NPR

குடியுரிமை சம்மந்தமாக NPR-ல் உள்ள கேள்விகள் என்ன ? எந்த ஆவணங்கள் கேட்க்கப்படும் ?

NPR (தேசிய மக்கள்தொகை பதிவேடு) தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சம்மந்தமாக NPR-ல் உள்ள கேள்விகள் என்ன ? எந்த ஆவணங்கள் கேட்க்கப்படும் ? கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்க்கும் இப்போதுள்ள 2020 கணக்கெடுப்பிற்க்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதை அரசின் அதிகாரபூர்வ ஆவணங்கள் மூலம் பார்க்கலாம்.

1. NPR-ல் 7 (i)-வது கேள்வி “Nationality as declared” (நீங்கள் எந்த நாட்டின் குடிமகன் ?)
இதற்க்கு நீங்கள் இந்தியர் சொன்னவுடன், அதிகாரி படிவத்தில் “1” என பதிவு செய்து கொள்வார். அடுத்த கேள்வி (7 (ii)) உங்களிடம் பாஸ்போர்ட் உள்ளதா ? என அதிகாரி கேட்பார் . உங்களிடம் பாஸ்போர்ட் இருந்தால் உங்கள் பாஸ்போர்ட் எண்ணை பதிவு செய்து கொள்வர்.

உங்களிடம் பாஸ்போர்ட் இல்லை என்று சொன்னால், அதற்க்கு மேல் எதுவும் கேட்க்காமல், அடுத்த கேள்விக்கு சென்றுவிடுவார். NPR கணக்கெடுக்கும் அதிகாரிகள் மக்களிடம் குடியுரிமையை சம்மந்தமாக எந்த வித வாக்குவாதத்திலும் ஈடுபட கூடாது என அரசிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (Do not get into any argument with the respondent regarding this)

Image result for passport

உங்களிடம் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் “Nationality as declared” என்ற பகுதியில் Indian-1 என்று தான் அதிகாரி பதிவு செய்ய வேண்டும். குடியுரிமை கோர இந்த NPR தகவல் பயன்படாது என அரசு தெரிவித்துள்ளது (This does not confer any right to Indian Citizenship)

குடியுரிமை பற்றிய கேள்வி கடந்த 2011 கணக்கெடுப்பில் இருந்தது, ஆனால் பாஸ்போர்ட் கேட்க்கப்பட வில்லை, இந்த 2020 கணக்கெடுப்பில் பாஸ்போர்ட் கேட்பது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

2. பெற்றோர்கள் பற்றிய கேள்வி (13-வது கேள்வி) :
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெற்றோர்களின் பெயர் மட்டுமே கேட்க்கப்பட்டது. இந்த 2020 NPR கணக்கெடுப்பில் பெற்றோர்களின் பிறந்த தேதி , பிறந்த இடம் புதிதாக கேட்க்கப்பட உள்ளது

அரசு உத்தரவு படி , இதற்க்காக ஆவணம் ஏதும் காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை, உங்கள் பெற்றோர்களின் பாஸ்போர்ட் இருந்தால் அதில் உள்ள பிறந்த தேதி, பிறந்த இடத்தை குறிப்பிடலாம், அல்லது ஆதார் கார்ட், டிரைவிங் லைஸன்ஸ் , வோட்டர் ஐடி என ஏதேனும் ஒரு ஆவணம் கொடுக்கலாம்.

எந்த ஆவணம் இல்லை என்றால், அதிகாரி அந்த இடத்தில் இல்லை என குறிக்கும் “-” என பதிவு செய்வார். (இந்த இடம் தான் சற்று கவலையாக உள்ளது) . பெற்றோர்கள் சம்மந்தமாக ஒரு ஆவணமும் இல்லாதவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.

Image result for passport aadhar voter card

3.பிறந்த தேதி (5-வது கேள்வி) மற்றும் பிறந்த இடம் (6-வது கேள்வி):
உங்களின் பிறந்த தேதி (birth date) மற்றும் பிறந்த இடத்திற்க்கு (birth place) ஆதார் கார்ட், பாஸ்போர்ட், வோட்டர் ஐடி, டிரைவிங் லைஸன்ஸ், பள்ளி சான்றிதழ் என ஏதேனும் ஒரு அரசு ஆவணம் காண்பிக்கலாம். ஆவணம் இல்லை என்றாலும், நீங்கள் சொல்லும் தகவலை அதிகாரி பதிவு செய்ய வேண்டும்

ஆதார் கார்ட், வோட்டர் ஐடி, டிரைவிங் லைஸன்ஸ் ஆகியவை அதிகாரபூர்வமாக கேட்க்கப்படும் ஆவணங்கள். குடியுரிமைக்காக பாஸ்போர்ட் இருந்தால் கேட்க்கப்படும். இந்த நான்கு ஆவணங்களை தவிர வேறு எந்த ஆவணமும் அதிகாரபூர்வமாக கேட்க்கப்படாது. இந்த நான்கு ஆவணங்களில் ஏதேனும் இல்லை என்றால் பிற ஆவணங்களை காட்டலாம்.

சுருக்கமாக சொன்னால், நீங்கள் கொடுக்கும் விபரங்களை அதிகாரி பதிவு செய்வார், ஆவணங்களை கேட்டு உங்களை நிர்பந்திக்காமல் நீங்கள் வழங்கும் ஆவணங்களை ஏற்று கொள்வார்.

இது ஒரு தகவல் பதிவு மட்டுமே. இந்த தகவலை வைத்து யார் மீதும் எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்காது என தொடர்ந்து கூறிவருகின்றது.

குடியுரிமை கேள்வியில் பாஸ்போர்ட் கேட்பது, மற்றும் பெற்றோர்களின் பிறந்த தேதி , பிறந்த இடம் கேட்பது ஆகியவை தான் சற்று கவலையாக உள்ளது. கல்வி அறிவில் பின் தங்கிய மக்கள் அதிகம் வாழும் நாட்டில் எல்லோரும் பாஸ்போர்ட் வைத்திருப்பர்கள், தாய், தந்தையின் ஆவணங்கள் வைத்து இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

NPR என்பது இஸ்லாமியர்கள் சம்மந்தபட்ட பிரச்சனை இல்லை. சாதி , மத பேதம் இல்லாமல் அனைவரும் NPR-ல் பதிவு செய்தே ஆக வேண்டும். ஆவணங்கள் இல்லாத அனைவரும் NPR-ஆல் பாதிக்கப்படுவார்கள்.

உண்மையில் NPR-ஆல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் குறைவாகதான் இருப்பார்கள். ஏனென்றால் இஸ்லாமியர்கள் கல்வியில் பின்தங்கியதால் பலர் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். எனவே பெரும்பாலும் இஸ்லாமியர்கள் பாஸ்போர்ட் வைத்து இருப்பார்கள். மேலும் ஹஜ், உம்ரா போன்ற புனித பயனங்களுக்காக பாஸ்போர்ட் எடுத்து வைத்து இருப்பார்கள்.

தாங்கள் NPR-னால் அதிகம் பாதிக்கப்பட போவதில்லை என்றாலும் பிற சமூக மக்கள் பாதிப்படைய கூடாது என்பதற்க்காக இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

பொது மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் புதிய கேள்விகளை தவித்து விட்டு 2011-ல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பைபோல் இந்த முறையும் நடத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

ஆக்கம் : S.சித்தீக் M.Tech