Assam Indian Economy

“இது ஹிட்லர் ஆட்சி”-இரத்தத்தில் கோரிக்கை எழுதி போராட்டம் நடத்திய அஸ்ஸாம் எம்.எல்.ஏ!

அஸ்ஸாம் மாநில காங்கிரசின் மரைனி பகுதி எம்.எல்.ஏ வான ருப்ஜோதி குர்மி தனது உள்ளங்கையை பிளேடால் கீரி இரத்தத்தை வைத்து அட்டையில் கோரிக்கைகளை எழுதி போராட்டம் நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களை பாஜக அரசு தனியாருக்கு விற்பதினால் பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் அதனை கைவிடக் கோரியும், மேலும் அஸ்ஸாம் மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த மசோதா (Citizens Amendment Bill) எதிராகவும் அவர் தனது கோரிக்கைகளை எழுதியிருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஹிந்துஸ்தான் பேப்பர் லிமிட்டட் உள்ளிட்ட ஏராளமான காகித தொழிற்சாலைகளை அரசு மூடி வருகிறது. ஐலாபரி மற்றும் ஹதிகிரா தேநீர் தொழிற்சாலைகள் கடந்த பல மாதங்களாக செயல்படுவதில்லை. ஊழியர்கள் தற்கொலை செய்து மடிகின்றனர். தொழிற்சாலைகளை நம்பி பல லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. அஸ்ஸாம் மாநில அரசு 30கோடி ரூபாய் செலவழித்து ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடத்தியிருக்கிறது. ஆனால் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை. இது ஹிட்ரலின் ஆட்சியை விட கொடூரமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

அவர் சட்டமன்றத்திற்கு வெளியே தனது இடது கையின் உள்ளங்கையில் பிளேடால் அறுத்து அதிலிருந்து வந்த இரத்தத்தின் மூலம் தனது கோரிக்கைளை எழுதினார்.