CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது கர்நாடகாவின் மங்களூரு காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பாஜக வில் இருந்தும் கூட மனிதாபிமான அடிப்படையில் அம்மாநில முதல்வரே 10 லட்சம் இழப்பீடு தரப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் அறிவித்த சில மணி நேரத்திலேயே மேலிடத்து உத்தரவோ என்னவோ அப்படியே பல்டி அடித்து இழப்பீடு எல்லாம் தர முடியாது என்று சொன்னது மட்டுமல்லாமல் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட இருவரையும் “கிரிமினல்” என்று நா கூசாமல் அழைத்துள்ளார் […]
CAA
பிஹார் (CAA) : தேசிய கொடியை ஏந்தி போராடிய அமீரை கொடூரமாக கொன்ற பயங்கரவாதிகள்!
“என் மகன் கைகளில் மூவர்ண கொடியை ஏந்தியிருந்தான்; ஆனால் அதற்குகூட அவர்கள் மரியாதை தரவில்லை. மூவர்ண கொடியோடு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிய அவனை அவர்கள் கொன்றிருக்கிறார்கள்” என கண்களில் வழிந்தோடும் கண்ணீரை அடக்க முடியாமல் பேசுகிறார் கொல்லப்பட்ட 18 வயது அமீர் ஹஞ்சிலின் தந்தை சுஹைல் அஹமத். கடந்த டிசம்பர் 21-ம் தேதி பிஹார் மாநிலத்தில் CAA வை எதிர்த்து புல்வார் சாரீப் பகுதியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார் அமீர். அந்த போராட்டத்தின் போது CAA ஆதரவு […]
CAA வுக்கு ஆதரவு திரட்ட பாலிவுட் “ஸ்டார்களுக்கு” பாஜக டின்னர் அழைப்பிதழ்!
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம் பற்றி “‘பரப்பப்படும் கட்டுக்கதைகள் மற்றும் யதார்த்தங்கள்’ குறித்து விவாதிக்க பாலிவுட்டின் சிறந்த நட்சத்திரங்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களை மும்பை ஹோட்டலுக்கு மோடி அரசு அழைப்பு விடுத்துள்ளது. CAA குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக பாலிவுட் நடிகர்கள் ஒவ்வொருவராக குரலெழுப்பி வரும் நிலையில் அவர்களை ஒருங்கிணைத்து CAAவுக்கு ஆதரவாக பேச வைக்கும் முடிவுடன் பாலிவுட் ஸ்டார்களுக்கு ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளனர் மஹாராஷ்டிரா பிஜெபியினர். சினிமா தயாரிப்பாளர் மஹாவீர் ஜெயின் முன்னின்று ஒருங்கிணைத்து வரும் […]
நாடெங்கும் போராட்டங்கள் பரவ காரணமான ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதல் !
CAA-ல் இருந்து முஸ்லீம்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து முதலில் இஸ்லாமியர்கள் சில போராட்டங்களை மேற்கொண்டனர். பின்னர் வட கிழக்கு மக்கள் CAA-வை முற்றிலுமாக திரும்ப பெற வேண்டும் என பெரிய போராட்டங்களை முன்னெடுத்தனர். இப்படியாக போராட்டங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லா இஸ்லாமியா (JMI) பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களை ஒடுக்க காவல்துறை பல்கலை கழகத்தில் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் போராட்ட களம் மாறியது, […]
CAA, NRC க்கு எதிராக இந்தியர்கள் மதம் கடந்து போராடுவது ஏன் ?
CAA வில் வெளிநாட்டு முஸ்லீம்களுக்கு மட்டும் தானே குடியுரிமை இல்லை என சொல்லப்பட்டுள்ளது, ஏன் இந்தியர்கள் அனைவரும் மத பாகுபாடு இல்லாமல் இணைந்து போராடுகின்றனர் ? என்ற கேள்வி சிலருக்கு ஏற்படுகின்றது. அதற்க்கான பதிலை பார்ப்போம். NRC- மூலம் அஸ்ஸாமில் இந்து, முஸ்லீம், கிருத்துவ சமூகத்தை சேர்ந்த 19 லட்சம் மக்கள் நாட்டற்ற அகதிகளாக அரசால் அறிவிக்கப்பட்டு அவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, பலர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளர். இந்த நிலையில் இந்த NRC-நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்ற அரசின் […]
உபி : போராளி பெற்றோர் சிறையிலடைப்பு; பாசம் தேடி அழும் 14 மாத குழந்தை!
ரவி சேகர் – ஏக்தா இருவரும் வாரணாசியில் வாழும் தம்பதியர். இவர்களுக்கு ஆர்யா என்ற 14 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. கடந்த 19ம் தேதியன்று, வாரணாசியில் இடதுசாரிகள் சார்பில் நடத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கெதிரான அமைதி போராட்டத்தில் கலந்து கொண்டனர். தம்பதியர் இருவருமாக இணைந்து காற்று மாசுப்பாடினை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும் NGO அமைப்பு ஒன்றிணையும் நடத்தி வருகின்றனர். உபி வாரணாசியில் தடையை மீறி நடத்தப்பட்ட அந்த சிஏஏ அமைதி எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபெற்று […]
CAA, NRC க்கு எதிராக பிராமண அர்ச்சகர்கள் நடத்திய போராட்டம்!
சிஏஏ மற்றும் என்.ஆர்.சி க்கு எதிராக சாதி மதம் கடந்து இந்திய அளவில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கொல்கத்தாவின் மாயோ சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே கடந்த திங்களன்று (30-12-19) குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை எதிர்த்து பிராமண அர்ச்சகர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் முயற்சிகள் கவலை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பஸ்ச்சிம் பங்கா சனாதன் பிராமின் எனும் […]
உபி : சமூக ஆர்வலர் சதாஃபை வயிற்றில் உதைத்து, லத்தியாலும் தாக்கிய போலீஸ்-10 நாட்கள் மேலாகியும் பெயில் இல்லை.
செத்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன்- சதாஃப் சமூக ஆர்வலரும், காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரகருமான சதாஃப் ஜாஃபர், கடந்த 19ந்தேதியன்று , லக்னோவில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது படம்பிடித்து கொண்டிருந்த அவரை போலீசார் அநியாயமாக இழுத்து சென்று கைது செய்தனர். ஆரம்பத்தில் ஜாஃபர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றே தெரியாமல் தவிக்கவிட்ட போலீஸ் 2நாட்கள் கழித்த பிறகே அவரது சகோதரிக்கு அவர் இருக்கும் இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் மீரா நாயர் போன்ற திரைத்துறையினர் சமூக ஊடகத்தின் வாயிலாக […]
‘போலி தகவல்களை கொடுத்து விடுங்கள்’ -அருந்ததி ராய் கூறும் அர்த்தமுள்ள யோசனைகள்..
டெல்லி பல்கலையில் கடந்த 26ம் தேதி CAA , NRC, NPR ஆகியவற்றை எதிர்த்து போராட்ட உரையாற்றிய எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியதாவது , ” NRC – NPR ஆகியவற்றிற்காக அதிகாரிகள் உங்களிடம் கணக்கெடுக்க வந்தால் பொய்யான பெயரையும், போலியான தகவலையும் கொடுத்து அவர்களை விரட்டிவிடுங்கள், பிறந்த சான்றிதழ், ஆதார் கார்டு, முகவரிச்சான்று, டிரைவிங் லைசன்ஸ் என எது கேட்டு வந்தாலும் அவர்களுக்கு காண்பிக்காதீர்கள். போலீசாரிடம் லத்தி அடி வாங்கவும், புல்லட்டுகளால் துளைக்கப்படவும் நாம் இங்கே […]
இந்து முஸ்லிம் இணைந்துவிட்டால் நாஸிகளால் என்ன செய்து விட முடியும்?- மாணவரின் மெய்சிலிர்க்க வைக்கும் பேட்டி..
இந்த பதாகையை கையிலேந்திய இரு மாணவர்கள் ஜாமியா போராட்டக்களத்தில் நின்றிருந்தனர். அவர்களை நெருங்கிய ரிப்போர்ட்டர் ஒருவர், நீங்களும் இந்து போலவே தெரிகிறீர்கள், உங்களது பதாகை அதை கூறுகிறது…! முஸ்ல்மான்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லையா? அவர்களுக்காக எதற்கு இந்த அரசு மீதான எதிர்ப்பு? — என்ற கேள்விக்கு அந்த மாணவர் கூறிய பதில். ( மெய்சிலிர்க்க வைக்கிறது) இந்த ஜாமியாவில் எனது அப்பா-அம்மா படித்த அதே டிபார்ட்மெண்ட் பேராசிரியர்களிடம் தான் நாங்களும் தற்போது பாடம் கற்கிறோம், சிலர் இடம் மாறிப்போயிருந்தாலும், […]
CAAக்கு எதிராக கருத்து: உபியில் 124 பேர் கைது 19,000 சமூகவலைத்தள கணுக்குகள் ரிப்போர்ட்!
தலைமை பூசாரி யோகி ஆதித்யநாத் ஆளும் உபி மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 20,000 இணையதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, அதில் 181 யூடியூப் புரோபைல்களை முற்றிலுமாக அழித்துள்ளது. இதுவரை 9,372 ட்விட்டர் பதிவுகளும், 9,856 முகநூல் பதிவுகளும் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளன. போராட்டகாரர்களுக்கு ஆதரவாகவும் அரசுக்கு எதிராகவும் பதிவிட்டதால் 124 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இன்னும் 93 பேர் மீது FIR பதிந்துள்ளது. 19,000 சமூகவலைதள கணக்குகள் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளது. யோகியின் தலைமையிலான போலீசாரால் […]
உபி :பொது சொத்துக்களை சேதப்படுத்தாமலும் ரூ.6.27 லட்சத்தை வழங்கிய முஸ்லிம்கள். பயனளிக்கும் செயலா ?
உபியில் கலவரத்தை ஏற்படுத்தியது, அர்த்த ராத்திரியில் முஸ்லிம் வீடுகளில் புகுந்து பொருட்களை தாக்கி உடைத்து நகையும் பணமும் கொள்ளையடித்துப்போன காவிவல்துறை பற்றி காட்டுத்தீயாய் செய்திகள் உலாவரும் நிலையில்…. கலவரத்தை ஏற்படுத்தியமைக்காகவும் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதற்காகவும் மீரட் புலந்த்சாஹர் முஸ்லிம்கள் சிலர் சேர்ந்து யோகி அரசுக்கு ரூ.6.27 லட்சத்தை வழங்கியுள்ளனர். பொது சொத்தை சேதப்படுத்தினர் என கூறி சொத்துக்களை பறிமுதல் செய்ய யோகி அரசு பழிவாங்கும்(யோகியே சொன்ன வார்த்தை) நடவடிக்கை எடுத்து வரும் வேலையில் முஸ்லிம்கள் இவ்வாறு பணத்தை வசூலித்து […]
கேரள தேவாலயத்திற்குள் முஸ்லிம்களை போல் ஆடை அணிந்து CAA எதிர்ப்பு: விழித்தெழும் பழைய இந்தியா!
சுமார் 62 லட்சம் கிறுஸ்தவ ஜனத்தொகையை உடையது கேரளம். 3.34 கோடி மக்களில் அவர்கள் மூன்றாவது பெரிய மக்கட்தொகையுடைய குடிமக்களாக அங்கு வாழ்கின்றனர். இந்திய அரசு அறிவித்திருக்கும் குடியுரிமை சட்டத்திருந்த்த்திற்கு தங்களது ஆதரவு இல்லை என்பதை அவர்கள் வித்யாசமான முறையில் வெளிப்படுத்தி தங்களது தொப்புள்கொடி உறவுகளான முஸ்லிம்களுக்கு அனுசரணை செய்துள்ளனர். கடந்த வாரம் 22ந்தேதி- Catholic Bishops’ Conference of India (CBCI) சார்பாக ஒரு நிகழ்ச்சியில், “ஒருவரது குடியுரிமை அவரது சாதி,மதம் சார்ந்த அடையாளப்படுத்தப்பட கூடாது” […]
CAA – NRC போராட்டக்களத்தில் பங்கெடுத்த நார்வே சுற்றுலாப்பயணி வெளியேற்றம் !
இந்திய ஒன்றியம் கொண்டுவந்த CAA – NRC சட்டங்களுக்கு எதிரான அமைதி பேரணியில் கலந்துகொண்ட காரணத்திற்காக நார்வே நாட்டு சுற்றுலாப்பயணி ஜேன் மேட்டி ஜோஹன்ஸன் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இவர் கடந்த அக்டோபரில் டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்து கொச்சியில் தங்கியுள்ளார். மக்கள் நடத்திய பேரணியில் அவரும் ஆர்வத்துடன் பதாகை ஏந்தி கோஷங்களை எழுப்பியுள்ளார். அவரது பேஸ்புக் தளத்திலும் தாம் பங்குபெற்ற பேரணி பற்றிய படங்களை பதிவேற்றியுள்ளார். இதனை அறிந்து இந்திய அரசு இவரை […]
நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கடும் கணடனம்!
நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் CAAவை விமர்சித்து பேசி இருக்கிறார். ‘சுமார் 20 கோடிப்பேரிடம் “உங்கள் மதம் இதர மதங்களுக்கு சமமானதில்லை,” என்று சொல்வது தேச ஒற்றுமைக்கு ஆபத்தான விஷயம்,’ என்று கூறி இருக்கிறார். ‘நான் அந்நிய நாட்டில் வசித்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை பேசும் இந்தியா பற்றிய பெருமையில் வாழ்பவன். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று மனதார விரும்புபவன்,’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். பாகிஸ்தானில் முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவார்களா என்று மக்களவையில் அமித் ஷா […]