Islamophobia Lynchings States News West Bengal

மீண்டும் பயங்கரம்! 24 வயது இஸ்லாமிய இளைஞர் பைக் திருடி விட்டதாக கூறி மேற்கு வங்கத்தில் அடித்துக் கொலை!

தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓயாத நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா எனும் மாவட்டத்தில் மேலும் ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் அரங்கேறியுள்ளது.

சனாவுல்லா ஷெய்க் இன்று 24 வயதான முஸ்லிம் இளைஞரை பைக் திருடி விட்டார் என்று குற்றம் சுமத்தி கடந்த வெள்ளி கிழமை அடித்தே கொன்று உள்ளனர். ஆனால் அவர் பைக் திருடியதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக கொலைகார கூட்டத்தினர் “சனாவுல்லாவை பைக் மீதி ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்வது போல உட்கார செய்துவிட்டால் திருடன் என்று பட்டம் கட்டி விடலாம் என்பதற்காக ஷைக் கிடம் பைக்கில் உட்கார சொல்லி உள்ளனர்.” என்று அதிகாரி ஒருவர் தி ஹிந்து நாளிதழிடம் தெரிவித்து உள்ளார்.

சனாவுல்லா கொடூரமாக தாக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் அவர் தன்னை விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டிருக்கும் 2 நிமிட வீடியோ

சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதில் சனாவுல்லாவை மர்ம ஸ்தானத்தில் கொடூரமாக தாக்க படும் காட்சிகளும் சனாவுல்லா வலி தாங்காமல் கதறும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

சம்பவ இடத்தை அடைந்த போலீஸ் சனாவை மீட்டு பெட்ராபெத் ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றனர். நிலைமை மோசம் அடையவே அவரை மல்தா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கும் பின்னர் sskm மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவர் மரணம் அடைந்தார்.

தாயின் மன வேதனை:

இதைக் குறித்து சனாவுல்லா வின் தாயார் சபிரா பிபி தெரிவித்ததாவது : “என் மகனை கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அவர் திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். பிறகு சற்று நேரத்தில் மற்றொரு நபர் வந்து சனாவுல்லா கடுமையாக தாக்கப்படுவதாக கூறினார் நாங்கள் அங்கு சென்று அடைவதற்கு முன்பு போலீசார் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர் ஆனால் அந்த நாளின் பிற்பகுதியில் போலீசார் என்னை அழைத்து உங்கள் மகன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் அதனால் இந்த வெற்று காகிதத்தில் கையெழுத்திட்டு தந்தால் அவரை மக்கள் காலேஜில் அனுமதிக்க இயலும் என்று கூறினர். மருத்துவமனையில் என் மகன் உடலில் எந்த உடையும் இல்லாமல் கடத்தப்பட்டு இருப்பதை கண்டேன் அவனுடைய கண்கள் மற்றும் காதுகள் முற்றிலுமாக சேதமடைந்து இருந்தன மேலும் அவனுடைய மர்ம உறுப்பு பகுதிகளிலும் கடுமையான காயங்கள் தென்பட்டது அவன் இரு காதுகள் மற்றும் தலையில் இருந்து ரத்தம் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.”

மேலும் போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு 2000 ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவித்தார் சனாவின் தாயார். உங்கள் மகன் பைக் திருடியதாக குற்றம் சாட்டப்படுகிறதே என்று கேட்கப்பட்டபோது ஒருவேளை அவர் திருடி இருந்தாலும் கூட அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும் இவ்வாறு அடித்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் மேலும் என் மகன் காவல் நிலையத்திலும் போலீசாரால் அடிக்கப்பட்டுள்ளார் . சமீபத்தில் தான் என்னுடைய கணவரை இழந்து தற்போது என்னுடைய மூத்த மகனையும் இழந்து விட்டேன் என்று தெரிவித்தார்.

போலீசார் இந்த சம்பவம் குறித்து இதுவரை 2 பேரை கைது செய்துள்ளனர் மீதமுள்ள மற்ற குற்றவாளிகளையும் விரைவில் பிடித்து விடுவோம் என்று கூறி உள்ளனர்.

சனாவுல்லாஹ் 3 குழந்தைகள் , மனைவி மற்றும் தாயுடன் சக் மெஹர்டி எனும் ஊரில் கடுமையான ஏழ்மையில் வாழ்ந்து வந்தார். தற்போது இவரின் குடும்பம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

மேலும் நாம் பதிவு செய்துள்ள இந்த செய்தி தி ஹிந்து நாளிதழை தவிர வேறு எந்த ஒரு முக்கிய இந்திய ஊடகத்திலும் செய்தியாகக்கூட பிரசுரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.