“காஷ்மீரில் அடைக்கப்பட்டிருக்கும் ஜனநாயகக் கதவுகளைத் திறந்து விட்டு, அனைத்துத் தரப்பு மக்களும் எவ்விதத் தடையுமின்றி ஜனநாயகக் காற்றை சுவாசிக்க இடமளிப்பதுடன், புதிய புதிய காரணங்களைக் கண்டு பிடித்து காஷ்மீர் அரசியல் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கைவிட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி […]
Author: NewsCap.in Staff
ராஜஸ்தானில் 17 வயது காஷ்மீரி இளைஞர் கொடூர கொலை !
பிப்ரவரி 5 ம் தேதி இரவு, ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் காஷ்மீர் இளைஞர் ஒருவரை சில குண்டர்கள் கொடூரமாக தாக்கியதில் உயிர் இழந்துள்ளார். குடும்ப பின்னணி : கொல்லப்பட்டவர் காஷ்மீர் பள்ளத்தாக்கின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள குனன்-போஷ்புராவை வசிப்பிடமாக கொண்ட குலாம் மோஹி யு தின் கான் என்கின்ற பாசித் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளது. பாசித் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். கடந்த ஆண்டு தான் அவரது தந்தை மரணித்துள்ளார். வீட்டில் மூத்தவரான அவருக்கு , […]
‘ஒரே பாலின திருமணத்திற்கு இந்தியாவில் அனுமதி உண்டா?’ என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
“ஒரே பாலின தம்பதிகள் தங்கள் திருமணத்தை இந்திய சட்டத்தின்படி பதிவு செய்து கொள்ள முடியுமா, அப்படியானால், அதன் விவரங்கள் அளிக்கவும். இல்லையென்றால், அதற்கான காரணங்களை கூறவும் ” என ராஜ்ய சபாவில் திரினாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பாஜக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை’ என்று விளக்கம் அளித்தார். ஓரினச்சேர்க்கையை சட்டவிரோதமாக்கும் சட்ட பிரிவு 377 ஐ ரத்து […]
‘ஜே.என்.யுவின் யோகி’ என அறியப்படும் இந்துத்துவா மாணவர் பாலியல் வழக்கில் கைது !
ஜே.என்.யுவின் சமஸ்கிருத மற்றும் இண்டிக் பாட பிரிவில் பி.எச்.டி பயிலும் மாணவரான ராகவேந்திர மிஸ்ரா பெண் மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் டெல்லி காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர். வழக்கு: இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 354 (ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவது) மற்றும் பிரிவு 323 (தன்னிச்சையாகக் பிறரைகாயப்படுத்தல்) ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு […]
உபி : இந்துத்துவா தலைவர் கொலை, முதலில் முஸ்லிம்கள் மீது பழி; பிறகு கள்ளக்காதல் கொலை விவகாரம் என அம்பலம் !
அகில் பாரதிய இந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் தனது இரண்டாவது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். கள்ளக்காதல் அம்பலம்: இந்த வழக்கு தொடர்பாக ரஞ்சித் பச்சனின் இரண்டாவது மனைவி ஸ்மிருதி ஸ்ரீவஸ்தவா, அவரது கள்ளக்காதலன் தீபேந்திரா மற்றும் டிரைவர் சஞ்சித் கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்னோ போலீஸ் கமிஷனர் சுஜித் பாண்டே வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மூவரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர், எனினும் துப்பாக்கிச் சூடு நடத்திய […]
‘எப்போ பார் பாகிஸ்தான், நேரு … முக்கிய பிரச்சனை பத்தி பேசுங்க மோடி ஜி’ – ராகுல் கடும் தாக்கு!
வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் பாகிஸ்தான் மற்றும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றி தான் பிரதமர் மோடி பேசியுள்ளார். இது நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பும் ஒரு நடவடிக்கை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். “பிரதமர் மோடியின் பாணி நாட்டை முக்கிய பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதாகும். அவர் காங்கிரஸ், ஜவஹர்லால் நேரு, பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார், ஆனால் முக்கிய பிரச்சினைகள் பற்றி வாய்திறப்பதில்லை” “இன்றைய மிகப்பெரிய பிரச்சினை வேலையின்மை, […]
அஸ்ஸாம் : முஸ்லிமல்லாதோரை மட்டும் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவு !
பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து இந்தியா வந்துள்ள முஸ்லிமல்லாத அனைவரையும் தடுப்பு மையங்களிலிருந்து விடுவிக்குமாரு அஸ்ஸாம் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தார். ‘காலாவதியான அல்லது சரியான ஆவணங்கள் இல்லாமல், டிசம்பர் 31, 2014 க்கு முன்னர் அஸ்ஸாம் மாநிலத்தில் தங்குமிடம் ஏற்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டவர்களையே’ இது குறிக்கும் என்றார் அமைச்சர். இதன் நடைமுறை பொருள்: முஸ்லிமாக உள்ளவர் தடுப்பு மையங்களிலேயே இருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் அல்லாதோர் […]
‘மனிதர்களை போலவே புலிகளும் மாடுகளை சாப்பிட்டால் தண்டிக்கப்பட வேண்டும்’ – கோவா எம்எல்ஏ கருத்து ..
மனிதர்கள் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் தண்டிக்கப்படும் போது புலிகளும் மாடுகளை சாப்பிட்டால் தண்டிக்கப்பட வேண்டும் என கோவாவில் புலிகள் கொல்லப்படுவது குறித்த சட்டசபை விவாதத்தின் போது என்.சி.பி எம்.எல்.ஏ சர்ச்சில் அலெமாவோ தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மகாதாய் வனவிலங்கு சரணாலயத்தில் ஐந்து உள்ளூர் வாசிகளால் ஒரு தாய் புலியும் அதன் மூன்று குட்டிகளும் கொல்லப்பட்டன. புதன்கிழமை நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது கவனத்தை ஈர்க்கும் தீர்மானத்தின் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் இந்த […]
மோடி, ராம்நாத் கோவிந்த் மற்றும் வெங்கையா நாயுடு பயணிக்க ரூ.8,458 கோடியில் பிரத்யேக விமானங்கள்..
இந்த விமானங்கள் தயாரிப்பு குறித்த ஒப்பந்தம் கடந்த 2006ஆம் ஆண்டில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட விமான தயாரிப்பாளர் நிறுவனமான போயிங்குடன் ஏர் இந்தியா நிறுவனம் செய்து கொண்டதாகும்; இந்த விமானங்கள் வி.வி.ஐ.பி-களின் பயணத்திற்காக பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும். பட்ஜெட்டில் ஒதுக்கீடு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமீபத்திய பட்ஜெட் உரையில், சிறப்பு கூடுதல் பிரிவு விமான நடவடிக்கைகளுக்காக (எஸ்.இ.எஸ்.எஃப்) இரண்டு புதிய விமானங்களை வாங்க மொத்தம் ரூ .810.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளின் (2018/19 […]
’15 லட்சம் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டனர்’ மோடி, அமித் ஷா மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு !
வழக்கறிஞர் எச்.கே.சிங், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது வழக்கு பதிவு செய்துள்ளார். ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு நபரின் வங்கிக் கணக்கிலும் ரூ .15 லட்சம் போடுவதாக உறுதியளித்து மக்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார். புகார் தொடுக்கப்பட்டவர்கள்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மோசடி மற்றும் நேர்மைத்தவறி நடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வழக்கில் ராஞ்சியில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் மூன்றாவது […]
உபி: அதிகாலை 4 மணிக்கு பெண் போராட்டக்காரர்கள் மீது தடியடி,கண்ணீர் புகை குண்டு ..
அசாம்கர் போராட்டக்காரரர்கள் மீது உ.பி. போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். எஃப்.ஐ.ஆரின் படி, போராட்டக்காரரர்கள் மீது கலகம் விளைவித்தல், தேசத்துரோகம் உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகள் பதியபட்டுள்ளன. உத்தரபிரதேசத்தின் அசாம்கர் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்புத் தெரிவிக்க கூடியிருந்த சுமார் 200 பெண்கள், பிப்ரவரி 5, புதன்கிழமை அதிகாலையில் காவல்துறையினரால் லத்திசார்ஜ் செய்யப்பட்டனர். வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் ! பிப்ரவரி 4ம் தேதியின் காலை முதல் அசாம்கரின் பிலாரியாகஞ்ச் பகுதியில் உள்ள மவ்லானா ஜோஹர் அலி […]
மத்திய பிரதேசத்தில் சிஏஏ வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் !
மத்திய பிரதேச அமைச்சரவை இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. சிஏஏ ரத்து செய்ய வேண்டும் எனவும் அமைச்சரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டம் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பி.சி. ஷர்மா செய்தியாளர்களிடம் கூறினார். “மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அடித்தளமாகும், […]
‘விட்டா தாஜ்மகாலை கூட வித்துடுவார் மோடி’ – ராகுல் காந்தி கடும் தாக்கு…
டெல்லி சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று தெற்கு டெல்லியில் ஜங்புராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது பேசிய அவர் “சீனாவைத் தவிர உலகில் மற்ற அனைத்து நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறது. ஆனால் தற்போதுள்ள (புதிய) இந்தியாவை அவர்கள் காணும்போது வெறுப்பு, வன்முறை, கற்பழிப்பு, ரவுடித்தனம், கொலைகள் ஆகியவற்றையே காண்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் எங்கு பார்த்தாலும், ஒரு இந்தியர் மற்றொரு இந்தியருடன் வெறுப்புணர்வுடனேயே பேசும் […]
குஜராத் கலவரம்: மோடி குற்றமற்றவர் என்ற எஸ்ஐடியின் அறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தேதி அறிவிப்பு..
குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த சமயத்தில் 2002 ஆம் நடைபெற்ற கலவரத்தில் மோடி குற்றமற்றவர் என்று எஸ்ஐடி யின் “கிளீன் சிட்” ஐ எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு “பல முறைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்துள்ளதாகவும், என்றாவது ஒரு நாள் வழக்கை விசாரிக்க தானே வேண்டும்” என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. நடந்த சம்பவம்: குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. எந்த வித […]
‘கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி ‘ என்ற பாஜகவின் பிரச்சாரத்திற்கு கெஜ்ரிவாலின் மனைவி மற்றும் மகள் பதிலடி ..
சனிக்கிழமை நடக்கவுள்ள டெல்லி சட்டசபை தேர்தலின் ஒரு யுக்தியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கூறி பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் முகமாக அவரது மனைவி மற்றும் மகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் . “இது ஒரு புதுவித தரங்கெட்ட அரசியல்” என பதிலடி அளித்துள்ளனர். தரம் தாழ்ந்த கருத்து : ஜனவரி 25 ம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சருக்கு இந்த வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் […]