பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU ) சமஸ்கிருத வித்யா தர்ம் விஜியன் (SVDV) இலக்கியத் துறையில் ஒரு முஸ்லிம் உதவி பேராசிரியரை நியமித்தது கடும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது . வியாழக்கிழமை (7-11-19) முதல் வர்சிட்டி வளாகத்தில் உள்ள துணைவேந்தர் இல்லத்திற்கு அருகிலுள்ள ஹோல்கர் பவனில் ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் துறையின் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை நோக்கி கவனத்தை ஈர்க்க இசைக்கருவிகள் வாசித்தனர். ‘இந்து அல்லாதவர்’ நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் […]
Author: NewsCap.in Staff
பாபரி மஸ்ஜித் விவகாரம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது -TNTJ
சுதந்திர இந்தியாவில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமலிருந்த பாபர் மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. எந்தவொரு வழக்கிலும் சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பளிக்க வேண்டும் என்று தான் இந்திய அரசியல் சட்டம் கூறுகின்றது. அதையே உச்ச நீதிமன்றமும் வலியுறுத்துகிறது. ஆனால் பாபர் மஸ்ஜித் தீர்ப்பில் அத்தகைய சட்ட அடிப்படை விதிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டு ஐநூறு ஆண்டுகள் ஆகிவிட்டதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் அதே இடத்தில் கோவில் கட்டலாம் என்று அனுமதி […]
‘பாபர் மஸ்ஜித் குறித்த உச்சநீமன்றத்தின் தீர்ப்பு நீதியை நிலைநாட்டவில்லை’ – NTF அறிக்கை!
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) மாநில பொதுச் செயலளர் ஏ.எஸ்.அலாவுதீன் வெளியிடும் அறிக்கை: பாபர் மஸ்ஜித் குறித்த உச்சநீமன்றத்தின் தீர்ப்பு நீதியை நிலைநாட்டவில்லை. உ.பி.மாநிலம், அயோத்தி பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் ஆவணம் என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து தீர்ப்பு வழங்கப்பட்டால் […]
பாபர் மஸ்ஜித் வழக்கு தொடர்பான தீர்ப்பு..! தமிமுன் அன்சாரி அறிக்கை!
இந்திய நீதித்துறை வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வந்த பாபர் மஸ்ஜித் வழக்கில், உச்ச நீதி மன்றம் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இத் தீர்ப்பு என்பது சட்டம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வந்தோம். இப்போது நம்பிக்கைகள் மற்றும் சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி தீர்ப்பின் வாசகங்கள் அமைத்திருக்கிறது. தீர்ப்பின் பல இடங்களில் சமரசம் மற்றும் இணக்கம் கருதி நீதிபதிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் என்பது தெரிகிறது. ஆனால்,அந்த இடம் சம்மந்தமான […]
40 குழந்தைகளின் கல்வி செலவை கவனிக்கும் முஹம்மத்- வி.வி.எஸ். லக்ஷ்மன் பாராட்டு!
கான்பூரைச் சேர்ந்த முஹம்மத் மஹபூப் மாலிக் ஒரு சிறிய தேநீர் கடை நடத்தி வருகிறார். அவரது வருமானத்தின் மூலம் ஊரில் உள்ள 40 குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்கிறார். இதற்காக அவரது மொத்த வருமானத்தில் 80% செலவாகிறது. இவரது இந்த செயல் பாராட்டிற்குரியது. உத்வேகம் அளிக்க கூடியது என்று பிரபல முன்னாள் இந்தியா கிரிக்கட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவரது இந்த பதிவிற்கு பெரும்பாலான மக்கள் வரவேற்பு அளித்துள்ள […]
முன்னாள் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவனின் மனைவி பிடிபட்டார்!
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் மனைவிகளில் ஒருவரை துருக்கி அரசாங்கம் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இன்று (6-11-19) தெரிவித்துள்ளார். அமெரிக்க இராணுவ படையினர் பாக்தாதியை பிடிக்க முயன்றபோது உடையில் அணிந்திருந்த குண்டை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி அமெரிக்க அரசு ஒரு பெரும் பிரச்சாரத்தையே நடத்தியது. நாங்கள் அவருடைய மனைவியைக் கைது செய்துள்ளோம், எனினும் அவர்களைப் போல பரபரப்பு ஆக்கி கொண்டு அலையவில்லை என்று […]
டில்லி காற்று மாசுபாட்டிற்கு பாகிஸ்தான் சீனா காரணம் – பாஜக தலைவர் !
டெல்லி-என்.சி.ஆர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு மிகவும் மோசமாக உள்ள நிலையில், இது குறித்து நேற்று (5-11-19) கருத்து தெரிவித்துள்ள உபி. பாஜக தலைவர் மீரட் வினீத் அகர்வால் ஷர்தா: மோதி மற்றும் அமித் ஷாவின் சிறப்பான செயல்பாடுகளை பொறுத்து கொள்ள முடியாமல் பாகிஸ்தான் மற்றும் சீனா இந்தியாவிற்குள் விஷ வாயுவை செலுத்தியுள்ளன என்று குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் விஷ வாயுவை செலுத்தியுள்ளதா என்று தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். […]
ஜார்கண்டில் மீண்டும் கும்பல் வன்முறை சம்பவம்!
பொகாரோ: ஜார்கண்ட் மாநிலத்தின் பொகாரோ பகுதியில் உள்ள சி.சி.எல் கோவிந்த்பூர் காலனியில் உள்ள கார் ஒன்றில் பேட்டரியை திருட வந்ததாக கூறி முபாரக் அன்சாரி மற்றும் அவரது நண்பர் அக்தர் அன்சாரி ஆகிய இருவர் மீதும் கடந்த செவ்வாய்க்கிழமை (5-11-19) அன்று மூர்க்க கும்பல் நடத்திய கொலைவெறி தாக்குதலில் முபாரக் அன்சாரி என்பவர் அடித்தே கொல்லப்பட்டார். அவரது நண்பர் அக்தர் அன்சாரி பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்கு […]
போலீசாரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் …
கடந்த நவம்பர் 2ம் தேதி டில்லியில் உள்ள டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பார்க்கிங் விஷயமாக எழுந்த சச்சரவு மோதலாக வெடித்ததைத் தொடர்ந்து காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே (பி.எச்.கியூ) போலீசார் இன்று (5-11-19) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (4-11-19) இது குறித்து கருத்து தெரிவித்த ஐபிஎஸ் போலீஸ் கூட்டமைப்பு சங்கம் நாடு முழுவதும் உள்ள போலீசார் வக்கீல்களால் தாக்கப்பட்ட போலீசாருடன் ஒன்றுபட்டு நிற்பதாக தெரிவித்துள்ளது. நீதிமன்ற வளாக மோதலின் போது கூடுதல் போலீஸ் கமிஷனர் […]
“காவிகளே, எது கலாச்சாரம்?” : வெளுத்துவாங்கிய எம்.பி ஜோதிமணி!
“காவிகளே, உடை என்பது எனது தனிப்பட்ட உரிமை; அதனால் அமைதியாகுங்கள்” என தன் உடை குறித்து விமர்சிப்பவர்களுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவில் சர்வதேச பெண் அரசியல்வாதிகள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்க்க அமெரிக்கா செல்லவிருந்த ஜோதிமணியை தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வழியனுப்பி வைத்தார். அப்போது ஜோதிமணி எம்.பி ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் உடையணிந்திருந்தார். இந்நிலையில் அவரது உடையை விமர்சித்து இந்துத்துவா கும்பல் மோசமான வகையில் சமூக வலைதளங்களில் தாக்குதல் நடத்தினர். […]
தீவிரவாதி இல்லை; – 12 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான குலாப் கான்!
ராம்பூர் நீதிமன்றத்தால் நேற்று (2-11-19) விடுவிக்கப்பட்ட இருவரில் ஒருவரான குலாப் கான், சனிக்கிழமை பரேலி மத்திய சிறையிலிருந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் வெளியேறினார். பரேலியின் பஹேரி நகரத்தில் வசிக்கும் 48 வயதான குலாப் கான், “கடவுள் எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளித்துள்ளார்” என்று தெரிவித்தார். நேற்று (2-11-19) சிறையிலிருந்து வெளியேறிய அவர் “பயங்கரவாத தாக்குதலுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, இருந்தும் இந்த வழக்கில் நான் சிக்கவைக்கப்பட்டேன். இந்த வழக்கில் நான் […]
கைவண்டியில் சடலம் எடுத்து செல்லப்பட்ட கொடூரம்! – எஸ்டிபிஐ அமைப்பினரை அணுகிய போலீஸ்!
விழுப்புரம் அருகே உறவினா் சடலத்தை கைவண்டியில் எடுத்து செல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் ஏழை மக்களுக்கு தொடரும் அவல நிலையை எடுத்து காட்டுவதாக உள்ளது. விழுப்புரம் மாவட்டம், ஒழுந்தியாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லிகா (62). இவரது தங்கை பவுனு (60). அவரது கணவா் சுப்பிரமணி (65). இவா்கள் இருவரும் ஒழிந்தியாப்பட்டு கிராமத்திலேயே வசித்து வந்தனா். சில தினங்களுக்கு முன்பு மல்லிகாவைப் பாா்க்க, கணவா் சுப்பிரமணியுடன் பவுனு வந்துள்ளார். அங்கு சுப்பிரமணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. வறுமை காரணமாக உடனடியாக […]
‘காஷ்மீர் மக்களின் நிலை நல்லதாக இல்லை-இப்படியே தொடர்வது சரி இல்லை’- ஜெர்மன் நாட்டு அதிபர் !
மூன்று நாள் அரசு பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் ஜெர்மன் நாட்டு பிரதமர் அங்கேலா மேர்க்கெல், “தற்போது காஷ்மீரில் மக்களின் நிலைமை நல்லதாக இல்லை, நிலைமை தொடர்வதற்கு ஏதுவாகவும் இல்லை. நிலைமை நிச்சயமாக சீராக மேம்படுத்தப்பட வேண்டும். இது குறித்து பிரதமர் மோதியுடனான சந்திப்பின் போது நிச்சயம் வலியுறுத்துவேன்” என்று நேற்று (1-11-19) கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்தானது மோதி அரசங்கத்தின் பரப்புரையான “காஷ்மீரில் எல்லாம் நலம். மக்கள் மகிழ்சியாக உள்ளனர்” என்பதற்கு நேர் எதிராக அமைந்து உள்ளது […]
சவுதி அரேபியாவில் மரணித்த கனகராஜ் உடலை தாயகம் அனுப்பிய ரியாத் தமுமுக!
தமிழகத்தை சேர்ந்த அரியலூர் மாவட்டம் மற்றும் தாலுகா ஏலாக்குறிச்சி அருகில் சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்த சேகர்(லேட்) அவர்களின் மகன் கனகராஜ் சவுதி அரேபியா – ரியாத்தில் உள்ள Retaj Al-Waseel எனும் தனியார் கம்பெனியில் மெக்கானிக் ஆக பணியாற்றி வந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ரியாத்தில் உள்ள ராபியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு உயர் சிகிச்சைக்காக சனத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 14-10-2019 அன்று மதியம் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருக்கு அம்மா […]
‘முட்டை சாப்பிடுவது மனித மாமித்தை சாப்பிட வைக்கும்’ – பாஜக தலைவர் விஞ்ஞான பேச்சு!
மத்திய பிரேதேச மாநிலத்தில் அரசு அங்கன்வாடியில் உள்ள சிறுவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் காங்கிரஸின் கமல்நாத் அரசாங்கம் இலவச முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள அம்மாநில எதிர்க்கட்சி பாஜக தலைவர் கோபால் பார்கவா அசைவ உணவு சாப்பிடுவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளார். குழ்நதைகளை சிறு வயதிலிருந்தே முட்டை,கறி போன்றவற்றை சாப்பிட பழக்கினால் பின்னாட்களில் அவர்கள் மனித மாமிசத்தை(நரமாமிசிகளாக) சாப்பிடுபவர்களாக மாறிவிடுவார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் […]