Hindutva Political Figures RSS Tamil Nadu

கல்வித்துறையில் காவி சித்தாந்தம் திணிப்பு .. வைகோ கடும் கண்டனம்!

இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டிற்கு ஏற்ற வகையில் இளங்கலை வரலாறு பட்டப் படிப்புக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை : கொரோனா பெருந்தொற்று நாட்டை துயரப் படுகுழியில் தள்ளி இருக்கும் சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு, கல்வித் துறையை காவிமயமாக்கும் சதிச் செயலை அரங்கேற்றி இருக்கிறது. கடந்த 2020-21 கல்வி ஆண்டில் கொரோனா பாதிப்பில் பள்ளிகள் மூடப்பட்டன. இணையம் […]

Hindutva Tamil Nadu

கோவை: பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த இந்து முன்னணியினர் கைது!

கோவையில் கடந்த 18ம் தேதி செல்வபுரம் பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் அதை இரண்டு பேர் மறைந்து நின்று கற்களை கொண்டு தாக்கினர். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய கோயிலை இடிக்க சம்பவ இடத்திற்கு வந்த கோயம்புத்தூர் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு எதிராக இந்து முன்னானியைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செல்வபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவல்துறையினர் போராட்டக்காரர்களை அகற்றி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது […]

மே.வங்கம்: ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட மறுத்த 10 வயது சிறுவன் மஹாதேவ் மீது பாஜக உறுப்பினர் தாக்குதல் !
Crimes against Children Hindus Hindutva Lynchings West Bengal

மே.வங்கம்: ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட மறுத்த 10 வயது சிறுவன் மஹாதேவ் மீது பாஜக உறுப்பினர் தாக்குதல் !

திங்கள்கிழமை பிற்பகல் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட மறுத்ததற்காக பாஜக உறுப்பினர் ஒருவர் 10 வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புலியாபாராவில் உள்ள தேநீர் கடை வழியாக சிறுவன் சென்று கொண்டிருந்த போது, அக்கடை உரிமையாளர் சிறுவனை தாக்கியுள்ளார். இது குறித்து டெலிகிராப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் அண்மையில் தனது தாயை இழந்தவர். நான்காம் வகுப்பு மாணவரான மகாதேவ் சர்மா பல காயங்களுடன் ரானகட் […]

Alleged Police Brutalities Hindutva Tamil Nadu

கோவை: போலீசார் வாகனத்தை சேதப்படுத்தியதால் இந்து முன்னணி உறுப்பினர் கைது!

கோவை: போலீஸ் வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் செல்வபுரம் போலீசார் ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சேர்ந்த உறுப்பினர் ஒருவரை கைது செய்தனர். இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறிய கோயிலை இடிக்க சம்பவ இடத்திற்கு வந்த கோயம்புத்தூர் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு எதிராக இந்து முன்னானியைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செல்வபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. காவல்துறையினர் போராட்டக்காரர்களை அகற்றி போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். […]

Gujarat

12 ஆண்டுகளாக குஜராத்தை ஆட்சி செய்த மோடி ஆட்சி காலத்தில் துவங்கபட்ட அரசு மருத்துவ கல்லூரிகள் எத்தனை தெரியுமா?

12 ஆண்டுகளாக குஜராத்தை ஆட்சி செய்த மோடி அங்கு அவரது ஆட்சி காலத்தில் துவங்கிய அரசு மருத்துவ கல்லூரிகள் எத்தனை தெரியுமா? – ஒன்றும் கூட இல்லை. குஜராத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகள் மொத்தம் ஆறுதான். சில வலைத்தளங்கள் 31 என்று காண்பிக்கும். உண்மை என்னவென்றால் மீதமிருக்கும் கல்லூரிகளில் அரசு நிர்வாகம் மட்டுமே இருக்கும். அரசு நிதி ஒதுக்காது. அவை சுயநிதி கல்லூரிகள் போல இயங்கும். எடுத்துக்காட்டாக AMCMET மருத்துவக்கல்லூரியை துவங்கியது அகமதாபாத் மாநகராட்சியின் ட்ரஸ்ட். […]

Corona Virus Kumbh Mela Rajasthan

கும்ப மேளாவில் பங்கெடுத்த 19 கோவிட் பாசிடிவ் நோயாளிகள் உத்தரகண்ட் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம் ..

புதுடில்லி: ஹரித்வாரில் கும்பமேளாவுக்குச் சென்று தெஹ்ரி மருத்துவமனையில் குணமடைந்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பத்தொன்பது கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் தப்பி ஓடிவிட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தரகண்ட் மாநிலத்தில் சுகாதார அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் பீதியைத் ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, ராஜஸ்தான் மாநில அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தி உள்ளது. “தப்பி ஓடியவர்கள் கும்ப மேளாவில் பங்கெடுத்தவர்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று சுகாதாரத் துறை அதிகாரி […]

Corona Virus Intellectual Politicians Modi

‘ஆனானப்பட்ட பிரதமர் போய் ஒரு சாமியாரிடம் ஏன் விண்ணப்பம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?’ – ஸ்ரீதர் சுப்ரமணியம்

வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் சுவாமி அவதேஷானந்தா என்ற சாமியாரிடம் பேசி இருக்கிறார். கோவிட் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு கும்ப மேளாவில் மிச்சம் இருக்கும் நிகழ்வுகளை மக்களைக் கூட்டாமல் வெறுமனே சடங்கு-ரீதியாக மட்டுமே செய்து முடித்து விடலாம், என்று பரிந்துரைத்து இருக்கிறார்.அதன் விளைவாக ஜூனா அகாடா எனப்படும் சாமியார்கள் குழு கும்ப மேளாவில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. சுவாமி அவதேஷானந்தாவும் கடைசி நாள் சடங்குகளை சனிக்கிழமையே செய்து முடித்து விடுவதாக அறிவித்து இருக்கிறார். இது நல்ல விஷயம்தான். […]

Minority West Bengal

’15 ஆண்டுகளாக பாஜக வுக்கு ஆதரவு அளித்து வருகிறேன்..’கூர்க்கா சமூகத்திற்கு அவர் அளித்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றவில்லை..

பாரதீய ஜனதா கட்சி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், 2014 முதல் கூர்க்கா சமூகத்துக்காக எதுவும் செய்யவில்லை என்றும் கோர்கலான்ட் ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) தலைவர் பிமல் குருங் சனிக்கிழமை குற்றம் சாட்டினார். மேலும் வங்காளத்தில் பிஜேபிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும், எனவே மாநிலத்தில் பாஜக அரசாங்கம் அமைய வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். தற்போது நடைபெற்று வரும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வாய்ப்புகள் குறித்து கேட்க பட்டபோது, “அவர்களுக்கு (பாஜக) வங்காளத்தில் […]

Corona Virus Maharashtra

‘கும்பமேளாவிலிருந்து திரும்புபவர்கள் கொரோனாவை ‘பிரசாதமாக’ விநியோகிப்பார்கள்..’ மும்பை மேயர் கிஷோரி கருத்து ..

கும்பமேளாவில் பக்தர்களுக்கும், சாதுக்களுக்கு தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும், அதாவது அடையாளம் என்ற வகையில் மட்டும் கும்பமேளாவை கொண்டாடுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கும்ப மேளாவில் இருந்து திரும்புபவர்கள் தத்தம் மாநில மக்களுக்கு கொரோனாவை தான் பிரசாதமாக வழங்குவார்கள் என கருத்து தெரிவித்துள்ளார். கும்பமேளாவிலிருந்து அந்தந்த மாநிலங்களுக்குத் திரும்புபவர்கள் கொரோனாவை ‘பிரசாதமாக’ விநியோகிப்பார்கள் “என்று பிஎம்சி மேயர் […]

Bangladesh Intellectual Politicians

பங்களாதேஷ் மக்கள் குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு அந்நாட்டு அமைச்சர் பதிலடி !

தங்கள் சொந்த நாட்டில் போதுமான அளவுக்கு உணவு இல்லாததால் பங்களாதேஷின் ஏழை மக்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ள கருத்து கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. புதன்கிழமையன்று இதற்கு பதிலளித்த பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் பங்களாதேஷ் குறித்த உள்துறை அமைச்சரின் அறிவு “ சிறிய அளவில்” உள்ளது என தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துக்கள் “குறிப்பாக பங்களாதேஷுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் ஆழமாக இருக்கும்போது ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும் அவர் […]

Islamophobia Lynchings Muslims West Bengal

“ஜெய் ஸ்ரீ ராம்” கோஷமிட மறுத்ததற்காக பள்ளிவாசல் பராமரிப்பாளர் மீது தாக்குதல்!

மேற்கு வங்கம்: “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட மறுத்ததற்காக புதன்கிழமை அதிகாலையில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டதாக ஹூக்லியின் சின்சுராவில் உள்ள பள்ளிவாசலின் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.இது குறித்து தி டெலிகிராப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. நடந்த சம்பவம்: சின்சுராவில் உள்ள சக்பஜாரில் வசிக்கும் முகமது சுஃபியுதீன் (54 வயதானவர்), புதன்கிழமை அதிகாலை 3.45 மணியளவில், தனது வீட்டிலிருந்து மசூதிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் அவரை வழிமறித்து, “ஜெய் […]

Gujarat

குஜராத்: கொரோனா வைரஸை அழிக்க அரசு மருத்துவமனையில் யாகம் ..

சூரத்: கோவிட் -19 நோயாளிகளைக் கொண்டுவரும் ஆம்புலன்ஸின் இடைவிடாத சைரன்களுக்கு இடையே, தெற்கு குஜராத்தின் மிகப்பெரிய கோவிட் -19 மருத்துவமனையான அரசு நடத்தும் புதிய சிவில் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை ஆரிய சமாஜ் உறுப்பினர்கள் கொரோனா வைரஸை ‘ஒழிக்க’ ஒலிபெருக்கியின் மூலம் யாகம் நடத்தனர். மருத்துவமனை வளாகத்தில் யாகத்தை நடத்த உயர் என்.சி.எச் நிர்வாகத்தால் அழைக்கப்பட்டதாக ஆர்யா சமாஜ் உறுப்பினர்கள் கூறினார். முந்தைய நாளில் ராம்நாத் கெலா மற்றும் குருக்ஷேத்ரா தகனங்களில் யாகங்களை நடத்தினோம், அதே யாகம் […]

மதுராவில் உள்ள ஜமா பள்ளிவாசல் கிருஷ்ணர் பிறந்த இடம், தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் நீதிமன்றத்தில் வழக்கு!
Hindutva Indian Judiciary Islamophobia Muslims Uttar Pradesh

ஆக்ராவில் உள்ள ஜமா பள்ளிவாசல் கிருஷ்ணர் பிறந்த இடம், தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு!

இந்துக்களின் தெய்வமான கிருஷ்ணரின் சிலைகள் பள்ளிவாசலின் கீழ் புதையுண்டுள்ளதா என்பதை கண்டறிய ஆக்ராவில் உள்ள ஜஹானாரா மசூதி (ஜமா மஸ்ஜித் ஆக்ரா என்று பிரபலமாக அறியப்படுகிறது) உள்ள நிலத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ஏ.எஸ்.ஐ) கதிரியக்க பரிசோதனை செய்யக் கோரி மதுராவில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிலைகளை பள்ளிவாசலுக்கு கீழ் அவுரங்கசீப் புதைத்தாராம்: முகலாய பேரரசர் அவுரங்கசீப், மதுரா ஜன்மஸ்தன் கோயிலை இடித்துத் தள்ளிய (?) பின்னர், கிருஷ்ணரின் சிலைகளை மதுராவிலிருந்து ஆக்ராவுக்கு எடுத்து […]

Delhi Fact Check Fake News Hindus

டில்லி: கோயிலில் சிலைகளை சேதம் செய்த நபர் கைது; உண்மையை தெளிவுப்படுத்திய போலீசார் !

மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் நகரில் ஒரு கோயிலை சேதம் செய்ததாக 28 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் உண்மை நிலவரத்தை சொல்வதற்குள் பாசிச பயங்கரவாதிகள் இதை செய்தது முஸ்லிம்கள் தான் என்ற ரீதியில் பொய் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இரண்டு சிவன் சிலைகள் இடம்பெயர்க்கப்பட்டதாகவும், கற்கள் மற்றும் செங்கற்கள் கோயிலில் பரவலாக கிடந்ததாகவும் கூறி, பாசிம் பூரியில் உள்ள வைஷ்ணோ மாதா கோயில் அர்ச்சகர் ரஞ்சீத் ஃபதக் (47) என்பவரிடமிருந்து சனிக்கிழமை காலை […]

narsing saraswati
Hate Speech Islamophobia Muslims Uttar Pradesh

நபிகள் நாயகத்தை குறித்து அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடியவர்கள் மீது உபி போலீசார் வழக்கு பதிவு !

உபி: சமூக வலைதளங்களில் பயங்கரவாதியாக விமர்சிக்கப்படும் நரசிங்கானந்த் சரஸ்வதி நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறாக பேசியதற்கு ஜனநாயக ரீதியாக, அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவித்த100 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மீது உத்தரபிரதேசத்தின் பிலிபிட் காவல்துறை வழக்கு பதிவு செய்ததாக பிரசித்திமிக்க உருது செய்தித்தாள் இன்குலாப் தெரிவித்துள்ளது. விதி மீறல் என குற்றச்சாட்டு: போராட்டக்காரர்கள் கொரோனா கால சமூக இடைவெளியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் மேலும் பஞ்சாயத்து தேர்தல் காரணமாக இப்பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாகவும் […]