கடந்த வாரம் கேரளாவின் கதிரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னியம் நயனார் சாலையில் அமைந்துள்ள காவல் சோதனை சாவடி மீது வெடிகுண்டு வீசிய குற்றத்தின் பேரில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கை சேர்ந்த கே.பிரபேஷை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கேரளாவில் உள்ள மலால் பகுதியை சேர்ந்த அவர் சம்பவத்தன்று வெடிகுண்டை வீசிவிட்டு கோவையில் உள்ள அவரது உறவினரின் வீட்டில் பதுங்கி உள்ளார்.
வெடிகுண்டு வீசிய தீவிரவாதியை தேடி வந்த திரு.நிஜீஷ் தலைமையிலான போலீசார் தீவிரவாதி பிரபேஷை அவரது உறவினரின் வீட்டில் கையும் களவுமாக பிடித்தனர்.
குறித்தப்பி குண்டு வீசிய தீவிரவாதி பிரபேஷ் :
கடந்த ஜனவரி 16 ஆம் தேதியன்று அதிகாலையில் பிரபேஷ் வெடிகுண்டு வீசியதாக பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற அன்று 2 போலீசார் சோதனை சாவடியில் இருந்துள்ளனர். ஆனால் தீவிரவாதி பிரபேஷ் வீசிய சக்தி வாய்ந்த குண்டு குறித்தப்பி வேறிடத்தில் விழுந்து விட்டதால் அந்த 2 காவலர்களும் மயிரிழையில் உயிர்தப்பினர்.
பொது மக்கள் பாராட்டு:
தீவிரவாதி பிரபேஷ் கைது செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். மேலும் இவருக்கு மற்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்ற ரீதியில் விரசரனை மேற்கொள்ள வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.