ansari medical colege
Political Figures States News Tamil Nadu

நாகை உட்பட தமிழகத்திற்கு 3 புதிய மருத்துவக்கல்லூரிகள்!!

தமிழகத்திற்கு 3 புதிய மருத்துவக்கல்லூரிகள் அறிவிப்புக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் .. புதிதாக நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களுக்கு மருத்துவக்கல்லூரிகளை மத்திய அரசு வழங்கியிருப்பதை மஜக சார்பில் வரவேற்கிறோம், நன்றி தெரிவிக்கிறோம். குறிப்பாக நாகப்பட்டினத்திற்கு மருத்துவக்கல்லூரி வேண்டும் என்றும் அதற்கு தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றத்தில் நான் இரண்டு முறை வலியுறுத்தி பேசியிருந்தேன். இந்நிலையில் நாகப்பட்டினம் […]

ban evm
EVM

2019 மக்களவை தேர்தல் : 347 தொகுதிகளின் தரவுகள் (mismatch) பொருந்தவில்லை!

தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 2019 மக்களவை தேர்தலின் இறுதி வாக்கு எண்ணிகை மற்றும் தேர்தல் ஆணையம் அறிவித்த தற்காலிக பட்டியல்களுக்கு (provisional lists) இடையே பெரிய அளவிலான முரண்பாடுகள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 347 தொகுதிகளின் தரவுகள் பொருந்தவில்லை. மேலும் 6 தொகுதிகளில் இந்த வித்தியாசமானது வெற்றி பெற்ற வாக்கு எண்ணிக்கையை விட அதிமாக உள்ளது என்றும் அந்த மனுவில் பல்வேறு மேற்கோள்களின் மூலம் கூறப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகளுக்கான […]

BJP corrupt
BJP Jharkand

பாஜகவின் வாஷிங் பவ்டர் இப்போது கொலைகாரர்களை கூட சுத்தம் செய்கிறதா ?

ஜார்கண்ட் மாநில பள்ளி வார்டன் சுசித்ரா மிஸ்ரா கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள  சஷி பூஷண் மேத்தா பாஜகவில் சேர்ந்து மோடியுடன் இன்று (25-11-19) மேடையை பகிர்ந்து கொண்டார். சஷி பூஷன் கட்சியில் இணைவதை அமைதியான முறையில் எதிர்த்து போராடிய சுசித்ராவின் மகன்கள் கடந்த அக்டொபர் மாதம் பாஜக கட்சி தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ள நிலையிலும் கூட மோதி ஏன் இது குறித்து அமைதியாக இருக்கிறார்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  கொலை […]

mosque
Sikhs Uttar Pradesh

உபி : பள்ளிவாசல் கட்டுவதற்காக சீக்கியர் அளித்த நில நன்கொடை!

சீக்கியர்களின் மதகுருவான குருநானக் தேவின் 550 வது பிறந்தநாளின் புனித மாதத்தில் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் மசூதி ஒன்றை கட்டிக்கொள்வதற்காக 70 வயதான சீக்கியர் ஒருவர் தனது நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். சமூக ஆர்வலரான சுக்பால் சிங் பேடி இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அன்று புர்காசி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 900 சதுர அடி நிலத்திற்கான நில ஆவணங்களை நகர பஞ்சாயத்து தலைவர் ஜாஹிர் பாரூகி அவர்களிடம் அவர் வழங்கினார். […]

kerala bjp hypocrisy
BJP Gaumata Kerala

கேரளா பாஜக அதிரடி; கூட்டுறவு சங்கத்தின் மூலம் மாட்டிறைச்சி விற்பனை !

மாட்டிறைச்சி விற்க பாஜகவின் மாவட்ட பிரிவு கூட்டுறவு சங்கத்தை அறிமுகப்படுத்துகிறது! பாரதீய ஜனதா கட்சியின் திருச்சூர் மாவட்ட பிரிவு இறைச்சி மற்றும் மீன்களை உற்பத்தி செய்வதற்கும், பதப்படுத்துவதற்கும், சந்தைப்படுத்துவதற்குமான ஒரு கூட்டுறவு சங்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்பே கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடமிருந்து முறையாக ஒப்புதலும் பெற்றுள்ளது மாவட்ட பாஜக தலைமை. கால்நடைகள் மற்றும் மீன் பொருட்களை வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வதாக எங்கள் பைலாவில் குறிப்பிட்டுள்ளோம். “நாங்கள் இன்னும் இறைச்சியை பதப்படுத்தவோ விற்பனை […]

nehru fake news
Fact Check Fake News

நேருவும் பெண்களும்- சங்கி பெருமக்கள் பரப்பும் பொய்கள் !

நேரு பற்றிய பேச்சு வந்ததுமே பெண்கள் விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் பற்றி ஆரம்பித்து விடுகிறார்கள். அவர் ஏறக்குறைய ஒரு ‘ஸ்த்ரீ லோலன்’ போல சித்தரிக்கப் படுகிறார். நேரு மிகவும் ரசனைக்கார ஆசாமி. பெண்கள் விஷயத்திலும் அவர் ரசனையானவர்தான். ஆனால் அதற்காக அவர் எந்தப் பெண்ணையும் வல்லுறவு செய்யவில்லை. பாராளுமன்றத்தில் உட்கார்ந்து போர்னோகிராஃபி பார்க்கவில்லை. கட்டிய மனைவியை விட்டு ஓடி வந்து விடவில்லை. எனக்கு மனைவியே இல்லை என்று அஃபிடவிட் கொடுக்கவில்லை. சொல்லப் போனால் அவருக்கு […]

fadnavis bjp
BJP Maharashtra

மகாராஷ்டிரா: மீண்டும் முதல்வர் ஆனார் ஃபட்னாவிஸ் !

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என்று நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் (NCP) ஷரத் பவார் கூறி இருந்த நிலையில் அவரது மருமகன் அஜித் பவார் அளித்த ஆதரவின் பேரில் சனிக்கிழமை அதிகாலையில் தேவேந்திர ஃபட்னாவிஸின் தலைமையில் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைந்துள்ளது. திடீர் திருப்பமாக இன்று காலை மகாராஷ்டிராவின் முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவி ஏற்றார். மேலும் என் சி பி கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவி […]

stalin
Political Figures States News Tamil Nadu

“மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டடவர்களுக்கான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டிருக்கிறது” – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

அனைத்து ‘இடஒதுக்கீடு’ விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார் . மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த இந்த கூட்டத்தொடரிலேயே உரிய அரசியல் சட்டத் திருத்த மசோதா கொண்டு வர வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவக் […]

bjp terrorist
BJP Corporates

தீவிரவாத தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து பாஜக நிதி பெற்றது அம்பலம்!

தீவிரவாத தொடர்புடையதாக அமலாக்கத்துறையால் விசாரிக்கப்படும் நிறுவனத்திடம் இருந்து பா.ஜ.க தேர்தல் நன்கொடை பெற்ற தகவல் அம்பலமாகியுள்ளது. 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மாஃபியா தலைவன் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளர் இக்பால் மேமன் என்கிற இக்பால் மிர்ச்சி. இவரிடமிருந்து RKW டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றது குறித்த புகாரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், RKW டெவலப்பர்ஸ் நிறுவனம் பா.ஜ.க-வுக்கு தேர்தல் நன்கொடை அளித்ததாக பா.ஜ.க தேர்தல் ஆணையத்தில் தாக்கல் […]

hemamalini
Actors

‘குரங்குகள் தொல்லை தாங்கள- ஏதாச்சும் செய்ங்க’ – பாஜக எம்பி ஹேமா மாலினி மக்களவையில் முறையீடு!

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி. ஹேமா மாலினி தனது தொகுதியான மதுராவில் நிலவும் ‘குரங்கு அச்சுறுத்தல்’ குறித்து நேற்று (20-11-19) மக்களவையில் பேசினார்.  “உயிருக்கு ஆபத்தான தாக்குதல்கள்” நடைபெற்று வருவது குறித்து கவலை தெரிவித்த ஹேமா மாலினி, விலங்குகளை கருத்தடை செய்வதற்கான முயற்சிகள் அவற்றை “மிகவும் வன்முறையாக” மாற்றி விட்டன என்று தெரிவித்தார். “தயவுசெய்து இந்த விஷயத்தை லேசாக எடுத்து கொள்ள வேண்டாம். இது மிகவும் மிக முக்கியமான விஷயம்” என்று மேலும் அவர் தெரிவித்தார். […]

masjid singapore
International News

வீடற்றவர்களுக்காக இனி பள்ளிவாசலில் தங்குமிடம் !

சிங்கப்பூரில் வசதி குறைந்த பல தொழிலாளர்கள் வீடில்லாமல் இரவு நேரங்களில் தெரு ஓரங்களில் உறங்கி வருகின்றனர் என்பதை அறிந்த சிங்கப்பூரில் உள்ள மஸ்ஜித் சுல்தான் நிர்வாகம் வீடற்றவர்களுக்காக தரைத் தளத்தை ஒதுக்க முன் வந்துள்ளது. ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த  இடமானது பள்ளிவாசல் வளாகத்திலுள்ள ஒரு கட்டிடத்திலாகும். மேலும் இன மத வேறுபாடுகளின்றி யார் வேண்டுமானாலும் தங்களுக்கு ஒரு நிரந்தர தங்குமிடம் அமையும் வரை இங்கு தங்கி கொள்ளலாம் என்று பள்ளிவாசல் நிர்வாகி முஹம்மத் ஐஸுதீன் தெரிவித்துளளார்.  இரவு […]

babri demolition vairamtuthu
Babri Masjid Tamil Nadu

‘அயோத்தி ராமன் அழுகிறான்’ -கவிப் பேரரசு வைரமுத்து!

‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில் இடிந்து போய் எழுதியது’ என்று கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய இந்த கவிதை================================== கங்கை காவிரி இணைக்க வேண்டும்கர சேவகரே வருவீராகாடுகள் மலைகள் திருத்த வேண்டும்கர சேவகரே வருவீராவறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்கர சேவகரே வருவீரா மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்படைப்பதற்கில்லைவித்துன்னும் பறவைகள்விதைப்பதில்லை விளைந்த கேடுவெட்கக் கேடுசுதந்திர இந்தியாஐம்பதாண்டு உயரத்தில்அடிமை இந்தியன்ஐநூறு ஆண்டு பள்ளத்தில் ஏ நாடாளுமன்றமேவறுமைக் கோட்டிற்குக் கீழ்நாற்பது கோடிப் பேர் என்றாய்அறிவுக் கோட்டின் கீழ்அறுபது கோடிப் […]

krishnagiri
Tamil Nadu

பெற்றோரை கைவிட்ட மகனிடமிருந்து ரூ.3 கோடி மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு !

கிருஷ்ணகிரியில் பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்ட மகனிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டு பெற்றோரிடமே ஒப்படைத்தார் வருவாய் கோட்டாட்சியர். கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள பெரியசாமி கவுண்டர் தெருவில் வசித்து வருபவர் கிட்டு (எ) பெரியசாமி (67). இவர் வணிகவரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சகுந்தலா (60). இவர்களது மகன் அருண்குமார் (40). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அருண் குமாருக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டு செயல் இழந்த நிலையில், […]

Fathima support
Islamophobia

ஃபாத்திமா லத்தீஃபிற்கு ஆதரவாக உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் தலைவர் நரேஷ் சக்கரவர்த்தி!

ஐஐடி மெட்ராஸில் நிறுவன படுகொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீஃபிற்கு ஆதரவாக ஹைதரபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அளித்த பேட்டியின் மொழிபெயர்ப்பு.. ஐஐடி மெட்ராஸில் பாத்திமா லத்தீஃப் நிறுவனப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் மரணிப்பதற்கு முன் தனது மானுடவியல் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு இறந்திருக்கிறார். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 2014 ல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுபோன்ற மாணவர் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதே போன்றுதான் சாதிய […]

gautam
Delhi States News

கௌதம் கம்பீரின் விளக்கத்தை படிங்க…மெய் சிலிர்க்கும்!

டில்லி காற்று மாசுபாடு குறித்த நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பங்கேற்காமல் 24 எம்பிகள் புறக்கணித்தனர். 4 பேர் மட்டுமே வந்ததையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்து எம்பிகளில் கௌதம் கம்பீரும் ஒருவர். இவர் அன்றைய தினம் கிரிக்கட் கமண்டரி செய்வதற்கு சென்றுவிட்டார். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு “எனது பணி பேசும்!” . நான் அரசியலில் வந்தது சம்பாதிப்பதற்காக இல்லை. எனினும் எனக்கென்று குடும்பம் குட்டி உள்ளது அவர்களை காப்பாற்றுவதற்காக நான் […]