மத அடிப்படையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது பாஜக வுக்கு விலைபோய்விட்டதாக கடுமையாக விமர்சிக்கப்படும் அதிமுக மத அடிப்படையிலான குடியுரிமை திருத்த மசோதாவை ராஜ்யசபாவில் ஆதரித்து வாக்களித்துள்ளது. பாஜக வின் மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக எம்பி எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் அறிவித்துள்ளார். இது இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த தமிழ் அகதிகள் மத்தியில் கடும் […]
Author: NewsCap.in Staff
தப்ரேஸ் அன்சாரி வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன்! – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
தப்ரேஸ் அன்சாரியை கூட்டுக்கொலை செய்தவர்களுக்கு ராஞ்சி நீதிமன்றம் பெயில் கொடுத்துள்ளது. தப்ரேஸ் அன்சாரி, பாஸிஸ மத வெறியர்களால் கும்பல்கொலை செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் அவரை கொலை செய்த குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்ட 13 கொலையாளிகளில் 12 பேருக்கு பெயில் கொடுத்து விடுதலை செய்துள்ளது ராஞ்சி நீதிமன்றம். இவர்களில் ஐந்து பேருக்கு நேற்று, டிச:10ம் தேதியும், மற்றொருவருக்கு டிச:9ம் தேதியும் பெயில் வழங்கப்பட்டது, மேலும் ஐவருக்கான பெயில் நிலுவையிலுள்ளது அவர்களுக்கும் அடுத்த வாரத்தில் […]
உயரும் ஜிஎஸ்டி வரி – உணவுப் பொருட்கள், ஓட்டல் பண்டங்களின் விலை அதிகரிக்கும் எனத் தகவல்..
ஜிஎஸ்டி வரிகளை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால் உணவுப் பொருட்கள், ஆடைகள், விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் விரைவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என நினைத்த பாஜக அரசின் நினைப்பில் விழுந்தது மண். கடந்த 2017ம் ஜூலை முதல் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் அரசுக்கு சராசரியாக 14.4 சதவீத வருவாய் கிடைத்து வந்தது. அண்மையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக 11.6 சதவீதமாக […]
இன்று ‘உலக மனித உரிமை தின’மாம், யாரை ஏமாற்ற ?!
இன்று Dec 10 உலக மனித உரிமை தினம்: உலகில் எங்குமே மனித உரிமைகள் பாதுகாக்கப்படாத இத்தருணத்தில் இத்தினத்தை நினைவு கூர்ந்து ஐநா அனுஷ்டிப்பது கேளிக்கூத்தும் கண்துடைப்புமாகும். உலகெங்கிலும் உள்ள எல்லா பகுதிகளிலும் எங்கோ ஓரிடத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்துகொண்டேதானிருக்கின்றன… தனிமனித உரிமைகளையும், ஒரு சமுதாயத்தின் உரிமைகளையும் மதிக்காமல் அவர்களது மானத்திற்கும் உயிர்களுக்கும் ஊறுவிளைவிக்கும் சம்பவங்கள் ஆதிக்கவர்க்கத்தாலும் அதிகார வர்க்கத்தாலும் நடத்துப்பட்டு வந்துகொண்டே இருக்கின்றன. இந்தியாவில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளைவிட அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட […]
இந்தியாவின் 10 தலை சிறந்த ஊடகவியலாளர்கள் ! – யார் இவர்கள்?
இந்திய ஊடகங்களில் மோடி அலையை உருவாக்கி பாஜகவினை ஒட்டுமொத்த இந்திய இந்துக்களின் ரக்ஷ்கரை போல உருவகப்படுத்தி தேர்தல்களில் வெற்றிபெறச்செய்த பங்கு தலைசிறந்த? ஊடகவியலாளர்கள் என கூறப்படும் டாப்-10 ஜர்னலிஸ்ட்ஸை நாம் நன்றாகவே அறிவோம். அர்னாப் , அமிஷா தேவ்கன் , சுதிர் சௌத்ரி போன்ற சர்க்கஸ் கோமாளிகளையும் மற்றும் பெண்களில் அஞ்சனா காஷ்யப் போன்ற ஆவேசிகளையும் வைத்து ஊடகம் என்கிற பெயரில் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் இவர்களுக்கு அவார்டுகளும் பதவி உயர்வுகளும் கொடுத்து கூத்தடித்து வந்தாலும் உண்மையான […]
‘முஸ்லிம்களுக்கு அநீதியிழைத்தால் நானும் முஸ்லிமாக மாறுவேன்’ – சூளுரைத்த ஹர்ஷ் மந்தர்!
பிரபல எழுத்தாளரும் ,உலகறிந்த சமூக சேவகருமான ஹர்ஷ் மந்தர் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் கூட. மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப்பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்ற பெருமையை விட இவர், கலவரங்களில் அனாதைகளாக்கப்பட்ட முஸ்லிம்,தலித் மற்றும் பழங்குடியினருக்காவும் , மனநல காப்பகங்களில் பிள்ளைகளாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்ட மனநோய் பாதித்தவர்களை காப்பக கொடுமைகளில் இருந்து மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வருபவர் என்கிற பெருமதிப்பு உண்டு. “உணவு எனது உரிமை”- என்ற பெயரில் […]
பாலியல் தொழிலில் ஈடுபடுத்த கடத்தப்படும் பாகிஸ்தான் நாட்டு பெண்கள்!
கடந்த 2018 ஆண்டு மட்டும் சுமார் 629 பாகிஸ்தானிய பெண்களை திருமணம் முடித்து அழைத்துப்போகிறோம் என்கிற பெயரிலும், வேலை வாங்கித்தருகிறோம் என்கிற பெயரிலும் சீனர்கள் வந்து பணம் கொடுத்து அழைத்துச்சென்றுள்ளனர். பாகிஸ்தான் நீதிமன்றம் இதனை ஆட்கடத்தல் புகாராக பதிவு செய்து தற்போது விசாரணையை துவக்கியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் இருக்கும் கிறுஸ்தவப்பெண்களே இதற்கு பலியாகியுள்ளனர். அவர்களை சீனர்களுக்கு விற்க உதவியது அந்நாட்டு திருச்சபை ஊழியர்களில் சிலரும், கடத்தப்பட்ட பெண்களின் உறவினர்களுமே ஆவர். கடந்த 2015ம் ஆண்டு முதல் பாக்-சீன […]
ரம்ஸான் அலி – சமஸ்கிருத பேராசிரியரானார்!
பனாரஸ் இந்து பல்கலையில் சமஸ்கிருத துறை துணை பேராசிரியராக அறிவிக்கப்பட்ட பிறகு பெரோஸ் கான் ,மிகுந்த மன உளைச்சல்களுக்கும், மாணவர்களின் கண்டனங்களுக்கும் ஆளானார். மாணவர்களது அட்ராசிடியில் பயந்து அவர், பல்கலைக்கு பணிபுரிய வருவதற்கே பயமாக உள்ளது என்றார். இந்து பல்கலையில் அதுவும் சமஸ்கிருத மொழி பயிற்றுவிக்க ஒரு முஸ்லிமை அனுமதிக்கமாட்டோம் என சில இந்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி வகுப்புகளை நடத்தவிடாமல் செய்துகொண்டிருந்த வேளையில் , சத்தமே இல்லாமல் மேற்கு வங்க மாநிலம், பேளூர் ராமகிருஷ்ண மிஷன் […]
ஐநா மன்றத்தில் கேரள சிறுபான்மை சமூகத்து பெண்!
சசமையலறையில் சோறு பொங்கவும், குழந்தை பெற்று வளர்க்கவும் மட்டும் பழக்கப்பட்டவர்கள் மலபாரி முஸ்லிம் பெண்கள் எனும் அவப்பெயர் சமீபகாலமாக பல படித்த, உத்யோகஸ்த்தத்தில் சாதித்த பெண்களின் வாயிலாக துடைத்தெறியப்பட்டு வருகிறது. இந் நிலையில் சமீபத்தில் துபையில் நடைபெற்ற சர்வதேச நீதிமன்ற பரிபாலனங்கள் கமிட்டியில் உரையாற்றிய ரிதா ஸஹர் மஹ்மூத், தற்போது தனது கருத்துக்களத்தை ஐநா மன்றம் வரை எடுத்துச்சென்றுள்ளார். கேரள, கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியை சேர்ந்த இவர் துபையின் மிடோஸ் எமிரேட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் மாணவியாவார். […]
குடியுரிமை சட்ட திருத்த மசோதா முஸ்லிம்களை மட்டும் வேறுபடுத்துகிறதா ?
மத்திய அமைச்சரவை (கேபினட்) கடந்த புதன் கிழமை அன்று இந்திய குடியுரிமை சட்ட மசோதாவில் (சிஎபி) சில முக்கியமான மாற்றங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. மோதி பிரதமராக பதவியேற்ற முதல் 5 ஆண்டுகளிலேயே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பாஜக முன்னெடுத்தது. அதை நிறைவேற்றுவதற்கு பிரயத்தனம் செய்து தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்தவாரம் மீண்டும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இம்முறை நிறைவேற்றப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா (சிஎபி) […]
என்ஆர்சி: இரண்டாம் சுதந்திரப் போருக்கு அழைப்பு விடுக்கும் மம்தா பானர்ஜி!
“இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணில்லாத வகையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீங்கள் குடியுரிமையை வழக்குவதாக இருந்தால் அதை நாங்கள் ஏற்று கொள்வோம். அதை விடுத்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் (சிஏபி) மதத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு எந்த ஒரு அடிப்படையிலோ மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டினால் அதனை நாங்கள் இறுதி வரை எதிர்ப்போம். இதனால் நாங்கள் தனித்து விடப்பட்டாலும் சரியே.” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முழங்கியிருக்கிறார். “தேசிய குடிமக்கள் பதிவேடு […]
உபி உன்னாவ் வழக்கு: பார்ப்பனீயம் ஏன் சம்பந்த படுத்தப்படுகிறது ?
பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது, இந்த முறையும் கற்பழிப்பு வழக்கு தொடர்பகத்தான். முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கர் 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அவரது தந்தையை கொலை செய்தது தொடர்பான செய்திகள் வெளியான இரண்டு ஆண்டுகளுக்குள், உன்னாவ்வில் மீண்டும் ஒர் பாலியல் வன்கொடுமை தொடர்பான கொடூர சம்பவம் அரங்கேறியுளளது. கடந்த வியாழக்கிழமை கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 23 வயதான இளம் பெண் மீது […]
இனி ஹரியானாவில் தனியார் மழலையர் (LKG,UKG) வகுப்புகள் கூடாது- அரசின் பாரபட்ச உத்தரவு !
ஹரியானா அரசு மாநிலம் முழுவதும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் உள்ள கீழ் மழலையர் (LKG) பள்ளி மற்றும் மேல் மழலையர் பள்ளி (UKG) வகுப்புகள் மற்றும் நர்சரிகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளின் மனநல வளர்ச்சியை கவனத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ரோஹ்தக்கின் தொடக்க கல்வி அதிகாரி விஜய் லக்ஷ்மி நந்தல் தெரிவித்துள்ளார். ஐந்து வயதை எட்டிய பிறகே குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும், அது வரை குழந்தைகள் ஓடி ஆடி விளையாட வேண்டிய வயது, மனநல […]
“அமித்ஷாவின் நாடு தழுவிய NRC என்பது மோதியின் பணமதிப்பிழப்பிற்கு சற்றும் குறைந்ததல்ல” – த்ருவ் ராதே.
த்ருவ் ராதே தி பிரிண்ட் எனும் ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் மொழிபெயர்ப்பு.. உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் நாடு தழுவிய என்ஆர்சியை (தேசிய குடிமக்கள் பதிவேட்டை) அமல்படுத்த வேண்டும் எனும் அவரது தொடர் வற்புறுத்தல்கள் குறித்து ‘இது இந்திய அரசியலமைப்பு மற்றும் அறத்திற்கு எதிரானது’ என்று கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுவது சரியான ஒன்று தான். ஆனாலும் இந்த விமர்சனங்கள் , புதிய வாக்குறுதிகளை அளிப்பதை விட்டும் அவரை தடுக்கவில்லை . வரும் 2024க்குள் இந்தியாவில் ஊடுருவியவர்களை நான் […]
உபி : மதிய உணவில் எலி..மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..தொடரும் அவலம்.!
சாமியார் யோகி ஆதித்யநாத் ஆளும் உபி முஸ்தஃபாபாத்தின் பச்செண்டா பகுதியில் அமைந்துள்ள ஜந்தா இன்டர் கல்லூரி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழக்கமான செவ்வாய்க்கிழமை மெனு படி பருப்பு-அரிசி மதிய உணவாக வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கப்படும் அந்த மதிய உணவில் செத்த எலி இருந்த காணொளி சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இவர்களோடு சேர்ந்து உணவருந்திய ஒரு ஆசிரியர் உட்பட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 6முதல் 8வது படிக்கும் மாணவர்கள். உ.பி […]