”கரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடங்காய்ச்சிகள். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசு மற்றும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள் நிறைவேற்றி வருகின்றன. தற்போது கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற காரணம் சொல்லி நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்யும் அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இச்சேவையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டள்ளது. மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது […]
Author: NewsCap.in Staff
டெல்லி: ஜாமியா மாணவி சஃபூரா கைது; ஊரடங்கின் போது அடுத்தடுத்து கைது செய்யப்படும் முஸ்லிம்கள்!
டெல்லியில் CAA,NRC,NPR சட்டங்களை திரும்ப பெற கோரி போராட்டத்தை இந்திய முழுவதும் கொண்டு செல்ல காரணமானவர்கள் டெல்லி ஜாமியா மாணவர்கள் அதில் குறிப்பாக யார் எல்லாம் முன் எடுத்தார்களோ அவர்களை இப்போது டெல்லி காவல்துறை திட்டமிட்டு கைது செய்து வருகிறது நான்கு நாட்களுக்கு முன்பாக சகோதரர் மீரான் ஹைதர் கைது செய்ய பட்ட நிலையில்.. நேற்று சனிக்கிழமை மாலை போராட்டத்தை பெண்கள் மத்தியில் மிக வேகமாக முன் எடுத்து சென்ற ஜாமியா பல்கலைக்கழக மாணவி சகோதரி சஃபூரா […]
உ.பி: உண்ண உணவின்றி 5 குழந்தைகளையும் கங்கையில் வீசி எறிந்த தாய்; ஊரடங்கில் தவிக்கும் ஏழை மக்கள் !
இன்று உத்தரபிரதேசத்தின் படோஹி மாவட்டம், ஜெகாங்கிராபாத்தில் உள்ள கங்கை நதியில் தனது ஐந்து குழந்தைகளை (ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, சிவசங்கர் மற்றும் கேசவ் பிரசாத்) வீசி எறிந்துள்ளார் ஒரு தாய். காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தவுடன், மூத்த காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தை அடைந்தனர், குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக நதியில் நீச்சல் அடிக்கவல்ல சில டைவர்ஸ் ஈடுபடுத்தப்பட்டனர். குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் மனநலம் குன்றியதாகத் தெரிகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும் (மோடி அரசு முறையான […]
முஸ்லிம் பழவியாபாரி கொரோனா பரப்ப எச்சில் தடுவுகிறாரா? உண்மை என்ன?
இந்த காணொளி பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மட்டுமின்றி டிக் டாக், வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளின் வழியாகவும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த காணொளியில் வயதான முஸ்லிம் முதியவர் ஒருவர் எச்சில் துப்பி அதை பழங்களின் மீது தேய்ப்பது போன்ற செய்கையை செய்வதை காணமுடிகிறது. முப்பது வினாடிகள் ஓடும் அந்த காணொளியில் தனது பழ வண்டியின் ஒரு பகுதியில் உள்ள சில பழங்களை மற்ற பகுதிக்கு மாற்றுகிறார் முதியவர். இடையிடையே கை விரல்களில் எச்சிலை […]
வாகன ஓட்டிகளை சோதனையிட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை- தெலுங்கானா கமிஷ்னர் அறிவிப்பு ..
சோதனைசாவடிகளில் சோதனை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு எந்த வித அனுமதியும் வழங்கப்பட வில்லை என தெலுங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தின் புறநகர் நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.எஸ் சீருடையில் சிலர் லத்திகளை கொண்டு நிற்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. “ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் தெலுங்கானாவின் யாதத்ரி புவனகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் தினமும் 12 மணி நேரம் காவல் துறைக்கு உதவுகிறார்கள்.” என்று செய்தியுடன் @friendsofrss என்ற கணக்கில் இருந்து இந்த புகைப்படங்கள் முதலில் ட்வீட் செய்யப்பட்டது. இந்த […]
PM-CARES நிதிக்கு கட்டாய தொகை வழங்க எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு; நிதியை கொண்டு பாதுகாப்பு உபகரணங்களை வாங்க கோரிக்கை ..
பி.எம்-கேர்ஸ் நிதிக்கு தங்கள் ஒருநாள் சம்பளத்தை கட்டாய நன்கொடையாக வசூலிப்பது குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய மருத்துவமனை நிர்வாகத்திடம் 2,500 மருத்துவர்களை உள்ளடக்கிய அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) மருத்துவர்கள் சங்கம் (ஆர்.டி.ஏ-குடியிருப்பாளர் மருத்துவர் சங்கம்) கோரிக்கை விடுத்துள்ளது. ஒன்று நன்கொடையை விருப்பம் உள்ளவர்கள் வழங்கலாம் என அறிவியுங்கள் அல்லது இந்த திட்டத்தை முழுவதும் கைவிடுங்கள். அதற்கு மாற்றமாக இந்த வசூலை மருத்துவர்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களான கியர்ஸ் மற்றும் பிபிஇக்களை வாங்குவதற்கு […]
கொரோனா வைரஸ் பரப்ப வந்தவர் என்ற வதந்தியால் முஸ்லிம் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் ..
கொரோனா வைரஸ் பரப்ப திட்டமிட்டதாக பொய்யாக கூறி, டெல்லியின் பவானா பகுதியில் 22 வயதான முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது பாசிச பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தனது ஊருக்கு திரும்பி கொண்டிருந்த மெஹபூப் அலியை வழிமறித்து பாசிச வெறியர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். ‘நான் எந்த வைரஸும் பறப்பவரவில்லை என கால்களில் ரத்தம் சொட்டச்சொட்ட அவர் கூறியும்’ கொடூரமாக பாசிஸ்டுகள் அவரை தாக்கும் காணொளி வைரல் ஆனது. ஆரம்பத்தில் தாக்குதலுக்கு ஆளான மெஹபூப் அலி என்று […]
ஊரடங்கு நிலையிலும் நூற்றுக்கணக்கானோருடன் பிறந்த நாள் கொண்டாடிய பாஜக எம்.எல்.ஏ
கொரோனாவை கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அதை சற்றும் பொருட்படுத்தாமல் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ ஒருவர் தனது பிறந்த நாளை நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் கொண்டாடினார். கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் துருவேக்கரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ எம்.ஜெயராம், ஒரு பெரிய கேக்கை வெட்டி குப்பி தாலுகாவில் உள்ள குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான கிராம மக்களுக்கு விநியோகித்தார். கொண்டாட்டத்திற்காக அமைக்கப்பட்ட இறுக்கமாக கட்டப்பட்ட பந்தலில் விருந்தினர்களுக்கு பிரியாணியும் வழங்கப்பட்டது. கடந்த […]
13 டன் அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன் தொகுதி மக்களுக்கு அனுப்பினார் ராகுல் காந்தி !
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சமூக சமையலறைகளில் (Community Kitchens) விநியோகிக்க 13 டன் அரிசி வழங்கியுள்ளார், எம்.பி யும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும்இந்த அரிசி சமமாக விநியோகிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அடீலா அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வயநாடில் மொத்தம் 51 பஞ்சாயத்துகள் மற்றும் ஐந்து நகராட்சிகள் உள்ளது. வயநாடு தொகுதியில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து சமுதாய சமையலறைக்கும் 500 கிலோ அரிசி + 50 […]
பாசிஸ்டுகளின் பொய் செய்திகளால் பழம், காய்கறிகளை விற்க தடை செய்யப்படும் முஸ்லிம் வியாபாரிகள்!
தப்லிகி ஜமாஅத்தினர் தான் கொரோனா வைரஸ் பரப்புகின்றனர் என்ற கருத்து கொண்ட போலி செய்திகள், வதந்திகளை தொடர்ந்து பாசிஸ்டுகள் பகிர்ந்து வருகின்றனர். இதனால் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளது. முஸ்லிம் பழ மற்றும் காய்கறி வியாபாரிகள் எச்சில் தடவி பொருட்களை விற்பதை போன்ற போலி வீடியோக்களை பாசிச பயங்கரவாதிகள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில், தெருக்களில் விற்கும் வியபாரிகளிடம் ஆதார் அட்டை கேட்கப்பட்டு அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் விரட்டி அடிக்கப்படுகின்ற கொடூரம் அரங்கேறி வருகிறது. டில்லி […]
சுகாதாரப் பணியாளர்கள் மீது தப்லீக் ஜமாத்தினர் எச்சில் துப்பியதாக பொய்யை பரப்பிய பாஜக எம்.பி ..
புதுடில்லி நிஜாமுதீன் மர்கஸில் தப்லிகி ஜமாஅத்தில் கலந்து கொண்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட பெலகாவியைச் சேர்ந்த சிலர் மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர்களிடம் தவறாக நடந்துகொண்டு, அவர்கள் மீது எச்சில் துப்புகிறார்கள் என்று பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாஜே திங்களன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள தப்லீக் ஜமாத்தினர் சுகாதார ஊழியர்களுடன் தவறாக நடந்து கொள்ளவோ அல்லது அவர்கள் மீது எச்சில் துப்பவோ இல்லை என பெலகாவி துணை ஆணையர் எஸ்.பி.போமனஹள்ளி, பாஜக எம்.பி யின் பொய்யான வெறுப்பு […]
கொரோனா மருந்து வழங்க இந்தியாவை மிரட்டிய ட்ரம்ப், பணிந்த மோடி ..
அமெரிக்கா முழுவதும் கொரோனா காட்டு தீ போன்று பரவி வருகிறது. இதுவரை3,67,758 பேர் கொரோனவால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர்,10,981 உயிர் இழந்துள்ளனர். இதனால் ஆரம்பத்தில் இருந்தே நோயை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ட்ரம்ப் தலைமையிலான அரசு கடும் விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது. மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (எச்.சி.க்யூ) ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புக் கொள்ளாவிட்டால் “தக்க பதிலடியை சந்திக்க நேரிடலாம்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் தொனியில் கூறி […]
மக்கள் மெழுகுவர்த்தியை ஏற்றினால் கொரோனா வைரஸ் இறந்துவிடும் – பாஜக எம்.எல்.ஏ கண்டுபிடிப்பு..
ஞாயிற்றுக்கிழமை இரவு மக்கள் மெழுகுவர்த்திகளை எரிய செய்யும் போது கொரோனா வைரஸ் இறந்துவிடும் என்று மைசூருவின் பாஜக எம்.எல்.ஏ எஸ்.ஏ.ராம்தாஸ் கருத்து தெரிவித்துள்ளார். பூச்சிகள் ஒளியை நோக்கி பறந்து வெப்பத்தில் இறந்துவிடுவதை போலவே வீட்டிலுள்ள வைரஸ்கள் மெழுகுவர்த்தியை நோக்கி இழுக்கப்பட்டு வெப்பத்தில் இறந்துவிடும் ” என்று திரு. ராம்தாஸ் கூறியுள்ளார். மேலும் தனது கருத்து விஞ்ஞானபூர்வமானது எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் விஞ்ஞான உலகமே அதிர்ச்சியில் உள்ளது. முன்னதாக ஏப்ரல் 22 அன்று பிரதமரின் கைதட்டலுக்கான அழைப்புக்கும் […]
ராஜஸ்தான்: முஸ்லிம் என்பதால் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவர், உயிரிழந்த குழந்தை..
ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு அவர் முஸ்லீம் என்ற காரணத்திற்காக அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், மருத்துவமனையை விட்டு வெளியேறிய அந்தப் பெண் குழந்தையை ஆம்புலன்சிற்குள் பிரசவித்தார், எனினும் குழந்தை பிறந்த உயிர் இழந்தது. மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு இருந்தால் குழந்தையின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள். அந்தப் பெண்ணின் கணவர் இர்பான் கான் கூறுகையில் “எனது மனைவி குழந்தையை பிரசவிக்க வேண்டிய நேரம் வந்தது . நாங்கள் சிக்ரியிலிருந்து […]
அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்! – சீமான்
உலக அளவில் வேகமாகப் பரவிவரும் கொரோனோ நுண்ணுயிரிப்பரவல் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் முதல் இரு நிலைகளைத் தாண்டி மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை எது நடந்துவிடக்கூடாது என்ற அச்சப்பட்டமோ அந்த ‘சமூகப் பரவல்’ தொடங்கி இப்போது இந்திய துணைக்கண்டம் முழுவதும் கொரோனோ நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் மத்திய, மாநில அரசாங்கத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிக்கையிலுள்ள புள்ளிவிபரங்களே சமூகப்பரவல் நாடு முழுமையும் தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில் நேற்றிரவு நாட்டுமக்களிடம் […]