பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் ஜாமீன் மனுவை லக்னோ அமர்வு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. இம்மாத தொடக்கத்தில் விசாரணை முடிந்து, அக்டோபர் 12ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி சஞ்சய் சங்கர் பாண்டே உத்தரவிட்டார். இதனால் அவர் சிறையிலேயே மீண்டும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிப்ரவரி 2021 இல் கப்பன் மற்றும் உள்ளிட்ட சிலருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்தது. கப்பன் மீது […]
Muslims
புகழ்பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா உட்பட 300க்கும் மேற்பட்ட மதரஸாக்களின் மீதான தடை சட்ட விரோதமானது – எஸ்டிபிஐ கண்டனம்..!
புகழ்பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் உட்பட 300க்கும் மேற்பட்ட மதரஸாக்களை சட்ட விரோதமாக்கிய உத்தரபிரதேச பாஜக அரசாங்கத்தின் செயல் முஸ்லீம் சமூகத்தை அந்நியப்படுத்தும் ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தின் ஒரு பகுதி என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் வழ.ஷர்புதீன் அஹமத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாருல் உலூம் தேவ்பந்த் உட்பட 300க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் மாநில மதரஸா கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அவர்கள் ஒரு கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்ததாக உத்தரபிரதேச அரசாங்கம் […]
கேரளா : 13 ஆண்டுகள் தீவிரவாத பட்டத்தை சுமந்த 5 முஸ்லிம்கள் ! இறுதியில் NIA நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என விடுதலை!
கேரளாவில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெடிபொருள் பறிமுதல் செய்த வழக்கில் 5 முஸ்லிம்கள் தேசிய புலனாய்வு துறை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்! பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் தடியான்டாவிடே நசீர், ஷராபுதீன் உள்ளிட்ட 5 முஸ்லிம்கள், மற்றும் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வெடிமருந்துகளை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 3 பேரும் தேசிய புலனாய்வு முகமையின் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். “சட்டவிரோதமாக வெடிமருந்துகளை வைத்திருந்ததற்கும், இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்பு உண்டு என்று கூறுவதற்கும் […]
ஹைதராபாத்: குதுப் ஷாஹி மசூதி நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது! இந்து தெய்வ சிலை அகற்றம்!
ஹைதராபாத்: ராய்துர்காமில் உள்ள பழமையான குதுப் ஷாஹி மசூதியின் கூட்டுக் கணக்கெடுப்பு, தெலுங்கானா மாநில வக்ஃப் வாரியம் மற்றும் ரங்கா ரெட்டி மாவட்ட அதிகாரிகளால் புதன்கிழமை மஸ்ஜித் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் AIMIM எம்எல்ஏ கவுசர் மொகிதீன் முன்னிலையில் நடைபெற்றது. ஆவணங்களை சரிபார்த்த பிறகு, சர்ச்சைக்குரிய சர்வே எண் 82 மசூதிக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது. பள்ளிவாசல் வளாகத்தில் இந்து தெய்வம்: அதனுடன், குதுப் ஷாஹி மசூதியின் எல்லைச் சுவரைப் புனரமைப்பதற்காக ரூ. 5 லட்சம் […]
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்திற்கு அருணா ஜெகதீசன் ஆணையம் பாராட்டு!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களின் நலனை விரும்பி சேவையாற்றிய தமுமுகவிற்கு பாராட்டு துன்பத்தைப் பொருட்படுத்தாமல் சாதி, இனம், சமூகம் அல்லது மதம் ஆகியவற்றைப் பாராமல் மனித நேயத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் (TMMK) செய்த விலைமதிப்பற்ற சேவை ஆகும். எந்தப் பக்கமிருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லா நிலையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு இயந்திரம் முற்றிலும் வெறும் பார்வையாளராக இருந்த நேரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் […]
உ.பி : கும்பலாக வீட்டிற்குள் புகுந்து முஸ்லிம் விவசாயியை அடித்து கொன்ற கொடூரம்!
உ.பி.யில் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமியர்! கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அன்று, இரவு 10:15 மணியளவில், உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள வினய்பூர் கிராமத்தில் வசிக்கும் தாவூத் அலி தியாகி, தனது வீட்டிற்கு வெளியே ஒரு கட்டிலில் அமர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். தாவூத்தின் மருமகன் நயீம் தியாகி மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் அக்ரம், அவருக்கு அருகில் அமர்ந்திருந்தனர். திடீரென்று 6,7 பைக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த ஒரு கும்பல், தியாகி மீது தாக்குதல் […]
உலக அளவில் இஸ்லாமிய வெறுப்பு டிவீட்டுகளில் இந்தியா முதலிடம் என ஆய்வில் தகவல்..!
சமூக ஊடகங்களில் ஏறக்குறைய 86 சதவீத முஸ்லிம்களுக்கு எதிரான பதிவுகள், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவிலிருந்து உள்ளது என்று ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட இஸ்லாமிய கவுன்சில் ஆஃப் விக்டோரியாவின் (ICV) ஆய்வு அறிக்கை கண்டறிந்துள்ளது. ட்விட்டரில் கடந்த 28 ஆகஸ்ட் 2019 முதல் 27 ஆகஸ்ட் 2021 க்கு இடையில் (மூன்று ஆண்டுகளில்) செய்யப்பட்ட டிவீட்டுகளில் குறைந்தது 3,759,180 இஸ்லாமிய வெறுப்பு இடுகைகள் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு “தேவையான […]
உபி: ஆடு தனது வீட்டில் மேய்ந்ததற்காக , பாஜக தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகளால் அடித்துக் கொல்லப்பட்ட முஸ்தகீம்.!
உ.பி: கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி, பதோஹியின் கத்ரா பஜாரின் ரசூலியத் கான் பகுதியில் பாஜக தலைவர் அடங்கிய 21 பேர் கொண்ட கும்பலால் முஸ்தகீம் (55) படுகொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பிறகு பலவந்தமாக உடல் அடக்கமும் செய்யப்பட்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். எனினும் இது ஊடகங்களில் பெரிய அளவில் செய்தியாக வெளி வரவில்லை. “எங்களிடம் 2, 3 ஆடுகள் உள்ளன. அருகில் உள்ள பாஜக தலைவர் சந்தீப்பின் வீட்டில் புல்லை மேய்ந்து விட்டது. இதில் […]
உபி: 19 வயது ஷாருக் சுட்டுக்கொலை!
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள பராலி கிராமத்தில் ஷாருக் என்ற 19 வயது இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். முசாபர்நகரில் வசிப்பவரும் கூலித் தொழிலாளியுமான ஷாருக் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரும் அவரது நண்பரும் வீடு திரும்பி கொண்டிருக்கும் போது, நீங்கள் திருடர்கள் என முத்திரை குத்தி, தாக்கத் தொடங்கப்பட்டதாக ஷாருக்கின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இறந்தவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட தரம்வீர் மற்றும் ஓம்பல் ஆகிய […]
உபி : ஜமா பள்ளிவாசல் கோவில் என அங்கு வழிபாடு நடத்த வழக்கு; விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்!
பதாவுன் நகரில் உள்ள ஜமா மஸ்ஜித் ஷம்சி, சிவன் கோயில் என்றும், சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்து மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் சனிக்கிழமை தெரிவித்தார் உபி: பதாவுன் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களின் ஜமா பள்ளிவாசல், கோவிலை இடித்து கட்டப்பட்டது என்று இந்துத்துவா அமைப்பான அகில பாரதீய இந்து மகாசபா (ABHM) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்: ஆகஸ்ட் […]
ஹரியானா: உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மதரசா மாணவர் !
பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில், காணாமல் போன 11 வயது சிறுவன் நூஹ் நகரில் உள்ள மதரஸாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை மதரஸாவில் இருந்து காணாமல் போன சிறுவன், திங்கட்கிழமை பிரார்த்தனை கூடத்தை ஒட்டியுள்ள பழைய அறையில் இருந்து உடல் அழுகிப்போன நிலையில் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சமீர் என அடையாளம் காணப்பட்ட அந்த சிறுவர், ஷா சௌகா கிராமத்தில் உள்ள தர்கா வாலா மதரஸாவில் தங்கியிருந்தது படித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். சிறுவன் கொலை செய்யப்பட்டதாக […]
இரவு 11:30 மணிக்கு கூடிய நீதிமன்றம்; ஈத்காவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி !
அஞ்சுமன்-இ-இஸ்லாம் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் திட்டமிட்டபடி நடத்தலாம் என அனுமதி அளித்தது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு: ஹுப்பள்ளி ஈத்கா மைதானத்தில் விநாயகர் பந்தல் அமைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது. நீதிபதி அசோக் எஸ் கினகி தலைமையிலான பெஞ்ச் இரவு 11.30 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஹுப்பள்ளி மைதானம் தொடர்பாக ‘சொத்து தகராறு ஏதும் இல்லை” […]
ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதித்த உயர்நீதிமன்றம்!
புதுடெல்லி: பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளித்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: முஸ்லீம் அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்கக் கோரினார். அப்பகுதியில் தேவையற்ற மத பதற்றம் உருவாக்கப்படுவதாக சிபல் தெரிவித்தார். சுருக்கமான சமர்ப்பிப்புகளைக் கேட்ட உச்ச […]
தெலுங்கானா: பாஜக எம்எல்ஏ டி.ராஜா நபிகளார் குறித்து இழிவாக பேசிய நிலையில், வெறுப்புப் பேச்சுக்களை நாங்கள் ஆதரிப்பதில்லை என மாநில பாஜக விளக்கம் !
ஹைதராபாத்: நபிகள் நாயகம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ ராஜா சிங் கூறிய இழிவான கருத்துக்களில் இருந்து தெலுங்கானா மாநில பாஜக விலகியுள்ளது. “எங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது, இதற்கு மாறாக யாரும் பேசியிருந்தால், நாங்கள் அதைக் கவனிப்போம்” என்று பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் தெரிவித்துள்ளார். கோஷாமஹாலைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஜெய் ஸ்ரீ ராம் சேனலில் யூடியூப்பில், திங்கள்கிழமை இரவு வெளியிட்ட காணொளியில் நபிகளார் குறித்து இழிவான […]
டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தகவல் !
டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு குடியிருப்புகள் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு: புதுதில்லியில் மிக மோசமான நிலையில் வசித்து வரும் ரோஹிங்கியா அகதிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகஸ்ட் 17 அன்று தெரிவித்தார். புதுதில்லியில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகளுக்கான […]