ஹிஜாப் அணிந்திருந்த இசுலாமிய மாணவிக்குபல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் அவமதிப்பு!பல்கலைகழக நிர்வாகம் மதப்பாகுபாட்டை கடைபிடிப்பதா?என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் பங்கேற்று பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கிய விழாவில், பட்டமும் தங்கப்பதக்கமும் பெறுவதற்காக அந்த அரங்கில் அமர்ந்திருந்த முஸ்லிம் மாணவி அவமதிக்கப்பட்டிருக்கிறார். முதுகலை மக்கள் தொடர்பியல் துறை மாணவியான ரபியாவை, அவர் இஸ்லாமியர் என்பதற்காகவே திடீரென அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி ஒரு அறையில் […]
Author: NewsCap.in Staff
உபி : மக்களுக்கு உதவ சென்ற வழக்கறிஞரை பொய் வழக்கில் கைது செய்த போலீசார்!
உபி மாநில முதல்வரும் கோவில் தலைமை பூசாரியுமான யோகி தலைமையிலான போலீசார் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூர வன்மங்களை அரங்கேற்றி வருவது குறித்து பல்வேறு இணையவழி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் உ.பி.யில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்ட ரீதியாக உதவி வழங்குவதற்காக உபியில் உள்ள ஷம்லிக்குச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த 24 வயதான முஸ்லீம் வழக்கறிஞரான முகமது பைசலை உத்தரபிரதேச போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஐபிசி 145,149, […]
‘மெக்காவில் ராமர் கோவில்’ – கணவர் பெயரில் பேக் அக்கவுண்ட் செய்த வேலையாம்!
சவுதியில் வேலை பார்த்து கொண்டு “அடுத்த ராமர் கோவில் மெக்காவில்” என பேஸ்புக்கில் பதிவிட்டு சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட மோடி பக்தராக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் கர்நாடகாவின் ஹரிஷ் பங்கேராவின் மனைவி சுமனா, தனது கணவரின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி கணக்கிலிருந்து செய்தி வெளியிடப்பட்டதாக பகீர் தகவல் தெரிவித்துள்ளார். சிக்கலைத் தவிர்ப்பதற்காக தான் மன்னிப்பு வீடியோவை வெளியிடுமாறு ஹரிஷுக்கு தான் அறிவுறுத்தியதாக சுமனா மேலும் கூறினார். எனினும் ஹரிஷ் மனைவி கூறுவது பொய், பதிவு பேக் […]
NRC: மோடி இல்லை என்பாராம், அமித் ஷா உண்டு என்பாராம் ! என்ன தான் நடக்குது ?
‘தேசம் முழுவதும் NRC கொண்டு வரும் திட்டமே அரசிடம் இருந்ததில்லை,’ என்று பிரதமர் பேசி இருக்கிறார். தில்லியில் நேற்று ஆற்றிய உரையில் அவர் அப்படி குறிப்பிட்டு ‘ஆகவே யாரும் பயப்படத் தேவையில்லை,’ என்று சொல்லி இருக்கிறார். இது பச்சைப்பொய் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையிலேயே ‘தேசம் முழுக்க NRC வந்தே தீரும்,’ என்று பேசியிருக்கிறார். அப்போது பிரதமர் அவையில் இல்லையா என்று தெரியவில்லை. இல்லையெனில் அவைக்குறிப்புகளை பார்த்து தெரிந்து கொள்ளட்டும். […]
நாடு தழுவிய என்ஆர்சி என்பது பணமதிப்பிழப்பு நடவடிக்கையை போன்றது!
பணமதிப்பிழப்பு எவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதோ அதேபோன்றுதான் குடியுரிமை திருத்த சட்டமும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது பணமதிப்பிழப்பின் போது கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் பாதிக்கப்படுவார்கள் என்றும் மோடி எதிர்ப்பாளர்கள் மட்டும் தான் கஷ்டப்படுவார்கள் என்றும் சித்தரிக்கப்பட்டது, மேலும் ஏடிஎம் க்யூவில் நின்று தேசப்பற்றை நிரூபிக்க சொல்லி அதனை கொண்டாடினார்கள், இறுதியில் அனைவரும் பாதிக்கப்பட்டோம். அது தவறு என்று உணரும் தருவாயில் அதனால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீள முடியாத நிலையில் இருக்கிறோம்.. குடியுரிமை மசோதாவும் […]
நாடு முழுக்க என்ஆர்சி? எவ்வளவு செலவாகும்? இது சாத்தியமா?
அசாமில் NRC நடத்தப்பட்டது. அசாமில் ஜனத்தொகை 3.30 கோடி. இது இந்தியாவின் ஜனத்தொகையில் 2.4% மட்டுமே. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி.) இறுதிப்பட்டியல் வெளியான போது, இந்தப் பட்டியலில் 3.11 கோடி பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பித்த மக்களின் எண்ணிக்கை 3.30 கோடி. இதனால், மீதமுள்ள சுமார் 19 லட்சம் பேரின் இந்தியக் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த 19 லட்சம் பேரும் இனி நீதிமன்றம் சென்று தக்க ஆவணங்கள் கொடுத்து […]
‘IAS லட்சியத்துடன் இருந்த 20வயதேயான எனது மகனை சுட்டு கொன்றுவிட்டனர்-‘ சுலைமானின் தாய் வேதனை !
உபி மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் வெள்ளியன்று போலீசாரால் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் இருபது வயதே நிறைந்த இருவரை போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 131 பேரை கைது செய்துள்ளது யோகி தலைமையிலான உபி போலீஸ். 21 வயதான அனஸ் மற்றும் 20 வயதேயான முகமது சுலைமான் இருவரையும் தான் வீடுபுகுந்து கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதுபற்றி கூறிய பிஜ்னோர் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் தியாகி கூறியபொழுது 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதில் 70 பேர் […]
3000 பேர் இஸ்லாத்தை தழுவ முடிவு! தீண்டாமை சுவர்|நாகை திருவள்ளுவன் கைது எதிரொலி !
தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியில் 22.12.19அன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கோவை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் தீண்டாமை சுவற்றினால் 17 அப்பாவி தலித்துகள் பலியாகினர். காரணமானவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நீதிக்காக போராடிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மீது தாக்குதல் நடத்தி இன்று வரையிலும் […]
‘யாருக்கு வேண்டும் உங்கள் குடியுரிமை ஆஃப்பர்’ – பாகிஸ்தானி இந்துக்கள் பதிலடி !
எங்களுக்கு இந்திய அரசு அளிக்கும் குடியுரிமை வேண்டாம் என மோடி – அமித் அளித்த அற்புத ஆஃபரை நிராகரித்த பாகிஸ்தான் இந்து கவுன்சில்கள். மோடி இந்திய இந்துக்களுக்கு மட்டுமல்லாது உலகில் வாழும் மற்ற இந்துக்களுக்கும் ஆபத்தானவர் என சாடல். இந்தியாவில் பரம்பரையாக வாழும் இஸ்லாமியர்களை அகதிகளாக்கிவிட்டு எங்களுக்கு குடியுரிமை அளிப்பதாக கூறுவது சனாதன தர்மத்திற்கே எதிரானது . இதனை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். சாதியாலும் மதத்திலும் பாகுபாடு பார்த்து மனிதர்களிடம் வேற்றுமை பாராட்டுவது இந்துத்துவ சனாதன […]
தேசியக்கொடியை ஆரம்பத்தில் இருந்தே மதிக்காத ஒரு இயக்கம் இருக்கிறது. அது எது தெரியுமா? – ஸ்ரீதர் சுப்ரமணியம்.
தேசியக்கொடியை ஆரம்பத்தில் இருந்தே மதிக்காத ஒரு இயக்கம் இருக்கிறது. அது எது தெரியுமா? இந்துத்துவம்தான். ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகா சபா துவக்கத்தில் இருந்தே தேசியக்கொடியை ஏற்றுக் கொண்டதில்லை. இரண்டே முறை 14 ஆகஸ்ட் 1947, 26 ஜனவரி 1950, மட்டுமே கொடி ஏற்றி இருக்கிறார்கள். அதற்கும் காரணம் சர்தார் படேல். மூவர்ணக்கொடியை தவிர்த்து வேறு கொடியை தேசியக்கொடியாக மதிக்கும் இயக்கங்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் இட்ட மிரட்டல் வேலை செய்திருக்கிறது. படேல் […]
பிரித்தாளும் சூழ்ச்சி காலங்காலமாக புளித்துப்போன ஒரு விசயம் – நடிகர் ராஜ் கிரண்
மத அடிப்படையிலான குடியுரிமை குறித்து கவிதை நடையில் நடிகர் ராஜ்கிரண் கருத்து தெரிவித்துள்ளார் .. நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள்… பிரித்தாளும் சூழ்ச்சி என்பது,காலங்காலமாகபுளித்துப்போன விசயம்… இஸ்லாமியர்கள்,அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான் தான்அவர்களது நாடு என்பது போலவும்,பாமர மக்களின் மனங்களில்பிரிவினையை உண்டாக்குவதற்கான,நச்சுக்கருத்துக்களை, காலங்காலமாகவிதைத்து வந்தனர், வருகின்றனர்… இந்த பொய்ப்பிரச்சாரங்கள்ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது…சத்தியத்தை யாராலும் புதைத்து விடமுடியாது… இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும்இந்துக்களின் இரத்த சொந்தங்கள்… இந்து மதத்திலுள்ள தீண்டாமை போன்ற,இன்ன பிற கொடுமைகளால்,அந்த வாழ்க்கை முறையிலிருந்து […]
‘குடியுரிமை திருத்த சட்டம் வேறு என்ஆர்சி வேறு ப்ரோ’ என்பவர்களுக்கு மட்டும் ..
‘CAA வேறு NRC வேறு ப்ரோ. இதை இரண்டையும் இணைப்பது தவறு. அப்படி செய்ய முனையும் சிலர் கற்பனையான கதைகளை சொல்லி உங்களை பயமுறுத்துகிறார்கள்.’
NRC யின் எங்கள் பயணம்.. மத குடியுரிமையை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம்?
இந்த வருடத்தின் தொடக்கத்தில் மிகச்சரியாக ஜீன் 6 , அன்று என் அம்மா என்னை தொலைப்பேசியில் அழைத்து, நீயும் உன் சகோதரனும் நானும், என்ஆர்சி பட்டியலில் இடம்பெற்றுள்ளோம். உடனடியாக நாகோன் நகருக்கு புறப்பட்டுப்போய் நாம் நமது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமாம் என்றார் பதட்டமாக. அம்மா, இது பல வருடங்களாக நடக்கிறது, விடுங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றேன், அதற்கு அவர், இல்லை ஷாவோன் , அடுத்த நடவடிக்கை கைது தானாம், எனவே உடனடியாக புறப்படு என்றார்கள். நானும் டில்லியில் இருந்து […]
குடியுரிமை திருத்த சட்டம் (CAA) மற்றும் என்ஆர்சி எளிய வார்த்தைகளில்..
‘CAB என்பது வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக உள்ளே நுழையும் வந்தேறிகளுக்குத்தானே பொருந்தும், நீ இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் சட்டவிரோத குடியேற்றத்தை நீ ஆதரிக்கிறாய் என்று அர்த்தமா? ஒன்று, இந்த சட்டம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவர்களுக்கு மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது; இரண்டு, இது இஸ்லாமிய நாட்டு ஒடுக்குமுறைகளை மட்டும் பேசுகிறது; இதர நாட்டு ஒடுக்குமுறைகள் பற்றி கவலை கொள்வதில்லை. மூன்று, அரசே மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது இந்தியாவின் செக்யூலர் அரசியல் சாசனத்துக்கு எதிரானது; நான்காவது, இது இந்திய […]
தமுல் (தமிழ்) ஒரு பழைய சொல்..
நம்ம கேப்டன் விஜயகாந்த் அடிக்கடி “தமிழ்” என்பதை “தமுல்” என உச்சரிப்பதை கேலி செய்திருப்போம். அவரது ஆங்கில உச்சரிப்பு போல இதுவும் தவறானது தான் போல என கிண்டல் செய்திருப்போம். ஆனால் உண்மையில் தமிழ் எனும் சொல்லை தமுல் என்றே பழங்காலத்திலும் உச்சரித்துள்ளனர் என்பதை இந்த விபரத்தை படித்த பிறகே புரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் புத்தகம்கார்த்தியா எ தமுல் இ போர்ச்சுகீஸ் என்ற ஒரு பைபிள். போர்த்துகீஸ் எழுத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல். அதன்முதல் தமிழ் […]