“பேட்டி பச்சா ஓ, பேட்டி படா ஓ ” – “பெண்களை பாதுகாப்போம் , பெண்களை படிக்க வைப்போம்” என்பது பாஜக வின் கோஷங்களில் ஒரு முக்கியமான கோஷமாகும். மேலும் இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றுவது பாஜகவின் முக்கிய விஷயமாகவும் கூறிவருகிறது.இந்த நிலையில் சமீபத்தில், மத்திய பிரேதச பாஜக தலைவர் பிரதீப் ஜோஷியின் பெயரில் மோசமான ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது.மேலும் அவர் கட்சி தொண்டர் ஒருவருடன் ஆபாச உரையாடலில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து பாஜக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து வெளியேற்றியது.
தற்போது கடந்த ஒரு வாரமாக , மற்றொரு பாஜக பெண் தலைவரின் நிர்வாண ஆபாச வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவில் இமாச்சலப் பிரதேச மாநில பாஜக வின் யுவ மோர்ச்சா பிரிவு நிர்வாகிகளான ரீனா தாக்கூர் மற்றும் உபென் பண்டிட் இடம் பெற்றுள்ளனர். பண்டிட் ஏற்கனவே வேறொருவருடன் திருமணமானவர். வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து இப்பெண் இமாச்சல பிரதேச முதல்வர் மற்றும் பிற பாஜக தலைவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இது குறித்து பாஜக எம்எல்ஏ சுரேந்திர ஷோரி கூறுகையில் : இவ்வாறான ஆபாசமான செயல்களை கட்சி பொறுத்துக் கொள்ளாது என்றும், இதைக் கருத்தில் கொண்டு கட்சி இருவரையும் பாஜகவிலிருந்து நீக்கியது என்றும் கூறியுள்ளார்.