கேரளாவின் கும்ப்லாவில் உள்ள மதரஸாவில் பயிலும் மாணவர்களான ஹசன் சையத் (13) மற்றும் முனாஸ் (17) ஆகியோர் மீது ‘கிரண்’ என அடையாளம் காணப்பட்ட ஒருவன் தாக்குதல் நடத்தியுள்ளான் . மதரசா மாணவர்கள் தலையில் தொப்பி அணிந்திருந்ததை சகித்து கொள்ள முடியாமல், அவர்கள் வம்புக்கு இழுத்த கிரண், அவர்கள் இருவரையும் நோக்கி ” பாகிஸ்தானுக்கு திரும்ப போ” என கத்தி கொண்டே மாணவர்களை தாக்க துவங்கியுள்ளான். அவ்வழியே சென்ற மக்கள் கிரணை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். […]
Muslims
மைசூருவின் முதல் முஸ்லிம் பெண் மேயரானார் தஸ்னீம் சமியுல்லாஹ்!
மைசூர் மாநகராட்சியின் 158 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக முஸ்லீம் பெண் மேயராக தேர்வாகியுள்ளார் தஸ்னீம், வயது 33. மைசூர் நகரத்தின் மிக இள வயது மேயர் என்ற பெருமையும் பெறுகிறார் தஸ்னீம் . பிஏ பட்டதாரியான இவர், மைசூருவின் மகாராணி கல்லூரியில் பயின்றவர் இவரது கணவர் சமியுல்லாஹ், மீனா பஜாரில் எம்பிராய்டரி தொழில் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். தஸ்னீம் தந்தை, முனவ்வர் பாஷா, தையல்காரர் மற்றும் தாய், தஹ்ஸீன் பானு, […]
பள்ளிவாசலில் நடைபெற்ற இந்து திருமணம், நகை பணம் வழங்கியும் உதவிய ஜமாத்தார் !
பள்ளிவாசல் ஜமாத்தார் உதவி: நேற்று கேரளாவின் ஆலப்புழா அருகே உள்ள செருவள்ளி முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் வளாகத்தில் ஒரு இந்து தம்பதியினரின் திருமணம் நடைபெற்றது. கணவரின் மரணத்தைத் தொடர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த மணமகளின் தாய் பிந்து, உதவிக்காக மசூதி குழுவை அணுகியதை அடுத்து அவரின் கோரிக்கையை ஜமாத்தார் உடனடியாக ஒப்புக்கொண்டனர். மணமகள் அஞ்சு மற்றும் மணமகன் சரத் ஆகியோர் மசூதி வளாகத்தில் ஒரு பூசாரி முன்னிலையில் மாலைகளை பரிமாறிக்கொண்டு இந்து முறைபடி சடங்குகளைச் செய்து […]
CAA : கொல்லப்பட்ட அப்பாவிகளை கைவிட்ட பாஜக அரசு; 2 கோடி வசூலித்த மக்கள்!
CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது கர்நாடகாவின் மங்களூரு காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பாஜக வில் இருந்தும் கூட மனிதாபிமான அடிப்படையில் அம்மாநில முதல்வரே 10 லட்சம் இழப்பீடு தரப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் அறிவித்த சில மணி நேரத்திலேயே மேலிடத்து உத்தரவோ என்னவோ அப்படியே பல்டி அடித்து இழப்பீடு எல்லாம் தர முடியாது என்று சொன்னது மட்டுமல்லாமல் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட இருவரையும் “கிரிமினல்” என்று நா கூசாமல் அழைத்துள்ளார் […]
டாக்ஸிலா பல்கலையின் ரோபோடிக்ஸ் போட்டியில் மதரஸா மாணவர்கள் வெற்றி..
டாக்ஸிலா ஹைட்டெக் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ரோபோடிக் போட்டியில் ஜாமியா பைதுல் சலாம் மதரஸா மாணவர்கள் பங்கேற்றனர். மதரஸா மாணவர்கள் மற்ற 20 தலைசிறந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த போட்டியாளர்களை வீழ்த்தி ரோபாட்டிக்ஸ் போட்டியில் வெற்றிபெற்றுள்ளனர். அது மட்டுமின்றி உருது பேச்சுப் போட்டி மற்றும் அதே நாளில் ஹைடெக்கில் நடத்தப்பட்ட ‘ஸ்பெல்லிங் பீ ‘ போட்டியிலும் வென்றுள்ளனர். பொதுவாக மத்ரஸா மாணவர்கள் என்றாலே உலக அறிவு இல்லாதவர்களாகவும் மதவெறி கொண்டவர்களாகவும் மீடியாக்களால் சித்தரிக்கப்படும் வேலையில் மதரஸா மாணவர்களின் இந்த வெற்றியானது […]
உபி :பொது சொத்துக்களை சேதப்படுத்தாமலும் ரூ.6.27 லட்சத்தை வழங்கிய முஸ்லிம்கள். பயனளிக்கும் செயலா ?
உபியில் கலவரத்தை ஏற்படுத்தியது, அர்த்த ராத்திரியில் முஸ்லிம் வீடுகளில் புகுந்து பொருட்களை தாக்கி உடைத்து நகையும் பணமும் கொள்ளையடித்துப்போன காவிவல்துறை பற்றி காட்டுத்தீயாய் செய்திகள் உலாவரும் நிலையில்…. கலவரத்தை ஏற்படுத்தியமைக்காகவும் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதற்காகவும் மீரட் புலந்த்சாஹர் முஸ்லிம்கள் சிலர் சேர்ந்து யோகி அரசுக்கு ரூ.6.27 லட்சத்தை வழங்கியுள்ளனர். பொது சொத்தை சேதப்படுத்தினர் என கூறி சொத்துக்களை பறிமுதல் செய்ய யோகி அரசு பழிவாங்கும்(யோகியே சொன்ன வார்த்தை) நடவடிக்கை எடுத்து வரும் வேலையில் முஸ்லிம்கள் இவ்வாறு பணத்தை வசூலித்து […]
அஸ்ஸாம் :NRC குடியுரிமையை நிரூபித்த 426 முஸ்லிம் குடும்பத்தினர் வீடுகள் தகர்ப்பு,விரட்டியடிப்பு – பாஜக எம்எல்ஏ அராஜகம் ?
http://jamaateislamihind.org/eng/jamaat-provides-the-healing-touch-to-evicted-people-of-chotia-assam/
உபி : மக்களுக்கு உதவ சென்ற வழக்கறிஞரை பொய் வழக்கில் கைது செய்த போலீசார்!
உபி மாநில முதல்வரும் கோவில் தலைமை பூசாரியுமான யோகி தலைமையிலான போலீசார் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூர வன்மங்களை அரங்கேற்றி வருவது குறித்து பல்வேறு இணையவழி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் உ.பி.யில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்ட ரீதியாக உதவி வழங்குவதற்காக உபியில் உள்ள ஷம்லிக்குச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த 24 வயதான முஸ்லீம் வழக்கறிஞரான முகமது பைசலை உத்தரபிரதேச போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஐபிசி 145,149, […]
3000 பேர் இஸ்லாத்தை தழுவ முடிவு! தீண்டாமை சுவர்|நாகை திருவள்ளுவன் கைது எதிரொலி !
தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியில் 22.12.19அன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கோவை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் தீண்டாமை சுவற்றினால் 17 அப்பாவி தலித்துகள் பலியாகினர். காரணமானவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நீதிக்காக போராடிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மீது தாக்குதல் நடத்தி இன்று வரையிலும் […]
குடியுரிமை திருத்த சட்டம் (CAA) மற்றும் என்ஆர்சி எளிய வார்த்தைகளில்..
‘CAB என்பது வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக உள்ளே நுழையும் வந்தேறிகளுக்குத்தானே பொருந்தும், நீ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் சட்டவிரோத குடியேற்றத்தை நீ ஆதரிக்கிறாய் என்று அர்த்தமா? ஒன்று, இந்த சட்டம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவர்களுக்கு மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது; இரண்டு, இது இஸ்லாமிய நாட்டு ஒடுக்குமுறைகளை மட்டும் பேசுகிறது; இதர நாட்டு ஒடுக்குமுறைகள் பற்றி கவலை கொள்வதில்லை. மூன்று, அரசே மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது இந்தியாவின் செக்யூலர் அரசியல் சாசனத்துக்கு எதிரானது; நான்காவது, இது இந்திய […]
ரோஹிங்கியா இன படுகொலை – காம்பியா நாடு சர்வதேச நீந்திமன்றத்தில் புகார்!
காம்பியா…..காம்பியா….. மியான்மரின் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு நீதி வேண்டி, காம்பியா நாட்டு பிரதிநிதிகள் தாமாக முன்வந்து டென்மார்க் நாட்டில் அமைந்திருக்கும் சர்வதேச நீதி ஆணையமான “International Court of Justice” ல் புகாரளித்திருந்தது. அதற்கான ஹியரிங் கடந்த மூன்று நாட்களாக டென்மார்க்கின் ,ஹாக் நகரத்தில் அமைந்துள்ள நீதி ஆணையத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ரோஹிங்ய முஸ்லிம்கள் கடந்த காலங்களில் பட்ட அவதிகளையும் இன்னல்களையும் விடியோ ஆதாரங்களாகவும் , ஐநா துருப்புகள் அளித்த சாட்சியங்களை சமர்ப்பித்தும் காம்பியா நாட்டு நீதித்துறை அமைச்சர் அபுபக்ர் […]
‘முஸ்லிம்களுக்கு அநீதியிழைத்தால் நானும் முஸ்லிமாக மாறுவேன்’ – சூளுரைத்த ஹர்ஷ் மந்தர்!
பிரபல எழுத்தாளரும் ,உலகறிந்த சமூக சேவகருமான ஹர்ஷ் மந்தர் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் கூட. மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப்பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்ற பெருமையை விட இவர், கலவரங்களில் அனாதைகளாக்கப்பட்ட முஸ்லிம்,தலித் மற்றும் பழங்குடியினருக்காவும் , மனநல காப்பகங்களில் பிள்ளைகளாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்ட மனநோய் பாதித்தவர்களை காப்பக கொடுமைகளில் இருந்து மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வருபவர் என்கிற பெருமதிப்பு உண்டு. “உணவு எனது உரிமை”- என்ற பெயரில் […]
ரம்ஸான் அலி – சமஸ்கிருத பேராசிரியரானார்!
பனாரஸ் இந்து பல்கலையில் சமஸ்கிருத துறை துணை பேராசிரியராக அறிவிக்கப்பட்ட பிறகு பெரோஸ் கான் ,மிகுந்த மன உளைச்சல்களுக்கும், மாணவர்களின் கண்டனங்களுக்கும் ஆளானார். மாணவர்களது அட்ராசிடியில் பயந்து அவர், பல்கலைக்கு பணிபுரிய வருவதற்கே பயமாக உள்ளது என்றார். இந்து பல்கலையில் அதுவும் சமஸ்கிருத மொழி பயிற்றுவிக்க ஒரு முஸ்லிமை அனுமதிக்கமாட்டோம் என சில இந்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி வகுப்புகளை நடத்தவிடாமல் செய்துகொண்டிருந்த வேளையில் , சத்தமே இல்லாமல் மேற்கு வங்க மாநிலம், பேளூர் ராமகிருஷ்ண மிஷன் […]
7 பெண்கள் உட்பட 22 முஸ்லிம்கள் நீதிபதிகளாக தேர்வு- பீகாரில் சாதனை!
பீகாரில் நடைபெற்ற நீதித்துறை சேவைகளுக்காக நடைபெற்ற தேர்வில் 22 முஸ்லிம் இளைஞர்கள் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக 7 பெண் முஸ்லிம் பெண் நீதிபதிகள் உள்ளனர். இந்திய நீதித்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இத்தகைய வெற்றி என்பது மகிழ்ச்சியானதென மூத்த வழக்கறிஞர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார். மேலும் சனம் ஹயாத் என்ற மாணவி முதல் பத்து இடங்களிலும் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக உ.பி யில் […]
பாபரி மஸ்ஜித் விவகாரம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது -TNTJ
சுதந்திர இந்தியாவில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமலிருந்த பாபர் மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. எந்தவொரு வழக்கிலும் சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பளிக்க வேண்டும் என்று தான் இந்திய அரசியல் சட்டம் கூறுகின்றது. அதையே உச்ச நீதிமன்றமும் வலியுறுத்துகிறது. ஆனால் பாபர் மஸ்ஜித் தீர்ப்பில் அத்தகைய சட்ட அடிப்படை விதிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டு ஐநூறு ஆண்டுகள் ஆகிவிட்டதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் அதே இடத்தில் கோவில் கட்டலாம் என்று அனுமதி […]