மத்திய பிரேதேச மாநிலத்தில் அரசு அங்கன்வாடியில் உள்ள சிறுவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் காங்கிரஸின் கமல்நாத் அரசாங்கம் இலவச முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள அம்மாநில எதிர்க்கட்சி பாஜக தலைவர் கோபால் பார்கவா அசைவ உணவு சாப்பிடுவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளார். குழ்நதைகளை சிறு வயதிலிருந்தே முட்டை,கறி போன்றவற்றை சாப்பிட பழக்கினால் பின்னாட்களில் அவர்கள் மனித மாமிசத்தை(நரமாமிசிகளாக) சாப்பிடுபவர்களாக மாறிவிடுவார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் முதல்வரின் இந்த நடவடிக்கையானது மக்களின் மத நம்பிக்கை மற்றும் நம்பிக்கையில் தலையிடும் முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறியீட்டு தரவரிசை பட்டியலில் நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவை பின்னுக்கு தள்ளியுள்ள நிலையில் பாஜக தலைவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து உங்கள் கருத்து என்ன?