புதுச்சேரியில் ‘வாட்ஸ் ஆப் குழுமம்’ துவங்கி பா.ஜ.க. செய்து வரும் தேர்தல் பிரச்சாரம் குறித்த புகாருக்கு தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், முகவரி மட்டுமே இருக்கும். அதில் செல்போன் எண் இருக்காது. ஆனால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று, ‘வாட்ஸ்அப் குழுமங்களை’ தொடங்கி பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். […]
BJP
மாட்டிறைச்சி என்பது இந்தியாவின் ‘தேசிய உணவு’ – அசாம் பாஜக வேட்பாளர் தேர்தல் பரப்புரை !
ஆர்.எஸ்.எஸ்/பாஜக ஆதரவாளர்கள் எப்போதும் நாடு தழுவிய மாட்டிறைச்சி தடை கொண்டு வர வேண்டும் என பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அசாமில் பாஜக வேட்பாளர் ஒருவர் மாட்டிறைச்சி இந்தியாவின் ‘தேசிய டிஷ்’ என்று கூறியுள்ளது, பாஜக வேட்பாளர்கள் ஓட்டு வேண்டுமெனில் எதையும் சொல்வார்கள் என்ற விமர்சனத்தை பெற்று தந்திருக்கிறது. அசாம் கவ்ரிபூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பனேந்திர குமார் முஷாரி, முஸ்லீம் சமூகம் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரையில் ‘மாட்டிறைச்சி’ என்பது இந்தியாவின் […]
கேரளாவில் பாஜக வேகமாக வளராமல் உள்ளதற்கு 90% கல்வியறிவு விகிதமும் ஒரு காரணம் – பாஜக எம்.எல்.ஏ கருத்து !
திருவனந்தபுரம்: கேரளாவின் ஒரே பாஜக எம்.எல்.ஏ வும் பாஜக தலைவருமான ராஜகோபால், கேரள மாநிலத்தில் பாஜக வேகமாக வளராததற்கான காரணங்களை கூறினார். ‘கல்வியறிவு ஒரு முக்கிய காரணியாகும், கேரளாவின் கல்வியறிவு விகிதம் 90%’ என்று அவர் கூறினார். ‘கேரளா ஒரு வித்தியாசமான மாநிலம். இங்கே இரண்டு, மூன்று வெவ்வேறு காரணிகள் உள்ளன. கேரளாவின் கல்வியறிவு விகிதம் 90% ஆகும். அவர்கள் எதையும் சிந்திப்பவர்கள், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்கிறார்கள், விவாதிக்கின்றனர். இவை படித்தவர்களின் பழக்கம். அதுவும் ஒரு […]
குஜராத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க மாநில பாஜக அரசு அனுமதி மறுப்பு !
அகமதாபாத்: 2004 இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ஜி.எல். சிங்கால் உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர குஜராத் அரசு அனுமதி மறுத்துள்ளது என்று மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சனிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிபதி வி.ஆர்.ராவலின் உத்தரவின் பேரில் சிங்கால், தருண் பரோட் மற்றும் அனாஜு சவுத்ரி ஆகியோரைத் தண்டிக்க சிபிஐ மாநில அரசிடம் அனுமதி கோரியது. உத்தியோகபூர்வ கடமையை நிறைவேற்றுவதில் தவறி இருந்தாலும், […]
‘ஏன் இருவரை மட்டும் பெற்று எடுத்தீர்கள்? இருபது பேரை பெற்றெடுத்து இருந்தால் அதிக ரேஷன் பொருட்கள் கிடைத்திருக்கும்’ – பாஜக உத்தரகண்ட் முதல்வர் கேள்வி!
கொரோனா காலங்களில் உணவு பெற்று கொள்ள போராடும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தலா இருபது குழந்தைகள் வரை பெற்றிருந்தால் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ரேஷன் திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் பெற்று இருக்க முடியும் என பாஜக வை சேர்ந்த உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் மார்ச் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார். “ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து கிலோ ரேஷன் வழங்கப்பட்டது. 10 பேர் உள்ள வீட்டில் […]
மே வங்கம்: முதியவர் கொலை வழக்கில் பாஜக தலைவர் உட்பட மூவர் கைது !
மேற்கு வங்க பூர்பா பர்தாமன் மாவட்டத்தில் 74 வயது நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உள்ளூர் பாஜக தலைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இந்த மூவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சனிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் அவர்களை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மார்ச் 9 ம் தேதி ரெய்னா காவல் நிலைய பகுதியில் உள்ள […]
கேரளா: நான் பாஜக வை சேர்ந்தவன் கூட இல்லை ; என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர்- மணிகண்டன் அதிர்ச்சி !
சுல்தான் பத்தேரி: இன்னும் மூன்று வாரங்களில் நடைபெறவுள்ள கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க பாரதீய ஜனதா கட்சி வயநாடு மாவட்டத்தில் கடும் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. 115 தொகுதிகளுக்கான பட்டியலை பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டபோதும், வயநாட்டில் உள்ள மூன்று தொகுதிகளில் இரண்டில் இன்னும் பொருத்தமான வேட்பாளர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில், மனந்தவாடி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.மணிகண்டன், போட்டியிட மறுத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கேரள […]
தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி பெயரை குறிப்பிட அமலாக்கத்துறை கட்டாயப்படுத்தியது: குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயர்..
கேரளாவின் தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயர், கேரள முதல்வர் பினராயி, பிற மாநில அமைச்சர்கள் மற்றும் இந்த வழக்கில் ஒரு முக்கிய நபரின் மகன் ஆகியோரை பெயரிடுமாறு அமலாக்க இயக்குநரகத்தின் (ED) விசாரணை அதிகாரியால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சந்தீப் நாயர் இதை தெரிவித்துள்ளார். இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. தங்கக் கடத்தல் வழக்கு மற்றும் பணமோசடி தொடர்பான […]
‘மாட்டு சாணத்தை கொண்டு யாகம் செய்தால் 12 மணி நேரத்திற்கு வீட்டை சுத்திகரிப்புடன் வைக்கலாம்’ – பாஜக அமைச்சர்
கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பிற்காக வேத வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பாஜக வின் மத்திய பிரதேச கலாச்சார அமைச்சர் உஷா தாக்கூர், கடந்த மார்ச் 7 அன்று வலியுறுத்தி பேசினார். மாட்டு சாணதின் ‘ஹவானை’ (மாட்டு சாணத்தை யாகத்தில் எரிக்கும் போது வெளிப்படும் புகை) கொண்டு ஒரு வீட்டை 12 மணி நேரம் வரை சுத்திகரிப்புடன் வைக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தூர் பிரஸ் கிளப் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் கலந்து […]
கர்நாடகா: பாஜக அமைச்சர் மீது பாலியல் புகார் அளித்தவர், புகாரை வாபஸ் பெற்றார்
முன்னாள் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி மீது வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணுடன் பாலியல் சல்லாபத்தில் ஈடுபட்டதாக வழக்கு தொடுத்த சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி ஞாயிற்றுக்கிழமை, தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார். இவரது புகாரை தொடர்ந்து கர்நாடகாவில் பரபரப்பான சூழல் நிலவியது.ரமேஷின் சகோதரரும் பாஜக எம்எல்ஏவுமானபாலச்சந்திர ஜர்கிஹோலி இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி இருந்தார். பாஜக தலைவர் ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகும் பல வீடியோக்கள் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன, அடுத்த […]
பெண்ணுக்கு பாலியல் தொல்லை,பாஜக தலைவர் நிதின் கைது- மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் தகவல்
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள முர்பாத்தைச் சேர்ந்த பாஜக கூட்டுரிமை குழு உறுப்பினர் (கார்ப்பரேட்டர்) நிதின் தெல்வானே, பெண் உறுப்பினர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமையால் கைது செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வியாழக்கிழமை தெரிவித்தார். நள்ளிரவு 12.40 மணியளவில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதற்காக பாஜக தலைவர் டெல்வானே கைது செய்யப்பட்டார். “ஐபிசி பிரிவு 452 (வீட்டு மீறல்), 354 (துன்புறுத்தல்), 354 ஏ […]
இடதுசாரிகளின் பேரணி கூட்டத்தை மோடிக்கு கூடிய கூட்டம் என பதிவிட்ட தமிழக பாஜக ட்விட்டர் பக்கம் !
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் பேரணியில் கூடிய கூட்டத்தின் புகைப்படத்தை எடுத்து பிரதமர் மோடியின் பேரணியில் கூடிய பிரமாண்ட கூட்டம் என தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிந்து, பிறகு சிக்கிக்கொண்டு அந்த பதிவை நீக்கி உள்ளது பாஜக. இடதுசாரிகள் கடந்த பிப்ரவரி 2019 இல் நடத்திய பேரணியின் புகைப்படத்தை தான் தமிழக பாஜக சுட்டு தங்கள் மோடிக்கு கூடிய கூட்டம் என பொய்யாக சித்தரித்து உள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் இது போன்ற கூட்டம் கூடியதே […]
மே.வங்கம்: மோடியின் பேரணியில் கலந்து கொள்வதற்கு 3 ரயில்களை 60 லச்சத்திற்கு புக்கிங் செய்த பாஜக !
இன்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் (படைப்பிரிவு-Brigade Rally) பேரணியில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்களை கொண்டு வந்து சேர்த்திட மூன்று யில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அலிபூர்துர், மால்டா மற்றும் ஹரிச்சந்திரபூரிலிருந்து முன்பதிவு செய்யப்பட்ட இந்த மூன்று ரயில்களை வாடகைக்கு எடுக்க பாஜக ரூ .60 லட்சத்திற்கு மேல் செலவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அலிபுர்துர் மற்றும் மால்டாவிலிருந்து சிறப்பு […]
மே.வங்கம்: நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பாஜக தொண்டர்கள் காயம்; ஒருவர் பலி – போலீசார் தகவல் !
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில் உள்ள கோசாபாவில் வெள்ளிக்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒரு பாஜக உறுப்பினர் உயிர் இழந்தார், மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென வெடித்ததில் பாஜக தொண்டர்கள் காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தெற்கு 24 பர்கானாவில் உள்ள கேனிங் […]
குறைகளை செவிசாய்க்காத அதிகாரிகளை மூங்கில் குச்சிகளை கொண்டு அடியுங்கள்- பாஜக மத்திய அமைச்சர் ஆலோசனை ..
மக்கள் குறைகளை செவிசாய்காத அதிகாரிகளை பொதுமக்கள் “மூங்கில் குச்சிகளைக் கொண்டு அடிக்குமாறு” அறிவுறுத்தி உள்ளார் பாஜக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். சனிக்கிழமை பீகார், கோடவந்த்பூரில் ஒரு வேளாண் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் உரையாற்றியபோது இந்த கருத்தை தெரிவித்தார். மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை இலாகாக்களின் அமைச்சரான அவர் பொது மக்களிடமிருந்து அடிக்கடி புகார்கள் வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும்பாலும் புகார்களுக்கு சிறிதும் கவனம் செலுத்துவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். “நான் […]