தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மத்திய டெல்லி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் லட்சத்தீவு மற்றும் மேகாலயாவில் துவங்க இருந்த என்பிஆர் மற்றும் 2021 க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவை ஒத்தி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. என்பிஆர் மற்றும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பிர்கான கால அவகாசத்தை மாற்றி அமைக்குமாறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றன. அந்தவகையில் கடந்த வெள்ளியன்று […]
NPR
என்.பி.ஆர் குறித்து அமைச்சர் உதயகுமாரின் கண்துடைப்பு அறிவிப்பு…
தமிழக வரலாறு இதுவரை கண்டிராத அளவுக்கு மூன்று மாதங்களாக லட்சோப லட்சம் தமிழக மக்கள், பேரணி, ஆர்ப்பாட்டம், முற்றுகை, தர்ணா என நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.. கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் பெண்கள் குழந்தைகள், முதியோர் என “சாஹின் பாக்” என்ற பெயரில் இரவு பகலாக தொடர் முழக்கப் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். தொழில் நிறுவனங்கள், வியாபாரம், உழைப்பு, அன்றாட அலுவல்கள், குடும்பத்தை கவனிக்காமை, வருமானம் இழப்பு, உடல்நலம் […]
கேரளாவை போல தெலுங்கானாவிலும் என்.பி.ஆருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் – மாநில காங்கிரஸ் கோரிக்கை ..
கேரள அரசு மற்றும் வேறு சில மாநிலங்களின் நடவடிக்கையை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு காங்கிரஸ் தெலுங்கானா பிரிவுத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான என் உத்தம்குமார் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவை கேட்டுக்கொண்டுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ), என்.பி.ஆர் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற மாநில அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை அவர் வரவேற்றார். […]
‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை, என் அப்பாவிடம் எப்படி இருக்கும்?’ தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ..
‘என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை. என் அப்பாவிடம் எப்படி இருக்கும்?’ என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சட்டசபையில் கூறி இருக்கிறார். ‘நாங்கள் நிலவுடமைக் குடும்பம்தான். ஆனால் ஒரு கிராமத்து வீட்டில்தான் நான் பிறந்தேன். ஊர்ப்பெரியவர் ஒருத்தர் “ஜென்ம நாமா” என்று எழுதிக் கொடுத்தார். அதில் அரசு சீல் எல்லாம் எதுவும் இல்லை. சும்மா ஒரு காகிதம்தான். எனக்கே இப்படி இருக்கும் பொழுது கிராமத்தில் வசிக்கும் தலித், பழங்குடி மற்றும் ஏழைகளை எப்படிப் போய் ஆவணம் கேட்பேன்?‘ […]
“சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற சட்டங்களால் பெண்களுக்கே அதிக பாதிப்பு”
சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற சட்ட திட்டங்கள் பெண்களுக்கு எதிரானவை, அது எப்படி என்கிறீர்களா? முதலில் ஒரு பொதுவான விஷயத்தை தெரிந்து கொள்வோம்: உலகில் எந்த நன்மை நடந்தாலும் அதில் முதலாவது மற்றும் அதிகப் பயன் பெறுவது ஆண்கள்தான். உதாரணத்துக்கு இந்தியாவில் பள்ளிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப் பட்ட பொழுது ஆண்கள்தான் முதலில் கல்வி கற்க அனுப்பப் பட்டனர். நவீன உடை இந்தியாவுக்கு வந்த பொழுது சமூகத்தில் எந்த முணுமுணுப்பும் இன்றி ஆண்கள்தான் சௌகரியமான பேண்ட் சட்டைக்கு மாறினார்கள். […]
“சென்சசுடன் என்.பி.ஆரை இணைக்கக் கூடாது” 190 பொருளாதார மேதைகள் மற்றும் சமூக அறிவியலாளர்கள் கடிதம்..
“மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு இரண்டையும் இணைக்கக் கூடாது” என்று190 பொருளாதார மேதைகள் மற்றும் சமூக அறிவியலாளர்கள் கையெழுத்திட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது பத்து வருடங்களுக்கொரு முறை எடுக்கப்படுவது. அதன்படி 2021க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டிற்கு மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் கிடைக்கும் விபரங்களை வைத்துத்தான் மக்கள் நலத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் இப்போது அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை […]
‘நாடு தழுவிய என்ஆர்சி நடத்தும் திட்டமில்லை’ என்று மோடி அரசு இப்போது கூறுமானால் மாநிலங்களவையில் அமித் ஷா கூறியது பொய்யா?
நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC) கொண்டுவரும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு தற்போது இல்லை என நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், இப்போதைக்கு மத்திய அரசிடம் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை (NRC) நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். முன்னுக்கு பின் முரண்பாடான பேச்சுக்கள்: “அசாம் (என்.ஆர்.சி) பயிற்சி உச்சநீதிமன்ற உத்தரவின் […]
CAA,NRC,NPR பற்றிய முழுமையான தகவல்கள் ..
இந்திய மக்களால் அதிகம் பேசப்படும் வார்த்தை CAA, NRC, NPR. இதை பற்றி பல தரப்பினரும் பல்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளனர். ஆதாரபூர்வமான தகவல்கள் மூலம் CAA, NRC, NPR பற்றி முழுமையாக அறிந்து கொள்வது தான் இந்த ஆக்கத்தின் நோக்கம். அரசு ஆவணங்கள் மற்றும் அரசின் அதிகாரபூர்வ இணையதளங்களில் உள்ள தகவல்களை கொண்டு தொகுக்கப்பட்ட செய்திகள் இவை. (ஆதாரங்கள் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது சரிபார்த்து கொள்ளவும்) 1955-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை சட்டம் (Citizenship Act, 1955) […]
NRC – NPR ஐ அமல்படுத்தாதே! சட்டமன்றம் நோக்கி பேரணி அறிவிப்பு!
NRC -க்கு வழிவகுக்கும் அபாயகரமான தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) தமிழகத்தில் அமல்படுத்தாதே ! சட்டமன்றம் நோக்கிப் பேரணி… நாள் : 6.01.2020, திங்கள் காலை 11 மணி.பேரணி தொடங்குமிடம் : சேப்பாக்கம் (விருந்தினர் மாளிகை அருகில்), சென்னை. அன்பார்ந்த நண்பர்களே! குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) எதிர்த்து இன்று நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நாடு பாசிசத்தை நோக்கிச் செல்கிறது என்ற அபாயத்தை புரிந்து கொண்ட […]
ஏப்ரல் மாதம் NPR கணக்கெடுப்பு என அறிவிப்பு; தீர்வென்ன? – அறிவுபூர்வமாக விளக்குகிறார் ஜைனுலாபிதீன்.
தமிழக முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து வைத்துள்ள ஒருவர் பிஜெ எனும் பி.ஜைனுலாபிதீன். இவர் சமீபத்தில் NPR குறித்து பேசிய உரை ஒன்று பெரும் அளவில் கவனத்தை பெற்றுள்ளது. உரையின் முக்கிய பகுதியை எழுத்து வடிவில் தருகிறோம். NRC CAA க்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்களும் பேரணிகளும் நடந்து கொண்டு இருக்கிறது. கிராமத்தில் இருந்து நகரங்கள் வரை இந்த போராட்டங்கள் வீரியம் அடைந்து இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் இதற்காக போராடுகிறார்கள் என்று தெரிந்தும் மத்திய அரசோ மாநில அரசோ […]
குடியுரிமை சம்மந்தமாக NPR-ல் உள்ள கேள்விகள் என்ன ? எந்த ஆவணங்கள் கேட்க்கப்படும் ?
NPR (தேசிய மக்கள்தொகை பதிவேடு) தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சம்மந்தமாக NPR-ல் உள்ள கேள்விகள் என்ன ? எந்த ஆவணங்கள் கேட்க்கப்படும் ? கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்க்கும் இப்போதுள்ள 2020 கணக்கெடுப்பிற்க்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதை அரசின் அதிகாரபூர்வ ஆவணங்கள் மூலம் பார்க்கலாம். 1. NPR-ல் 7 (i)-வது கேள்வி “Nationality as declared” (நீங்கள் எந்த நாட்டின் குடிமகன் ?)இதற்க்கு நீங்கள் இந்தியர் சொன்னவுடன், […]