America International News Islamophobia Terrorism

ட்ரம்ப் ஆதரவாளர் தீவிரவாத தாக்குதல்! – 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு;மீடியாக்களின் நயவஞ்சகம்.!

அமெரிக்காவில் பிரபல வால்மார்ட் வர்த்தக கடைக்குள் புகுந்த வெள்ளை இனவாத தீவிரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 பேர் உயிரிழந்தனர். டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நியூ ஜெர்சியில் உள்ள கோல்ப் கிளப்பில் வார விடுமுறையை கழித்து வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த ட்ரம்ப் ட்விட்டரில் இதற்கு கண்டனம் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்த படும் போதெல்லாம் உடனுக்குடன் “தீவிரவாதிகள்” , “தீவிரவாத தாக்குதல் ” என்று முந்தி அடித்து கொள்வார் ட்ரம்ப், ஆனால் இந்த பயங்கரவாத துப்பாக்கி சூட்டை ஒரு தீவிரவாதி தாக்குதல் என்று கூட குறிப்பிடவில்லை. காரணம் இந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவன்” white nationalist “ ட்ரம்ப் ஆதரவாளர் என்று அறியப்படுவது தான் என்று சமூகத்தளத்தில் விமர்சனகள எழுந்துள்ளன.

டெக்சாஸ் கவர்னர் அறிக்கை:

டெக்சாஸ் கவர்னர் கிரேக் அபாட் கூறுகையில் ‘டெக்சாஸ் மாகாண வரலாற்றிலேயே மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று’ என்று கூறினார்.

இந்த தாக்குதல் சம்பவம் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட தீவிரவாதி டெக்சாஸ் மாகாணத்தின் 21 வயதான ஆலன் பகுதியை சேர்ந்த பேட்ரிக் குரூசிஸ் என்பது தெரியவந்துள்ளது. இவர் தீவிர ட்ரம்ப் ஆதரவாளர்,மற்றும் நியூசிலாந்தில் சமீபத்தில் நடந்த தீவிரவாத துப்பாக்கி சூடு சம்பவத்தை ஆதரிவத்தவர். தற்போது காயம் அடைந்த 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

உள்ளே நவீன ரக துப்பாக்கியுடன் நுழைந்த அந்த தீவிரவாதி, சரமாரியாக மக்களை நோக்கி சுட்டு இருக்கிறான்.

போலீஸ் படை உடனே அங்கு விரைந்து வந்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் இருந்ததால், பலர் ஒருவர் மீது ஒருவர் மோதி, நெரிசலில் சிக்கி பெரிய களேபரமே அந்த கடைக்குள் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை ஒருவர் மட்டுமே நடத்தியிருக்க முடியாது என்று கூறப்படுகிறது. நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின்படி துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கருப்பு டி ஷர்ட், கேமோ பேன்ட் அணிந்துள்ளார். காதை மறைக்க கனத்த துணியும், தலையில் ஹெட்போனும் வைத்தவாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கி சூடு நடந்த இடம் மெக்சிகோ மற்றும், ஸ்பானிஷ் மக்கள் அதிகம் வசிக்கும் இடமாகும்.இவர்களை எதிர்க்கும் வகையில் இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேட்ரிக் எழுதிய கடிதம் போலீசால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் மெக்சிகோ மக்களுக்கு எதிராக அவர் வெறுப்பை உமிழும் வகையில் எழுதியுள்ளார்.

மீடியாக்களின் நயவஞ்சகம் :

இத்தனை பயங்கரமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. பல பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இதை ஒரு தீவிரவாத சம்பவம் என்றோ சம்பவத்தில் ஈடுபட்டவனை “தீவிரவாதி” என்றோ ஊடகங்கள் அழைக்க தயாராக இல்லை. காரணம் தீவிரவாதத்தில் ஈடுபட்டவர் முஸ்லிமாக இல்லாதது  தான் என்று நெட்டிசன்கள் கருத்திட்டு வருகின்றனர்.ஆங்கில ஊடகங்கள் “gunman ” என்றும் தமிழ் ஊடகங்கள் “துப்பாக்கி சூடு” என்றும் இந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளன.

[Best_Wordpress_Gallery id=”3″ gal_title=”Media On American White Terrorism”]

கடந்த செவ்வாய் கிழமை மிஸ்ஸிஸிப்பியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். காவல் துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார். இதேபோன்று கடந்த ஞாயிறன்று வடக்கு கலிபோர்னியாவில் உணவு திருவிழா ஒன்றில் 19 வயது நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியானார்கள். இந்த அனைத்து சம்பவங்களிலும் ஈடுபட்டது ட்ரம்ப் வழக்கமாக குற்றம்சாட்டும் வெளிநாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் இல்லை மாறாக வெள்ளை இனவாத அமெரிக்கர்கள் தான் என்று அறியப்பட்டுள்ளது.