்று போலீசாரால் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் இருபது வயதே நிறைந்த இருவரை போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 131 பேரை கைது செய்துள்ளது யோகி தலைமையிலான உபி போலீஸ். 21 வயதான அனஸ் மற்றும் 20 வயதேயான முகமது சுலைமான் இருவரையும் தான் வீடுபுகுந்து கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதுபற்றி கூறிய பிஜ்னோர் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் தியாகி கூறியபொழுது 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதில் 70 பேர் […]
NRC யின் எங்கள் பயணம்.. மத குடியுரிமையை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம்?
இந்த வருடத்தின் தொடக்கத்தில் மிகச்சரியாக ஜீன் 6 , அன்று என் அம்மா என்னை தொலைப்பேசியில் அழைத்து, நீயும் உன் சகோதரனும் நானும், என்ஆர்சி பட்டியலில் இடம்பெற்றுள்ளோம். உடனடியாக நாகோன் நகருக்கு புறப்பட்டுப்போய் நாம் நமது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமாம் என்றார் பதட்டமாக. அம்மா, இது பல வருடங்களாக நடக்கிறது, விடுங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றேன், அதற்கு அவர், இல்லை ஷாவோன் , அடுத்த நடவடிக்கை கைது தானாம், எனவே உடனடியாக புறப்படு என்றார்கள். நானும் டில்லியில் இருந்து […]
தமுல் (தமிழ்) ஒரு பழைய சொல்..
நம்ம கேப்டன் விஜயகாந்த் அடிக்கடி “தமிழ்” என்பதை “தமுல்” என உச்சரிப்பதை கேலி செய்திருப்போம். அவரது ஆங்கில உச்சரிப்பு போல இதுவும் தவறானது தான் போல என கிண்டல் செய்திருப்போம். ஆனால் உண்மையில் தமிழ் எனும் சொல்லை தமுல் என்றே பழங்காலத்திலும் உச்சரித்துள்ளனர் என்பதை இந்த விபரத்தை படித்த பிறகே புரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் புத்தகம்கார்த்தியா எ தமுல் இ போர்ச்சுகீஸ் என்ற ஒரு பைபிள். போர்த்துகீஸ் எழுத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல். அதன்முதல் தமிழ் […]