அஸ்ஸாம் மாநில காங்கிரசின் மரைனி பகுதி எம்.எல்.ஏ வான ருப்ஜோதி குர்மி தனது உள்ளங்கையை பிளேடால் கீரி இரத்தத்தை வைத்து அட்டையில் கோரிக்கைகளை எழுதி போராட்டம் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்களை பாஜக அரசு தனியாருக்கு விற்பதினால் பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் அதனை கைவிடக் கோரியும், மேலும் அஸ்ஸாம் மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த மசோதா (Citizens Amendment Bill) எதிராகவும் அவர் தனது கோரிக்கைகளை எழுதியிருக்கிறார். அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஹிந்துஸ்தான் […]
Author: NewsCap.in Staff
7 பெண்கள் உட்பட 22 முஸ்லிம்கள் நீதிபதிகளாக தேர்வு- பீகாரில் சாதனை!
பீகாரில் நடைபெற்ற நீதித்துறை சேவைகளுக்காக நடைபெற்ற தேர்வில் 22 முஸ்லிம் இளைஞர்கள் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக 7 பெண் முஸ்லிம் பெண் நீதிபதிகள் உள்ளனர். இந்திய நீதித்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இத்தகைய வெற்றி என்பது மகிழ்ச்சியானதென மூத்த வழக்கறிஞர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார். மேலும் சனம் ஹயாத் என்ற மாணவி முதல் பத்து இடங்களிலும் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக உ.பி யில் […]
தமிழக பெண்களின் கனிவான கவனத்திற்கு!
கைபேசியில் காவலன் செயலி உங்களுடன் இருக்கும் காவலன் . ஹைதராபாத்தில் சகோதரி பிரியங்கா அவர்களுக்கு நடந்த அசம்பாவிதம் மனம் கனக்க செய்தது. அத்தகைய சந்தர்ப்பங்களை கையாளுவது எப்படி? காவல்துறை உதவியை பெறுவது எப்படி என பார்க்கலாம் . பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை KAVALAN SOS என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் எந்த ஒரு அவசர நிலையிலும் ஒரு க்ளிக் மூலம் காவல்துறை உதவியைக் பெற முடியும். மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் […]
சுதர்சன் பத்மநாபனை இன்னும் கைது செய்யாதது ஏன்..? வலுக்கும் கேள்வி..
ஐஐடியில் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட பாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு காரணமான பேராசியர் சுதர்சன் பத்மநாபனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்ற கேள்வி சமூக வளைதளங்களில் வலுத்து வருகிறது. கடந்த வாரம் சென்னை வந்திருந்த பாத்திமா வின் தந்தை அப்துல் லத்தீஃப் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்தார். பாத்திமாவின் மொபைல் ஃபோனை கொல்லம் காவல்நிலையத்தில் அவரது தங்கையான ஆயிஷா பயன்படுத்திய சிசிடிவி காட்சிகள் இருக்கின்றன. எனவே பாத்திமா எழுதிய கடிதங்கள் குறித்து சந்தேகம் இருப்பதாகவும், சுதர்சன் பத்மநாபனை […]
பாபர் பள்ளிவாசலை சட்டவிரோதமாக இடித்த சங்பரிவார கும்பலின் பெயர் பட்டியல்!
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதியை சட்ட விரோதமாக இந்துத்துவ சங் பரிவார கும்பல் இடித்தது குறித்து விசாரித்த லிபர்ஹான் விசாரணை ஆணையம் 68 பேர் குற்றவாளிகள் என்று கண்டறிந்தது. இதில் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய், பின்னர் பிரதமரானார். பெயர்கள் (ஆணையம் குறிப்பிட்டுள்ள வரிசை அமைப்பில்): ஆச்சார்யா தரமேந்திர தேவ், தரம் சன்சாத் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர், வி.எச்.பி. ஏ.கே. சரண், ஐ.ஜி. பாதுகாப்பு, உத்தரபிரதேசம் அகிலேஷ் மெஹ்ரோத்ரா, பைசாபாத் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு […]
மேட்டுப்பாளையம் : ‘சாதி உணர்வால் கட்ட பட்ட சுவர்’ – பா.ரஞ்சித் விளாசல் !
கோவை மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் உயிரிழப்புக்குக் காரணமான குற்றவாளியைக் கைதுசெய்! – திருமாவளவன் கண்டன அறிக்கை!
மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியில் சுவர் இடிந்து 17 பேர் மரணம்- உயிரிழப்புக்குக் காரணமான குற்றவாளியைக் கைதுசெய் ! உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்கு தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!~~~~~~~கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியைச் சேர்ந்த தலித் மக்கள் 17 பேர் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளனர். இதற்குக் காரணமான சிவசுப்பிரமணியன் என்பவரை உடனடியாக எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்; உயிரிழந்த […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியாகியுள்ள 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டும்! – மே 17 இயக்கம்
அமைதியாகப் போராடிய தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காவல்துறை செய்திருக்கிறது. நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது காவல்துறை ஏவியுள்ள அராஜகத்தினை மே பதினேழு இயக்க வன்மையாக கண்டிக்கிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் ஏ.டி காலனி பகுதியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதி இருக்கிறது. அந்த குடியிருப்பின் அருகில் துணிக்கடை உரிமையாளர் ஒருவரின் வீடு இருக்கிறது. பக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்பு இருப்பதால், […]
நீதிபதி லோயா: “ராஜினாமா செய்து விட்டு ஊருக்கு வந்து விவசாயம் செய்வேனே தவிர தவறான தீர்ப்பு வழங்கமாட்டேன்”- இறப்பதற்கு முன்பு லோயா நண்பரிடம் கூறியவை !
தவறான தீர்ப்பு வழங்குவதற்கு பதிலாக., வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்ய விரும்புகிறேன் – இறப்பதற்கு முன்பு தனது கல்லூரி நண்பரிடம் மனமுடைந்து பேசிய நீதிபதி லோயா! நவம்பர் 27ம் தேதி அன்று லாத்தூர் பார் கவுன்சில் உறுப்பினர்கள் லாத்துர் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டு லாத்துர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஒரு பேரணியை நடத்தியிருக்கின்றனர். அவர்கள் நீதிபதி லோயா வின் மரணத்தில் முறையான நீதி விசாரணை கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ஒன்றை […]
கோவை: 11ம் வகுப்பு பயிலும் மாணவி கும்பல் பாலியல் வன்முறை; 4 பேர் கைது !
கடந்த நவம்பர் 26 ஆம் தேதி கோவை சீரானைக்கன்பாளையத்தில் நடந்த கும்பல் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு குற்றவாளிகளை போலீசார் இன்று (30-11-19) கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை கைது செய்ய காவல்துறை சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. ப்ளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவர் 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்ற சமபவத்தில் ஈடுபட்டவர்கள் இந்த சம்பவத்தை வீடியோக பதிவு செய்துள்ளனர். சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட மாணவி தனது ஆண் நண்பருடன் பார்க்கில் தனது […]
சிறுமி பாலியல் பலாத்காரம்; இழப்பீடு தொகை பெற்று தருமாறு ஆசிரியை சபரிமாலா மனு!
நாகை மாவட்டம் சீர்காழி தொகுதியில் உள்ள சித்தன் இருப்பு என்ற கிராமத்தில் , 10 ஆம் வகுப்பு படிக்கும் ஆசிகா என்னும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடந்த நவ.09 அன்று கொல்லப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த 30 வயது நிரம்பிய குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்ட அந்த அபலை சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீட்டு தொகையைப் பெற்றுக் கொடுக்குமாறு “இலக்கு 2040 ” […]
‘அடுத்தது கோவா’-பாஜக வயிற்றில் புளியை கரைக்கும் ஷிவசேனா!
மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு தக்க பாடம் கற்பித்த ஷிவசேனா, இப்போது விஜய் சர்தேசாயின் கோவா ஃபார்வர்ட் கட்சியுடன் கூட்டணியை அமைத்து அண்டை மாநிலமான கோவாவிலும் பாஜக வின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது. “மகாராஷ்டிராவுக்கு அடுத்தது கோவா, அதற்கு அடுத்து மற்ற மாநிலங்களுக்கும் செல்வோம். இந்த நாட்டில் பாஜக அல்லாத அரசியல் முன்னணியை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம், ” என்று சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத் மும்பையில் நேற்று (29-11-19) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கோவாவின் முன்னாள் […]
உபி : ஒரு லிட்டர் பாலில் ஒரு பக்கட் தண்ணீர்:குடிக்க அலைமோதும் ஏழை மாணவர்கள்!
அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பால் பாக்கட்டுடன், ஒரு பக்கட் தண்ணீர் கலந்து 81 பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த கொடூரம் பாஜக ஆட்சி செய்யும் உபியில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் வளர்ச்சியடையாத பகுதிகளில் சோன்பத்ரா மாவட்டமும் ஒன்றாகும். மாவட்டத்தில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு சத்தான உணவிற்காக அரசுப் பள்ளிகளில் அரசு சார்பாக உள்ள மதிய உணவு திட்டத்தையே சார்ந்து உள்ளனர் என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். […]
கும்பல் பாலியல் வன்முறை: 3 குழந்தைகள் கொண்ட விதவை பெண்ணை சீரழித்த ஈனப்பிறவிகள்!
கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த 4 நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (22-11-19) அன்று 32 வயதான பெண் ஒருவரை கொடூரமாக கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்தது யார் பலாத்காரம் செய்வது என்பது குறித்து எழுந்த சண்டையில் கும்பலில் ஒருவன் அடித்து கொல்லப்பட்டான். பாதிக்கப்பட்ட பெண்மணி நெய்வேலியைச் சேர்ந்த ஒரு விதவை பெண் என்றும் அவருக்கு 3 பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு உறவினர் ஒருவருடன் சென்று கொண்டிருக்கையில் அவ்வழியில் […]
“காஷ்மீரில் இஸ்ரேல் மாடலை பின்பற்றுங்கள்!” – இந்திய தூதரக அதிகாரி சர்ச்சை பேச்சு !
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் பயன்படுத்திய அதே முறைகளை இந்தியாவின் காஷ்மீரிலும் பின்பற்றி இந்துக்களை அங்கு குடியமர்த்த வேண்டும்.. இஸ்ரேல் மக்களால் இதை செய்ய முடியுமானால் நம்மாலும் இதை செய்ய முடியும் என்று அமெரிக்காவில் உள்ள இந்தியாவின் தூதரக அதிகாரி சந்தீப் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் “இந்த பேச்சானது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியின் பாசிச மனநிலையைக் காட்டுகிறது” என்று கருத்து தெரிவித்துளளார். எனினும் நமது இந்திய மீடியாக்கள் இதை […]