உபி: சமூக வலைதளங்களில் பயங்கரவாதியாக விமர்சிக்கப்படும் நரசிங்கானந்த் சரஸ்வதி நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறாக பேசியதற்கு ஜனநாயக ரீதியாக, அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவித்த100 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மீது உத்தரபிரதேசத்தின் பிலிபிட் காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக பிரசித்திமிக்க உருது செய்தித்தாள் இன்குலாப் தெரிவித்துள்ளது. விதி மீறல் என குற்றச்சாட்டு: போராட்டக்காரர்கள் கொரோனா கால சமூக இடைவெளியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் மேலும் பஞ்சாயத்து தேர்தல் காரணமாக இப்பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாகவும் […]
Islamophobia
உபி: ஹோலி கொண்டாட்டத்தின் பெயரில் முஸ்லிம் குடும்பத்தார் வீட்டினுள் நுழைந்து பொருட்களை நாசம் செய்த பாசிச கும்பல் !
உபி யில் மோடியின் தொகுதியான வாரணாசியில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பாசிச கும்பல் ஒன்று ஒரு முஸ்லீம் குடும்பத்தார் வீட்டினுள் நுழைந்து, அவர்களின் வீட்டு பொருட்களையும், ஒரு சிறிய தொழிற்சாலையையும் அடித்து நொறுக்கி, அங்கு வசிக்கும் பெண்களையும் தாக்கி உள்ளனர். வீட்டில் இருந்த பணத்தையும் திருடி சென்றுள்ளனர். காவல்துறையினர் குண்டர்களுடன் பக்கபலமாக இருந்து பாதிக்கப்பட்டவர்களை மேலும் தாக்கி முஸ்லிம்கள் மீதே வழக்கு பதிவு செய்தனர் என சப்ரங் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. காவல்துறை மற்றும் சட்டத்தை […]
‘மீண்டும் 24 மணி நேரமாக உணவு வழங்கப்படவில்லை’: சித்திக் கப்பனின் மனைவி வேதனை ..
யுஏபிஏ குற்றம் சாட்டப்பட்டவரும், கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளருமான சித்திக் கப்பன், மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட அழைத்து வரப்பட்ட நாளில், அதற்கு முன்பான 24 மணி நேத்தில் அவருக்கு எந்த உணவும் வழங்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல் தி க்விண்ட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். அவரது மனைவி 37 வயதான ரைஹானா சித்திக்கிடம் பேசினோம், இவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல என்று கூறினார். அவரது வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸையும் நாங்கள் அணுகினோம்,இவ்வாறு மீண்டும் […]
இந்துத்துவாவினர் பிரச்சனை செய்ததால் பள்ளிவாசலின் ஒரு பகுதியை முஸ்லிம்களே இடித்த அவலம்!
புது டில்லி: புது டில்லியில் உள்ள உத்தம் நகரில், 1980 -களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட ராஸா ஜமா பள்ளிவாசலும், சனாதன் கோயிலும் வெறும் 25 அடி இடைவெளியில் அருகருகே கட்டப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. ஆனால் தற்போதைய பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளும் அரசியல் தலைவர்களால் இந்த அமைதியான பன்முகத்தன்மை மாறி குறிப்பிட்ட மதச்சார்பு நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை விஸ்வருபம் எடுத்த நிலையில் , 1980 களில் இருந்து வசித்து வந்த […]
‘முஸ்லீம் பெண்கள் ‘புர்கா’ அணிவதில் இருந்து விடுவிக்கப்படுவார்கள், அது ஒரு தீய வழக்கம்’ – பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப்
உத்தரபிரதேச பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா கடந்த புதன்கிழமையன்று முஸ்லீம் பெண்கள் ‘புர்கா’ அணிவதில் இருந்து “விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறினார். இதை தீய வழக்கம் என்று வர்ணித்த அவர், இதனை இந்தியாவில் தடை செய்யப்பட்ட மூன்று தலாக் சட்டத்துடன் ஒப்பிட்டு பேசினார். மசூதிகளில் ஒலிபெருக்கிகள் காரணமாக தனது கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், நீதிமன்ற உத்தரவுகளின்படி சப்தத்தின் அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் கூறி, பல்லியா மாவட்ட மாஜிஸ்திரேடுக்கு அமைச்சர் எழுதிய கடிதம் எழுதியுள்ள […]
பிரான்ஸ்: ஹலால் இறைசிக்கு தடை விதிக்கும் வகையில் சுற்றறிக்கை !
பிரெஞ்சு வேளாண்மை மற்றும் உணவு அமைச்சகத்தின் சுற்றறிக்கையின்படி, ஹலால் இறைச்சிகான தடை 2021 ஜூலை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் மசூதி இயக்குனர் செம்செடின் ஹபீஸ் , லியோன் மசூதி கமல் கப்டேன் மற்றும் எவ்ரி மசூதி இயக்குனர் கலீல் மாரூன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் பிரெஞ்சு அரசாங்கத்தின் “தீவிர அல்ட்ரா செக்குலர்” அணுகுமுறையை விமர்சித்ததோடு, “வேளாண்மை மற்றும் உணவு அமைச்சகத்தின் இச்சுற்றறிக்கை நாட்டின் மிக பெரும் முஸ்லீம் சமூகத்திற்கு எதிர்மறையான செய்தியை […]
சிஏஏ க்கு எதிராகப் போராடியதாக அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது ..
உபி : அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சமூகசெயல்பாட்டிற்கான படிப்பில் முதுநிலை இறுதியாண்டு பயிலும் ஃபர்ஹான் ஜூபேரி, அதே துறையில் இளநிலை பயிலும் ரவிஷ் அலிகான் என்ற இரு மாணவர்கள் CAA-வுக்கு எதிராகப் போராடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு,கடந்த 28 ஆம் தேதி வியாழக்கிழமை உ.பி போலீஸால் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் கைது செய்யப்பட்ட ரவிஷ் அலிகான் பிறகு விடுவிக்கப்பட்டாலும், பர்ஹான் சிறையில் அடைக்கப்பட்டார். ஊரடங்கில் கைது வேட்டை: கொரோனாவுக்காக நான்காம் கட்ட ஊரடங்கை நாடு எதிர்கொண்டுள்ள […]
‘இது குஜராத். உன்னை சுட்டு கொன்றால் எனக்கு பதவி உயர்வு தான் கிடைக்கும்’ – வழக்கறிஞர் பிலாலை மிரட்டிய போலீஸ்!
குஜராத் மாநிலத்தில் உள்ள கொசம்பா என்ற ஊரில் பள்ளிவாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான FIR நகல் வேண்டும் எனக் கோரியதற்காக அக்காவல் நிலைய ஆய்வாளர் வழக்கறிஞர் பிலாலை லாக்-அப்பில் 8 மணி நேரம் அடைத்து வைத்துள்ளார். பள்ளிவாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 16ஆம் தேதி பள்ளிவாசல் நிர்வாகிகள் சிலர் கொசம்பா காவல்நிலையம் சென்று புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் FIR பதிவு செய்யப்பட்டாலும், மறுநாள் வந்து FIR நகல் பெற்றுக் கொள்ளுமாறு அவர்களிடம் […]
பசுவைக் கொன்றதாக பரவிய வதந்தியின் பேரில் முஸ்லிம் கிராமவாசிகளைக் கொடுமை செய்த உபி போலீசார்!
உ.பியிலுள்ள ஃபரித்பூர் காஜி என்னும் ஊரைச் சேர்ந்த 7 முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ள விபரம்: கடந்த மே 8 ஆம் தேதி கிட்டத்தட்ட நோன்பு திறக்கும் இஃப்தார் சமயத்தில் வந்த காவல்துறையினர் அவர்களை வசை பாடியதோடு, அவர்களது வீட்டுகளையும் தாக்கினார்கள். குறிப்பாக சமையல் பொருட்களை சேதப்படுத்தி, பாத்திரங்களை உடைத்து, மீதமிருந்த உணவுப் பொருட்களை சிதறடித்தனர். மேலும் அங்கிருந்த ஆண்களைத் தாக்கியதோடு, 3 பேர்களை கைது செய்து சில கி.மீ தூரத்திலுள்ள பிஜ்னோர் நகரிலுள்ள கோட்வாலி காவல் […]
இந்திய அரசை இஸ்லாமிய வெறுப்பை உமிழும் அரசாக அறிவிக்க, அமெரிக்காவிலுள்ள செயிண்ட் பால் நகரக் கவுன்சில் முடிவு!
“இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டி, இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும் கொள்கை”யை இந்தியா பின்பற்றுவதைக் கண்டிக்கும் தீர்மானத்தை இரு வார கால தாமதத்திற்குப் பிறகு செயிண்ட் பால் நகர நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்ஸிலின் மின்ன சோட்டா மாகாணப் பிரிவு, மிட்செல் ஹேம்லின் சட்டப் பள்ளியின் ‘ இன அழிப்பில்லா உலகம்’ மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை ஆகியவற்றின் ஆதரவைப் பெற்ற இந்நடவடிக்கையை இந்து அமெரிக்க நிறுவனம், மின்னசோட்டாவின் இந்திய சங்கம், உலகளாவிய ஒடுக்கப்பட்டோருக்கான கூட்டணி ஆகியவை எதிர்த்தன. […]
‘முஸ்லிம் என நினைத்து கொடூரமாக தாக்கிவிட்டோம்’ – வழக்கறிஞரிடம் போலீசார் மன்னிப்புக் கேட்ட லட்சணம்!
” முஸ்லிம் என நினைத்து அடி வெளுத்து விட்டோம்”, இந்து வழக்கறிஞரிடம் மத்தியப் பிரதேச போலீஸ் மன்னிப்புக் கேட்ட லட்சணம்.. “இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான காவல்துறையின் கடும் போக்கு” ஆகியவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது பாசிச பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசத்திலுள்ள பெத்தூல் எனும் நகரில் நடந்த சம்பவம். சுமார் 10 ஆண்டுகளாக முன்னணி தினசரிகளில் பத்திரிக்கையாளராக போபாலில் பணியாற்றிய தீபக் பந்த்லே என்பவர் 2017-ல் தான் பெத்தூலில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கியிருக்கிறார். இச்சம்பவத்தில் […]
காட்டுப்பகுதியில் சாலையோரமாக தொழுது கொண்டிருந்த ஊமை மனிதரை கற்களாலும், கோடாரியாலும் தாக்கிய பாசிஸ்டுகள்!
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம், சக்ரேபைலு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வாய் பேச முடியாத முஸ்லிம் வயோதிகர் ஒருவர், தொழுகை நேரம் வந்ததும், ரோட்டோரமாக ஒதுங்கி எவருக்கும் இடையூறின்றி தொழுகையில் ஈடுபட்டுள்ளார், அப்போது அப்பக்கமாக வந்த 5 பாசிச பயங்கரவாதிகள் அந்த வயோதிகர் தொழுது கொண்டிருக்கையில் பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். கற்களாலும் தாக்கியுள்ளனர். அவரது தொப்பியை கழற்றி எரிந்து அவரது மேலாடையையும் கிழித்து எறிந்துள்ளனர். அவர்கள் கைகளில் வைத்திருந்த மரம் வெட்டும் கோடாரியை கொண்டு […]
டெல்லி: ஈவு இரக்கமின்றி இம்ரானை தாக்கிய டெல்லி போலீஸ்; பாசிஸ்டுகளும் ஒன்றிணைந்து தாக்கிய கொடூரம் !
டெல்லி சாகர்பூரில் தனது குடும்பத்துடன் வசிக்கும் இம்ரான், ஏசி பழுதுபார்ப்பவர். இவரை கடந்த புதன்கிழமையன்று பாசிச வெறி பிடித்தவர்களும் டெல்லி போலீஸ் ஒருவரும் இணைந்து ஆயுதங்களை கொண்டு கொடூரமாக தாக்கும் காணொளி வைரல் ஆகியுள்ளது. இவர் டெல்லியில் உள்ள ஒரு பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளியே நடப்பதை பார்த்து தான் தன்னை நோக்கி மிரட்டும் தொனியில் முன்னேறுகிறார் காவலர் என பயந்து ஓடி உள்ளார் இம்ரான். இம்ரானை […]
கனடா: முஸ்லிம் வெறுப்பு கருத்தை பதிவிட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியர்..
அரபு நாடுகளிலேயே வசித்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களை தொடர்ந்து செய்துவரும் காரணத்தால் அரபு நாடுகளில் பல்வேறு பாசிஸ்டுகள் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி உள்ள நிலையில், தற்போது கனடாவிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்லாமிய வெறுப்பை கக்கிய ஒருவர் வேலை இழந்துள்ளார். வட அமெரிக்க நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆர்.இ மேக்ஸ் க்கு சொந்தமான பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்த ரவி ஹூடா என்பவரை அந்நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது. ரவி […]
குஜராத் மாடல்: நூர்ஜஹானின் 2 வயது குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விடாமல் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திய போலீசார் !
நூர்ஜஹான் ஷேக் தனது இரண்டு வயது நோய்வாய்ப்பட்ட மகள் அய்மனுடன் புதன்கிழமை காலை ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்தார், சோதனை சாவடி ஒன்றில் அவர்களை தடுத்து நிறுத்திய குஜராத் போலீசார் கொரோனா வைரஸ் பரப்புவதாக குற்றம் சாட்டி, அவர்களை செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் எல்லிஸ்பிரிட்ஜின் கிழக்குப் பகுதியில் உள்ள விக்டோரியா கார்டனில் இருந்து பல்டியில் உள்ள மருத்துவமனைக்கு நடந்தே செல்ல வேண்டியதாயிற்று. குஜராத்: ஆம்புலன்சில் அவசரமாக சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட, இரண்டு வயது குழந்தை அய்மனின் வாகனத்தை போலீசார் […]