Delhi Islamophobia Muslims

டெல்லி: ஈவு இரக்கமின்றி இம்ரானை தாக்கிய டெல்லி போலீஸ்; பாசிஸ்டுகளும் ஒன்றிணைந்து தாக்கிய கொடூரம் !

டெல்லி சாகர்பூரில் தனது குடும்பத்துடன் வசிக்கும் இம்ரான், ஏசி பழுதுபார்ப்பவர். இவரை கடந்த புதன்கிழமையன்று பாசிச வெறி பிடித்தவர்களும் டெல்லி போலீஸ் ஒருவரும் இணைந்து ஆயுதங்களை கொண்டு கொடூரமாக தாக்கும் காணொளி வைரல் ஆகியுள்ளது.

இவர் டெல்லியில் உள்ள ஒரு பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளியே நடப்பதை பார்த்து தான் தன்னை நோக்கி மிரட்டும் தொனியில் முன்னேறுகிறார் காவலர் என பயந்து ஓடி உள்ளார் இம்ரான். இம்ரானை துரத்தி வந்த காவலர் ‘இவனுக்கு கொரோனா உள்ளது’ என கத்தி உள்ளார். அதை கேட்டு அப்பகுதியில் உள்ளவர்களும் போலீசுடன் இனைந்து கொண்டு (பாசிச வெறி கொண்டு) எனது சகோதரர் இம்ரானை கொடூரமாக(வும் சட்ட விரோதமாகவும்) தாக்கியுள்ளனர். என் சகோதரருக்கு கொரோனா இல்லை. ஒருவேளை அவருக்கு அந்நோய் உள்ளது என்று வைத்து கொண்டாலும் இப்படி தாக்குவதா? என்கிறார் இம்ரானின் சகோதரி ரவீனா.

காவலர் சஸ்பெண்ட்:

இந்த சம்பவம் சாகர்பூரில் நடந்ததாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து டெல்லி போலீசார் இது குறித்து விளக்கம் நிலைக்கு தள்ளப்பட்டனர். கூடுதல் டி.சி.பி (டெல்லி-தென்மேற்கு) இங்கிட் பிரதாப் சிங் கூறுகையில், “நாங்கள் போலீஸ்காரரை அடையாளம் கண்டுள்ளோம். அவர் சாகர்பூர் காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்ட ஒரு கான்ஸ்டபிள். நாங்கள் அவரை இடைநீக்கம் செய்துள்ளோம். அவருக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. ” என்றார்.

போலீசார் உதவ வில்லை:

தாக்குதலுக்குப் பிறகு, வீடு திரும்பிய இம்ரான் தனது குடும்பத்தினரிடம் இந்த சம்பவம் குறித்து கூறினார். குடும்பத்தினர் காவல்துறையை உதவிக்காக அழைத்தும் யாரும் உதவ வரவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் பி.சி.ஆர் வேனை அனுப்பவில்லை, பொலிஸையும் அனுப்பவில்லை என்கிறார் ரவீனா.

மேலும் இம்ரான் கொரோனவை பரப்ப மக்களை கட்டி அணைத்ததாக பொய்யாக குற்றம் சாட்டி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

உபி க்கு இணையாக டெல்லியிலும் முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகின்றனர் என்று பரவலாக சமூக வலைத்தளங்களில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இவ்வாறான சம்பவங்கள் அமைந்துள்ளன என்கின்றனர் விமர்சகர்கள்.