உபி போலீஸ் அராஜகம் பெண் போராட்டக்கார்கள் மீது தடியடி
CAA Kerala

கேரளா: நாளை 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்; 620 கி.மீ நீளமுள்ள மாபெரும் மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு !

நாளை குடியரசு தினத்தன்று கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) கூட்டணி கட்சிகளின் சார்பில் மனுஷ்ய மஹா ஸ்ரீங்கலா என்ற பெயரில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை மாபெரும் மனித சங்கிலியை அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 620 கி.மீ மனித சங்கிலி : கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களின் வழியாக 620 கி.மீ மனித சங்கிலி அமைக்கப்பட்டும். வடக்கே காசர்கோடு தொடங்கி தெற்கு கேரளாவின் திருவனந்தபுரம் வரை […]

rss chaddi terrorist
Hindutva Kerala Terrorism

கேரளா: குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி கைது !

கடந்த வாரம் கேரளாவின் கதிரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னியம் நயனார் சாலையில் அமைந்துள்ள காவல் சோதனை சாவடி மீது வெடிகுண்டு வீசிய குற்றத்தின் பேரில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கை சேர்ந்த கே.பிரபேஷை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கேரளாவில் உள்ள மலால் பகுதியை சேர்ந்த அவர் சம்பவத்தன்று வெடிகுண்டை வீசிவிட்டு கோவையில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் பதுங்கி உள்ளார். வெடிகுண்டு வீசிய தீவிரவாதியை தேடி வந்த திரு.நிஜீஷ் தலைமையிலான போலீசார் தீவிரவாதி பிரபேஷை அவரது […]

kerala mariage hindu
Kerala Muslims

பள்ளிவாசலில் நடைபெற்ற இந்து திருமணம், நகை பணம் வழங்கியும் உதவிய ஜமாத்தார் !

பள்ளிவாசல் ஜமாத்தார் உதவி: நேற்று கேரளாவின் ஆலப்புழா அருகே உள்ள செருவள்ளி முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் வளாகத்தில் ஒரு இந்து தம்பதியினரின் திருமணம் நடைபெற்றது. கணவரின் மரணத்தைத் தொடர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த மணமகளின் தாய் பிந்து, உதவிக்காக மசூதி குழுவை அணுகியதை அடுத்து அவரின் கோரிக்கையை ஜமாத்தார் உடனடியாக ஒப்புக்கொண்டனர். மணமகள் அஞ்சு மற்றும் மணமகன் சரத் ஆகியோர் மசூதி வளாகத்தில் ஒரு பூசாரி முன்னிலையில் மாலைகளை பரிமாறிக்கொண்டு இந்து முறைபடி சடங்குகளைச் செய்து […]

christian solidarity with muslims
CAA Christians Kerala

கேரள தேவாலயத்திற்குள் முஸ்லிம்களை போல் ஆடை அணிந்து CAA எதிர்ப்பு: விழித்தெழும் பழைய இந்தியா!

சுமார் 62 லட்சம் கிறுஸ்தவ ஜனத்தொகையை உடையது கேரளம். 3.34 கோடி மக்களில் அவர்கள் மூன்றாவது பெரிய மக்கட்தொகையுடைய குடிமக்களாக அங்கு வாழ்கின்றனர். இந்திய அரசு அறிவித்திருக்கும் குடியுரிமை சட்டத்திருந்த்த்திற்கு தங்களது ஆதரவு இல்லை என்பதை அவர்கள் வித்யாசமான முறையில் வெளிப்படுத்தி தங்களது தொப்புள்கொடி உறவுகளான முஸ்லிம்களுக்கு அனுசரணை செய்துள்ளனர். கடந்த வாரம் 22ந்தேதி- Catholic Bishops’ Conference of India (CBCI) சார்பாக ஒரு நிகழ்ச்சியில், “ஒருவரது குடியுரிமை அவரது சாதி,மதம் சார்ந்த அடையாளப்படுத்தப்பட கூடாது” […]

guiness record
Kerala

மரக்கன்று வளர்ப்பதில் கின்னஸ் உலக சாதனை படைத்த – நிஷானா கானம்

கேரளா, கெல்லூர் நான்காம் மைல் நவீன ஆங்கில பள்ளியின் முன்னாள் மாணவியான நிஷானா கானம் , 9,371 மரக்கன்றுகளை தமது கைகளால் வளர்த்து அவற்றை யூ.ஏ.இ அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். மரக்கன்றுகள் வளர்ப்பதில் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ள இவரது சொந்த ஊர்வயநாடு ஆகும், அங்கு புத்தேன்புராவில் கபீர்-ஹசினா தம்பதியினரின் மூத்த மகளான நிஷானா கானம், அமீரகத்தில் பணிபுரிபவராவார்.. தந்தை கபீர் யு.ஏ.இ அஜ்மானில் பணிபுரிகிறார்.. நிஷானா தொடக்கத்தில் அமீரகத்தின் ஹாபிடன்ட் பள்ளியில் பணிபுரிந்தபோதிலிருந்தே இந்த மரக்கன்றுகள் […]

pinarayi vijayan
CAA Kerala

சிஎபி : சங் பரிவாரங்களை விமர்சித்து – பினராயி விஜயன் கடும் தாக்கு !

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா என்பது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் அதன் ஜனநாயகத்திற்கும் எதிரானது என கருத்து தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பிணராயி விஜயன். இந்திய ஜனநாயகச்சட்டங்கள் தனிமனிதருக்கு கொடுத்திருக்கும் சாதி,மத,மொழி,கலாச்சார,பாலின மற்றும் அவரது தொழில் சார்ந்த அத்தனை உரிமைகளுக்கான மதிப்பினையும் சுதந்திரத்தினையும் குழிதோண்டி புதைக்கும் விதமான இச்சட்டம் நாட்டில் மதரீதியான பிரிவினைகளை உருவாக்கிடவே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று நாடுகளை சேர்ந்த குறிப்பிட்ட ஆறு மதம் சார்ந்தவர்களை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றுமுள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தை (இஸ்லாம்) பிரித்து வைத்து […]

kerala bjp hypocrisy
BJP Gaumata Kerala

கேரளா பாஜக அதிரடி; கூட்டுறவு சங்கத்தின் மூலம் மாட்டிறைச்சி விற்பனை !

மாட்டிறைச்சி விற்க பாஜகவின் மாவட்ட பிரிவு கூட்டுறவு சங்கத்தை அறிமுகப்படுத்துகிறது! பாரதீய ஜனதா கட்சியின் திருச்சூர் மாவட்ட பிரிவு இறைச்சி மற்றும் மீன்களை உற்பத்தி செய்வதற்கும், பதப்படுத்துவதற்கும், சந்தைப்படுத்துவதற்குமான ஒரு கூட்டுறவு சங்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்பே கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடமிருந்து முறையாக ஒப்புதலும் பெற்றுள்ளது மாவட்ட பாஜக தலைமை. கால்நடைகள் மற்றும் மீன் பொருட்களை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வதாக எங்கள் பைலாவில் குறிப்பிட்டுள்ளோம். “நாங்கள் இன்னும் இறைச்சியை பதப்படுத்தவோ விற்பனை […]

flood kerala
Kerala

வெள்ள பாதிப்பிற்கு 4,432 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு- கேரளா, தமிழகம் புறக்கணிப்பு!

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பல மாநிலங்களில் அளவிற்கும் அதிகமாக மழைபெய்ததாலும் சரியான நீர் மேலாண்மை திட்டங்கள் இல்லாததாலும் வெள்ளம் ஏற்பட்டது. அதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சில கேரளா, ஒடிஷா, ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகாவாகும். இன்றைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழுவில் கடந்த நிதியாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு கூடுதலாக 4432 ரூபாய் ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஃபானி சூறாவளி புயலால் பாதிக்கபட்ட ஒடிஷாவிற்கு 3338.22 […]

Floods Kerala

கேரள வெள்ளத்தில் கோயிலை சுத்தம் செய்யும் முஸ்லிம் இளைஞர்கள் : மக்களின் ஒற்றுமையும் குவியும் பாராட்டுக்களும்

மழை சற்று குறைந்து வருவதால் , கேரளம் மெல்ல இயல்பு நிலைக்கு மாறிட முயற்சித்த நிலையில் உள்ளது. பல நாட்களாக நீருக்கடியில் இருக்கும் கட்டிடங்களை சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. வயநாடு சுல்தான் பத்தேரி எனும் பகுதியில் உள்ள ராமர் கோயில் இரண்டு நாட்களுக்கும் மேலாக முழுவதுமாக தண்ணீருக்கு அடியில் இருந்தது . ஞாயிற்றுக்கிழமை நீர்மட்டம் குறைந்துவிட்ட நிலையில், முஸ்லிம் யூத் லீக்கின் (வெள்ளை காவலர்கள்-white guards ) தன்னார்வத் தொண்டர்கள் கோயிலை சுத்தம் செய்ய களம் […]

Indian Judiciary Kerala

”பிராமணர்கள் முன் ஜென்ம நல்வினையால் 2முறை பிறப்பவர்கள்.. எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்” – கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ்

“பிராமணர்கள் எப்போதும் உயர் பொறுப்பில் இருக்க வேண்டும்” கேரள உயர்நீதிமன்றத்தின் தற்போதய நீதிபதி வி.சிதம்பரேஷ் சமீபத்தில் பிராமணர்கள் மற்றும் அவர்களின் நல்லொழுக்கங்கள் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கொச்சியில் நடைபெற்ற தமிழ் பிராமணர்களின் உலகளாவிய கூட்டத்தில், நீதிபதி பிராமணர்களின் நற்பண்புகளை புகழ்ந்து தனது உரையைத் தொடங்கினார். நீதிபதியின் பேச்சு : “பிராமணர் என்பவர் யார் ? பிராமணர் என்பவர் “திவிஜன்மனா” – அதாவது இரண்டு முறை பிறப்பவர் … அதற்கு காரணம் முந்தைய […]

Gaumata Kerala States News

பாஜக MP க்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் மாடுகள் கடும் பட்டினியால் எழும்புகள் வெளியே தெரிய, சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படாது இருந்ததை அம்பலப்படுத்திய கேரள அமைச்சர்

Facebook ல் அம்பலப்படுத்திய கேரள அமைச்சர் கடகம்பல்லி சுரேந்திரன் ககடகம்பல்லி சுரேந்திரன் என்பவர் கேரள அரசின் ஒத்துழைப்பு, சுற்றுலா மற்றும் தேவஸ்வோம் துறை அமைச்சராக இருந்து வருபவர். அவர் பின் வருமாறு தனது facebook பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .. ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் அருகே பாஜக சார்பு தனியார் அறக்கட்டளை நடத்தி வரும் மாட்டு தொழுவம் ஒன்றில் மாடுகள் கொடுமை படுத்தப்படுவது குறித்து எனது கவனத்திற்கு வந்ததையடுத்து நேற்று நேரடியாக நானே சென்றேன் . […]