Actors CAA

CAA வுக்கு ஆதரவு திரட்ட பாலிவுட் “ஸ்டார்களுக்கு” பாஜக டின்னர் அழைப்பிதழ்!

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம் பற்றி “‘பரப்பப்படும் கட்டுக்கதைகள் மற்றும் யதார்த்தங்கள்’ குறித்து விவாதிக்க பாலிவுட்டின் சிறந்த நட்சத்திரங்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களை மும்பை ஹோட்டலுக்கு மோடி அரசு அழைப்பு விடுத்துள்ளது.

CAA குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக பாலிவுட் நடிகர்கள் ஒவ்வொருவராக குரலெழுப்பி வரும் நிலையில் அவர்களை ஒருங்கிணைத்து CAAவுக்கு ஆதரவாக பேச வைக்கும் முடிவுடன் பாலிவுட் ஸ்டார்களுக்கு ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளனர் மஹாராஷ்டிரா பிஜெபியினர். சினிமா தயாரிப்பாளர் மஹாவீர் ஜெயின் முன்னின்று ஒருங்கிணைத்து வரும் இந்த நிகழ்ச்சியில், பாஜக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடனான சந்திப்பிற்காக பாலிவுட் நட்சத்திரங்களை திரட்ட நிகழ்ச்சி( Jan-5 ) ஒன்றினை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதில் கரன் ஜோகர், ரிதேஷ் சித்வானி, கபீர் கான் ஆகியோருடன் பர்ஹான் அக்தார் உட்பட அனைத்து முக்கிய பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. மும்பை கிரான்ட் ஹயாட் ஹோட்டலில் இன்று 5-1-2020 மாலை 5 மணியளவில் நடைபெறவிருக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடனான சந்திப்பினை புறக்கணிக்கப் போவதாக பர்ஹான் அக்தார் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

எதற்காக இந்த திடீர் சந்திப்பு அழைப்பு என மகாவீர் ஜெயின் கூறியபோது சமீபகாலமாக மோடி – பாலிவுட் நட்சத்திரங்கள் இடையேயான நெருக்கத்தை குறைக்கும் வகையிலான செயல்கள் நடைபெற்று வருகின்றது. மோடி எல்லோருக்குமானவர் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி, பாலிவுட் நடிகர்களிடையே குடியுரிமை சட்டத்திருத்தத்தை குறித்த தவறான மதிப்பீடுகளை களையவே இதனை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்!

A picture of the

ஸ்வாரா பாஸ்கர், வருண் குரோவர், விக்ரமாதித்யா மோட்வானே, அனுபவ் சின்ஹா, நீரஜ் கயவன், அனுராக் காஷ்யப் – இவர்கள் அனைவரும் தங்கள் சமூக ஊடக கணக்குகளின் வாயிலாக சி.ஏ.ஏவை விமர்சித்தவர்கள் – கோயலுடன் கலந்துரையாட அழைக்கப்படவில்லை.

“இந்த சந்திப்பு பற்றி எனக்குத் தெரியாது, நான் அழைக்கப்படவில்லை. அழைக்கப்பட்டுள்ளவர்கள் யார், அழைக்கப்படாதவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது, என்று ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

bollywood
The infamous Selfie – Representational image for the article

மேலும் இந்த சந்திப்பு உண்மையில் திட்டமிடப்பட்டிருந்தால், “இது மீண்டும் பாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களைப் (அரசியல் ரீதியாக) பயன்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும், மேலும் அவர்களின் புகழ் மற்றும் நம்பகத்தன்மையை மிகவும் மோசமான மற்றும் பிரபலமற்ற CAA-NPR-NRC சட்டங்களை நியாயப்படுத்து வதற்கு பயன்படுத்தப்பட இருக்கும் யுக்தியாகும்.” எனவும் ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையில் மோடியுடான பாலிவுட் நடிகர்கள் சிலரின் செல்பி ஒன்று வெளியான போது அது மக்களிடையே அதிருப்தியையே பிரதிபலித்தது, மோடி இந்தி நடிகர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாட்டின் வளர்ச்சியின் மீது காட்ட வேண்டும் என்ற ட்வீட்டுகள் அதிகம் பகிரப்பட்டன.

அதுபோக இந்திய மதச்சார்பற்ற தன்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரான இந்த குடியுரிமை திருத்தச்சட்டமும் அதனை தொடர்ந்த மத ரீதியிலான பிரிவினையை உண்டாக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற திட்டங்களும் நடிகர்களில் நடுநிலையாளர்களாக கருதப்படும் ஹுமா குரைஷி, கொங்கனா சென் சர்மா, ரிச்சா சட்தா, ஸ்வரா பாஸ்கர் மற்றும் அனுராக் கஷ்யப் போன்றவர்களில் அதிருப்தி கருத்துக்களினால் பாஜக வட்டாரம் கொஞ்சம் ஆட்டம்கண்டுள்ளது என்பதே உண்மை.

பாஜக அரசுக்கு எதிராகவும், மோடியின் ஆட்சிக்கு எதிராகவும் நடிகர்களை போலவே நாட்டின் முக்கிய பிரபலங்களான நீதிபதிகள், வழக்குறைஞர்கள், எழுத்தாளர்கள், வர்ராற்றாய்வாளர்கள் என அனைத்து தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் வெகுஜன மக்களால் பெரிதும் ஆராதிக்கப்படும் நடிகை,நடிகர்களை இழுத்து தம்பால் வைத்துக்கொண்டால் இந்த CAA சட்டத்திற்கு அவர்களது தரப்பில் ஆதரவு திரட்டியது போலாகும் என்பதை கருத்தில் கொண்டே இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. சினிமாத்துறை சார்ந்த அனைத்து தரப்பினருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் யார் யார் பங்கேற்பார், புறக்கணிப்பார் என இனிமேல் தான் தெரியவரும்.