Lynchings States News Uttar Pradesh

பஜ்ரங் தள் பாஜகவினர் அட்டூழியம் ! ஜெய் ஸ்ரீராம் கூற மறுத்ததால் மாணவர்கள் மீது உபி. யில் கொலைவெறி தாக்குதல்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதரஸா மாணவர்கள் சிலரை பஜ்ரங் தள் மற்றும் பாஜகவினர் ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷமிட கட்டாயப்படுத்தி ஜூலை 11ம் தேதி அடித்து உதைத்ததாக ஜமா மசூதி இமாம் குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் !

தொழுகைகளை முடித்து விட்டு மைதானத்தில் 4 மாணவர்கள் விளையாடச் சென்றுள்ளனர். மாணவர்களை ஜெசி ஸ்ரீ ராம் என்று கூறுமாறு கட்டாயபடுத்தி உள்ளனர். ஆனால் மாணவர்கள் கூற மறுத்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த குண்டர்கள் மாணவர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். அவர்களுடைய பேட் ஐயும் பிடுங்கி கொண்டனர். “நாங்கள் அங்கிருந்து ஓட முயன்றபோது அவர்கள் எங்கள் மீது கற்களை வீசினர்,” என்று தாக்கபட்ட மாணவர் ஒருவர் கூறினார்.கடுமையாக தாக்கப்பட்ட 4 மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாணவர்கள் மதரஸாவுக்கு வந்து நடந்ததை விவரித்துள்ளனர்.

Image credit: National Herald

பாஜக பஜ்ரங் தள் அமைப்பினருக்கு தொடர்பு அம்பலம்.

போலீஸார் பிறகு வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை அவர்களது முகநூல் முகவரியைக் கொண்டு கண்டுபிடித்தனர். அவர்களை குறித்து சமூக வலைத்தளங்களில் ஆய்வு செய்ததில் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது உறுதி ஆனது .

மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் இதுவரை ஆதித்யா சுக்லா மற்றும் கிரந்தி குமார் என அடையாளம் காணப்பட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதில் கிராந்தி குமார் என்பவர் பாஜக இளைஞர் பிரிவின் மாவட்ட செயலாளராக இருப்பவர்.மற்ற குற்றவாளிகளை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

அநியாய போராட்டம் !

கைது செய்யப்பட்ட குண்டர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி கோட்வாலி காவல் நிலையத்தில் நூற்றுக்கணக்கான இந்துத்துவாவினர் முற்றுகையிட்டதால் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் வன்முறை சம்பவங்கள் :

உ.பி.யில் இத்தகைய வன்முறை ஒன்றும் புதிதல்ல, யோகி ஆதித்யநாத் அரசு இதனைக் பெரிதாக கண்டு கொள்வதாக தெரியவில்லை.

கடந்த ஜூலை 4ம் தேதி ஆட்டொ ஓட்டுநர் முஹம்மத் ஆதிப் என்பவரை பாத்ரூமில் வைத்து கல்லால் அடித்துள்ளனர், காரணம் அவர் ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுத்தார் என்பதே. இந்தச் சம்பவத்துக்கு முன்னதாகவும் மதரசாவிலிருந்து திரும்பி கொண்டிருந்த முஸ்லிம் தாஜ் முகமதுவுக்கும் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.