ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப்பொருட்கள் தர தமிழக அரசு தடை அறிவித்துள்ளது. நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. எனினும் இதற்கு முரணாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் சென்னை மாநகராட்சியுடன் இனைந்து உணவு விநியோகத்தில் ஈடுபட உள்ளதாக நேற்று தி இந்துவில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு தன்னார்வலர்கள், காட்சிகள் மற்றும் இயக்கத்தினர் ஊரடங்கு உத்தரவால் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய […]
States News
தன்னார்வலர்கள் உணவு அளிக்கத் தடை செய்வது பட்டினிச் சாவுக்கு வழிவகுக்கும்: ஜவாஹிருல்லா கண்டனம்
”கரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடங்காய்ச்சிகள். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசு மற்றும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள் நிறைவேற்றி வருகின்றன. தற்போது கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற காரணம் சொல்லி நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்யும் அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இச்சேவையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டள்ளது. மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது […]
உ.பி: உண்ண உணவின்றி 5 குழந்தைகளையும் கங்கையில் வீசி எறிந்த தாய்; ஊரடங்கில் தவிக்கும் ஏழை மக்கள் !
இன்று உத்தரபிரதேசத்தின் படோஹி மாவட்டம், ஜெகாங்கிராபாத்தில் உள்ள கங்கை நதியில் தனது ஐந்து குழந்தைகளை (ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, சிவசங்கர் மற்றும் கேசவ் பிரசாத்) வீசி எறிந்துள்ளார் ஒரு தாய். காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தவுடன், மூத்த காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தை அடைந்தனர், குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக நதியில் நீச்சல் அடிக்கவல்ல சில டைவர்ஸ் ஈடுபடுத்தப்பட்டனர். குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் மனநலம் குன்றியதாகத் தெரிகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும் (மோடி அரசு முறையான […]
வாகன ஓட்டிகளை சோதனையிட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை- தெலுங்கானா கமிஷ்னர் அறிவிப்பு ..
சோதனைசாவடிகளில் சோதனை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு எந்த வித அனுமதியும் வழங்கப்பட வில்லை என தெலுங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தின் புறநகர் நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.எஸ் சீருடையில் சிலர் லத்திகளை கொண்டு நிற்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. “ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் தெலுங்கானாவின் யாதத்ரி புவனகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் தினமும் 12 மணி நேரம் காவல் துறைக்கு உதவுகிறார்கள்.” என்று செய்தியுடன் @friendsofrss என்ற கணக்கில் இருந்து இந்த புகைப்படங்கள் முதலில் ட்வீட் செய்யப்பட்டது. இந்த […]
13 டன் அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன் தொகுதி மக்களுக்கு அனுப்பினார் ராகுல் காந்தி !
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சமூக சமையலறைகளில் (Community Kitchens) விநியோகிக்க 13 டன் அரிசி வழங்கியுள்ளார், எம்.பி யும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும்இந்த அரிசி சமமாக விநியோகிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அடீலா அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வயநாடில் மொத்தம் 51 பஞ்சாயத்துகள் மற்றும் ஐந்து நகராட்சிகள் உள்ளது. வயநாடு தொகுதியில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து சமுதாய சமையலறைக்கும் 500 கிலோ அரிசி + 50 […]
பாசிஸ்டுகளின் பொய் செய்திகளால் பழம், காய்கறிகளை விற்க தடை செய்யப்படும் முஸ்லிம் வியாபாரிகள்!
தப்லிகி ஜமாஅத்தினர் தான் கொரோனா வைரஸ் பரப்புகின்றனர் என்ற கருத்து கொண்ட போலி செய்திகள், வதந்திகளை தொடர்ந்து பாசிஸ்டுகள் பகிர்ந்து வருகின்றனர். இதனால் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளது. முஸ்லிம் பழ மற்றும் காய்கறி வியாபாரிகள் எச்சில் தடவி பொருட்களை விற்பதை போன்ற போலி வீடியோக்களை பாசிச பயங்கரவாதிகள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில், தெருக்களில் விற்கும் வியபாரிகளிடம் ஆதார் அட்டை கேட்கப்பட்டு அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் விரட்டி அடிக்கப்படுகின்ற கொடூரம் அரங்கேறி வருகிறது. டில்லி […]
உபி : கொரோனா பரவிவரும் வேளையில் லச்சக்கணக்கானோர் கூடும் ராமர் திருவிழாவுக்கு மாநில அரசு அனுமதி..?
இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசாங்கங்கள் அந்தந்த மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், உத்தரபிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ராம் நவாமி தினத்தன்று அயோத்தியில் ஒரு மெகா நிகழ்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ராம் நவமி மேளா/கண்காட்சி வருகிற மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளது இதில் லச்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வை நிகழ்வை கைவிடுமாறு மருத்துவ ஆலோசகர்கள் மாநில அரசுக்கு அறிவுறுத்திய […]
பதவிக்காக தன்னை தானே தாக்கிக்கொண்டு நாடகமாடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி-அம்பலமானது நாடகம் !
திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பகவான் நந்து. இவர் இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார். அவர் கடந்த செவ்வாயன்று, இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்கு செல்லும் போது அவரது இரு சக்கர வாகனத்தை மறித்து 7 பேர் கொண்ட கும்பலால் தாக்கபட்டதாக நேற்று செய்தி வெளியானது. தாக்குதலை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நந்து. மருத்துவமனைக்கு வெளியே நூற்று கணக்கான இந்துத்துவாவினர் கூடினர். வழக்கம் போல் […]
என்.பி.ஆர் குறித்து அமைச்சர் உதயகுமாரின் கண்துடைப்பு அறிவிப்பு…
தமிழக வரலாறு இதுவரை கண்டிராத அளவுக்கு மூன்று மாதங்களாக லட்சோப லட்சம் தமிழக மக்கள், பேரணி, ஆர்ப்பாட்டம், முற்றுகை, தர்ணா என நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.. கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் பெண்கள் குழந்தைகள், முதியோர் என “சாஹின் பாக்” என்ற பெயரில் இரவு பகலாக தொடர் முழக்கப் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். தொழில் நிறுவனங்கள், வியாபாரம், உழைப்பு, அன்றாட அலுவல்கள், குடும்பத்தை கவனிக்காமை, வருமானம் இழப்பு, உடல்நலம் […]
பசுமாட்டை வன்புணர்வு செய்து கொன்ற சுமேஷ்.. கேரளாவில் அரங்கேறிய கொடூரம்..
கண்ணூர்: பசுவைக் கொன்றது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாவோடைச் சேர்ந்த 33 வயதான அலேகாண்டி ஏ.கே.சுமேஷ் என்பவரை சக்கரக்கல் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. சமீப காலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒருபுறம் அதிகரித்து கொண்டிருக்க இதற்கிடையில் மிருகங்களையும் கூட விட்டுவைக்காமல் சிலர் இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கண்ணூரை சேர்ந்தவர் யூசுப், இவர் மாடுகளை பராமரித்து வருகிறார். இவர் பராமரித்து வந்த பசு ஒன்றை […]
பாஜகவிலிருந்து தான் விலகினேன், இந்துத்துவாவிலிருந்து அல்ல – உத்தவ் தாக்கரே அறிவிப்பு
பாஜகவிடம் இருந்துதான் சிவசேனா விலகியதே தவிர, இந்துத்துவ கொள்கையிலிருந்து விலகிக்கொள்ளவில்லை’ என அயோத்தியில் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாஜகவின் கூட்டணியிலிருந்து வெளியேறி, என்.சி.பி கட்சியுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிர முதல்வரான சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தியில் ராமா் கோயில் கட்ட ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தாா். அயோத்தியில் செய்தியாளா்ளிடம் பேட்டியளித்த உத்தவ் தாக்க்ரே. ‘நான் பாஜகவிடம் இருந்து தான் பிரிந்தேனே தவிர , இந்துத்துவ கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை. பாஜகவும், இந்துத்துவமும் ஒன்றல்ல. […]
குஜராத்: 2002 நரோடா காம் கலவர வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அதிரடி இடமாற்றம்..
குஜராத் : 2002 ஆம் ஆண்டு பாசிஸ்டுகளால் அரங்கேற்றப்பட்ட நரோடா காம் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி வழக்கை விசாரித்து வந்த சிறப்பு எஸ்ஐடி நீதிபதி, குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அதிரடியாக வல்சாட்டின் முதன்மை மாவட்ட நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். வழக்கு பின்னணி: குஜராத் நரோடா காம் படுகொலை என்பது உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்த ஒன்பது பெரிய கலவர வழக்குகளில் ஒன்றாகும். கோத்ரா ரயில் படுகொலையை […]
வரம்பு மீறிய உபி முதல்வர், பாடமெடுத்த அலஹாபாத் உயர்நீதிமன்றம் !
யோகி ஆதித்யநாத் என அழைத்து கொள்ளும் உபி முதல்வர் அஜய் பிஷ்த் சிங் பதவி ஏற்றது முதல் சிறும்பான்மையினர் மீது தாக்குதல், பாலியல் வன்முறைகள் என பல்வேறு விதங்களிலும் மாநில சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு புதைகுழியில் உள்ளது குறித்து அனுதினமும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் மோடி அரசின் கருப்பு சட்டங்களுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடிய அப்பாவி முஸ்லிம்கள் பலரை (20க்கும் மேற்பட்டோரை) சுட்டு கொன்றது அஜய் பிஷ்த்தின் காவல்துறை. மேலும் அந்த சமயத்தில் […]
கேரளாவை போல தெலுங்கானாவிலும் என்.பி.ஆருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் – மாநில காங்கிரஸ் கோரிக்கை ..
கேரள அரசு மற்றும் வேறு சில மாநிலங்களின் நடவடிக்கையை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு காங்கிரஸ் தெலுங்கானா பிரிவுத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான என் உத்தம்குமார் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவை கேட்டுக்கொண்டுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ), என்.பி.ஆர் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற மாநில அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை அவர் வரவேற்றார். […]
‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை, என் அப்பாவிடம் எப்படி இருக்கும்?’ தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ..
‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை. என் அப்பாவிடம் எப்படி இருக்கும்?’ என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சட்டசபையில் கூறி இருக்கிறார். ‘நாங்கள் நிலவுடமைக் குடும்பம்தான். ஆனால் ஒரு கிராமத்து வீட்டில்தான் நான் பிறந்தேன். ஊர்ப்பெரியவர் ஒருத்தர் “ஜென்ம நாமா” என்று எழுதிக் கொடுத்தார். அதில் அரசு சீல் எல்லாம் எதுவும் இல்லை. சும்மா ஒரு காகிதம்தான். எனக்கே இப்படி இருக்கும் பொழுது கிராமத்தில் வசிக்கும் தலித், பழங்குடி மற்றும் ஏழைகளை எப்படிப் போய் ஆவணம் கேட்பேன்?‘ […]