ஹைதராபாத்: கோஷாமஹால் பாஜக எம்எல்ஏ ராஜா சிங், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை நள்ளிரவிலும், பின்னர் செவ்வாய்கிழமை காலையிலும் நகர காவல் ஆணையர் சிவி ஆனந்த் அலுவலகம் முன்பும் நகரின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. நகைச்சுவை என விளக்கம் : பிரச்னை பெரிதானதும் பாஜக எம்எல்ஏ ராஜா சிங், தனது பேச்சை “நகைச்சுவை” என்று என விளக்கம் அளித்துள்ளார். நகைச்சுவையாளர் முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் […]
Author: NewsCap.in Staff
நெல் வயலில் விளையாடியதற்காக ஆதிவாசி சிறுவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!
கேரளாவின் மலை மாவட்டமான வயநாட்டில் உள்ள நெய்குப்பா பழங்குடியினர் காலனியைச் சேர்ந்த மூன்று ஆதிவாசி மைனர் குழந்தைகள், நெல் வயலில் நுழைந்ததற்காக அண்டை வீட்டுகாரரால் தாக்கப்பட்டனர். ஆறு மற்றும் ஏழு வயதுடைய சிறுவர்கள் தனது வயலை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டி பக்கத்து வீட்டுக்காரர் கொடூரமாக அடித்துக் காயப்படுத்தி உள்ளார். இச்சம்பவம் ஆகஸ்ட் 15ம் தேதி நடந்தது. சம்பவத்தை நேரே கண்ட உறவினர், நெற்செய்கைக்கு தயார்படுத்தப்பட்டிருந்த வயலில் பிள்ளைகள் இறங்கிய காரணத்தால் இடத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் பிள்ளைகளை அடித்து உதைத்ததாக […]
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..
பேருந்துகளில் பெண் பயணிகளை முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கி விடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயணித்து வருகின்றனர். இந்த பயணத்தின்போது, சக ஆண் பயணிகளால் பெண்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகள் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக திருத்தம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுப் பேருந்துகளில் […]
10 க்குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு: ரஷ்ய அதிபர் புடின் அதிரடி அறிவிப்பு!
ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையாக பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவின் மக்கள்தொகை சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையாக அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுவது இது முதல்முறை அல்ல. ரஷ்யாவில் இதற்கு முன்னர் 1940களிலும் மக்கள்தொகை பெருக்கத்தை உண்டு பண்ண இந்தத் திட்டம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்தார் இபிஎஸ்..
ஒன்றிணைந்து செயல்பட ஓபிஎஸ் விடுத்த அழைப்பை நிராகரித்தார் எடப்பாடி பழனிசாமி. உழைப்பே இல்லாமல் தனக்கும், தன் மகனுக்கும் பதவி மட்டுமே வேண்டும் என்றால் எப்படி? கொஞ்சமாவது கட்சிக்காக உழைக்க வேண்டாமா? அநாகரிகமாய் நடந்த ஓபிஎஸ் உடன் எப்படி ஒத்துப்போக முடியும்? எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி அழைப்பு விடுப்பவர்தான் பன்னீர்செல்வம் என ஓ.பி.எஸ்-க்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்: ஓபிஎஸ் பேட்டி
அதிமுகவுக்குள் எழுந்த பிளவு தான் திமுக ஆட்சிக்கு வர காரணம், இன்றைக்கு அதே சூழல் தான் ஏற்பட்டுள்ளது; இன்றைக்கு அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது, அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எண்ணம். “மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பொறுப்பை ஏற்க வேண்டும், அதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. இதற்கு முன் ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் மறந்து விடலாம், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்; ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை எதிர்கொண்டால் அதிமுகவை […]
ரோஹிங்கியா விவகாரம்: விஎச்பி, இந்துத்துவாவினர் கண்டனம்; சொந்த அமைச்சரின் அறிவிப்பையே மறுத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் !
ரோஹிங்கியா விவகாரம்: விஎச்பி, இந்துத்துவாவினரின் கண்டனம்; சொந்த அமைச்சரின் அறிவிப்பையே மறுத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் ! ரோஹிங்கியா மக்கள்: உலகின் மிக மோசமான இனபடுகொலைக்கு ஆளாகி, வாழ்வதற்கு இடமின்றி தவிக்கும் ரோஹிங்க்யா மக்களில் சிலர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். பல முறைகள் அவர்கள் தங்கி இருக்கும் பகுதிகளில் மர்மமான முறையில் தீ விபத்து ஏற்பட்டு வந்தது. வலது சாரிகள் ரோஹிங்க்யா மக்களை தீவிரவாதிகள் என்றும், குற்றம் புரிபவர்கள் என்றும் வசைபாடி வந்தனர். இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் […]
டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தகவல் !
டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு குடியிருப்புகள் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு: புதுதில்லியில் மிக மோசமான நிலையில் வசித்து வரும் ரோஹிங்கியா அகதிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகஸ்ட் 17 அன்று தெரிவித்தார். புதுதில்லியில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகளுக்கான […]
ம.பி: கோவிலுக்குள் ரகளையில் ஈடுபட்டு, தடுப்புகளை வீசியெறிந்த பாஜகவினர் !
உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவிலில், ஆகஸ்டு 10 அன்று, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்களுக்கும் , கோவில் நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. உஜ்ஜயினியின் மகாகாலேஷ்வர் கோவிலில், பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (பிஜேஒய்எம்) தொண்டர்களுக்கும், கோயில் நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையே புதன்கிழமை கைகலப்பு ஏற்பட்டது, அதன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இன்று காலை தனது ஆதரவாளர்கள் சிலருடன் வெறுப்பு பேச்சாளராக விமர்சிக்கப்படும் BJYM இன் தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யா […]
உ.பி : பல சமய பிரார்த்தனையில் முஸ்லிம் பிரார்த்தனையும் இணைக்கப்பட்டதை அறிந்து பள்ளிக்கு சீல் வைப்பு !
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அனைத்து மத வழிபாட்டின் ஒரு பகுதியாக இஸ்லாமிய பிரார்த்தனைகளையும் இணைத்துள்ளது தொடர்பாக விஎச்பி உள்ளிட்ட இந்துத்துவா குழுக்களின் புகார் மற்றும் எதிர்ப்பைத் தொடர்ந்து, பள்ளியின் இயக்குநர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295A (மத உணர்வுகளை புண்படுத்தல்) மற்றும் மதமாற்ற தடைச் சட்டம் 2021 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கான்பூரில் உள்ள புளோரெட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, இந்துத்துவாவினரின் விஷம பிரச்சாரம் காரணமாக இரண்டு […]
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தில் இருந்து பாகிஸ்தானிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நீக்கம்!
உபி: புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களான மௌலானா அபுல் அலா மௌதூதி மற்றும் சையத் குதுப் ஆகியோரின் புத்தகங்களை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக (AMU) நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. முஸ்லிம் கல்வி நிலையங்களில் மூக்கை நுழைக்கும் இந்துத்துவாவினர்: இந்துத்துவா ஆர்வலர் மது கிஷ்வர் மற்றும் பிற இந்து மேலாதிக்க தேசியவாத கல்வியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. இந்த புத்தகங்கள் ஏ.எம்.யுவின் […]
மபி: மாட்டை கடத்தி செல்வதாக கூறி அடித்து கொல்லப்பட்ட அஹ்மத்; மேலும் இருவர் படுகாயம்!
ஆகஸ்ட் 2, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் நர்மதாபுரம் மாவட்டத்தின் பிரகாத் கிராமத்திற்கு அருகே பசுக்களைக் கடத்தியதாக கூறி 50 வயது முஸ்லீம் நபர் ஒருவரை பசு பாதுகாவலர்கள் கொடூரமாக அடித்துக் கொன்றனர். செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 12.30 மணியளவில் சியோனி மால்வா நகருக்கு அருகிலுள்ள பாரகாத் கிராமத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற டிரக்கை 10-12 பேர் கொண்ட பசு காவலர்கள் இடைமறித்து 28 மாடுகளை ஏற்றிச் சென்ற மகாராஷ்டிராவின் அமராவதியைச் சேர்ந்த நசீர் […]
உபி : “பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவேன் ” என முஸ்லிம் வியாபாரியை மிரட்டிய எஸ்.ஐ !
கான்பூர்,உத்தரப்பிரதேசம், ஆகஸ்ட் 4 (ஐஏஎன்எஸ்): ‘பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவேன்’ என்று ஒரு முஸ்லிம் விடுவேன் வியாபாரியை போலீஸ் அதிகாரி மிரட்டும் ஆடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உ.பி. போலீஸ்காரர் ஒருவருக்கும் முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கும் இடையிலான உரையாடல் ஆடியோ கிளிப்பில் சப்-இன்ஸ்பெக்டர் அந்த நபரிடம் தனது பெயரைக் கேட்டு முஸ்லிம் என்பதை அறிந்து கொண்ட உடன் “உன்னை பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவேன்” என கூறுவதைக் கேட்க முடிகிறது. பணத்தை உரிய தவணையில் செலுத்த […]
குஜராத்: தலித் பெண் சமைத்ததால் சாப்பிட மறுக்கும் மாணவர்கள்!
அகமதாபாத்: ஜூன் 16 முதல், கோலி, பர்வாத், தாக்கூர் மற்றும் காத்வி போன்ற ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 147 மாணவர்கள் மோர்பியில் உள்ள ஒரு பள்ளியில் அரசாங்கத்தின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவை உட்கொள்ளவில்லை. மாணவர்கள் சாப்பிடாததற்கு காரணம்: இதற்குக் காரணம் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணி ஒரு தலித் சமூக பெண்ணுக்கு வழங்கப்பட்டதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அப்பெண்மணி சமைத்த உணவை சாப்பிடுவதை விரும்பவில்லை என்பதே. பள்ளி அதிகாரிகள் மற்றும் மாவட்ட […]
அசாம் : புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட மதரசா !
அசாம்: பாஜக ஆளும் அசாமில் மொய்ராபரி பகுதியில் அண்மையில் கைது செய்யப்பட்ட முப்தி முஸ்தபா நடத்தி வந்த ஜாமியுல் ஹுதா மதரஸா அதிகாரிகளால் வியாழக்கிழமை இடிக்கப்பட்டது. இந்த மதரஸா 2018 முதல் செயல்பட்டு வந்தது. பங்களாதேஷை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான அன்சார் அல்-இஸ்லாமுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, மொய்ராபரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மொரிகாவ்ன் மாவட்டத்தின் சஹாரியா கிராமத்தில் இருந்து முப்தி முஸ்தபா காவல்துறையினரால் ஜூலை 28 அன்று கைது செய்யப்பட்டார். மோரிகான் மாவட்ட காவல்துறை […]