Floods Kerala

கேரள வெள்ளத்தில் கோயிலை சுத்தம் செய்யும் முஸ்லிம் இளைஞர்கள் : மக்களின் ஒற்றுமையும் குவியும் பாராட்டுக்களும்

மழை சற்று குறைந்து வருவதால் , கேரளம் மெல்ல இயல்பு நிலைக்கு மாறிட முயற்சித்த நிலையில் உள்ளது. பல நாட்களாக நீருக்கடியில் இருக்கும் கட்டிடங்களை சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன.

வயநாடு சுல்தான் பத்தேரி எனும் பகுதியில் உள்ள ராமர் கோயில் இரண்டு நாட்களுக்கும் மேலாக முழுவதுமாக தண்ணீருக்கு அடியில் இருந்தது . ஞாயிற்றுக்கிழமை நீர்மட்டம் குறைந்துவிட்ட நிலையில், முஸ்லிம் யூத் லீக்கின் (வெள்ளை காவலர்கள்-white guards ) தன்னார்வத் தொண்டர்கள் கோயிலை சுத்தம் செய்ய களம் இறங்கினர்.

அசுர வேகத்தில் செயல்பட்ட தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் கோயிலை முழுமையாக சுத்தம் செய்தனர்..

எங்கு பார்த்தாலும் சேரும் சகதியுமாக, குப்பை கூளங்களுடன் இருக்கும் இடத்தில இத்தனை சீக்கிரம் துப்பரவு பணிகளை மேற்கொண்டதற்கு முஸ்லிம் தொண்டர்களை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக வடக்கு கேரளாவில் வீடுகள்,கட்டிடங்கள் என பல பகுதிகள் 3 நாட்களுக்கும் மேலாக நீருக்கடியில் இருந்தன என்பது குறிப்பிட தக்கது