Hate Speech Intellectual Politicians Islamophobia

முஸ்லிம் பெண்களை இந்து இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்யுங்கள் – பாஜக தலைவரின் வரம்பு மீறிய கருத்தால் பொது மக்கள் கொந்தளிப்பு.

Published date: 1-07-2019- 8:00PM

சுமிதா சிங் கவுர்  என்பவர் பாரதிய ஜனதா கட்சியின்  பெண்கள் பிரிவான மகிளா மோர்ச்சா என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தவர். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமாக..


“முஸ்லிம்கள் குறித்து ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது அதாவது இந்து மதத்தை சேர்ந்த சகோதரர்கள் பத்து நபர்கள் வீதம் குழுக்களை உண்டாக்கி  முஸ்லிம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை அவர்களுடைய வீட்டினுள் புகுந்து பலவந்தமாக கூட்டு பலாத்காரம் செய்ய வேண்டும் அதற்குப் பிறகு அவர்களின் உடலை சந்தையின் நடுப்பகுதியில் தொங்கவிட வேண்டும்” என்று கமென்ட் பதிவு செய்துள்ளார்.


மேலும் அவர் கூறுகையில் முஸ்லிம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை மானபங்கம் படுத்துவதைத் தவிர இந்தியாவை காப்பாற்றுவதற்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பகுத்தறிவு கொண்ட எந்த ஒரு மனிதனாலும் இப்படிப்பட்ட கேவலமான பதிவிற்கு வக்காலத்து வாங்கவோ இதற்கு சப்பைக் கட்டு கட்ட இயலவே இயலாது என்று புரிந்துகொண்ட பாஜகவினர் , இவரின் இந்த கமெண்ட் சமூக வலைதளங்களில் வைரல் ஆன போது பாஜகவை தொடர்புகொண்ட செய்தியாளர்களிடம் இவரின் கருதிற்காக பாஜகவின் மகிளா அணியில் இருந்து ஜூன் 27 ஆம் தேதி அன்றே நீக்கப்பட்டு விட்டார் என்று பாஜகவின் பிரமுகர் விஜயா ராகட்கர் டுவிட்டரில் பதிவு செய்தார்.


இவ்வளவு மோசமான கருத்தை தெரிவித்த இருப்பவரை  தண்டனையாக வெருமென கட்சியில் இருந்து நீக்குவது என்பது எந்த விதத்திலும் ஒரு தண்டனையாக எடுத்துக்கொள்ளப்படாது என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும்  சுனிதா பதிவு செய்த கேவலமான அந்த பதிவு கொலை மிரட்டல், சமூகப் பிரிவினை உண்டாக்குதல், வன்முறை தூண்டுதல்,  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் , போன்ற எத்தனையோ வழக்குகளில் கைது செய்து சிறையிலடைக்க கூடிய அளவிற்கான ஒரு கருத்தை வெளியிட்டும் கூட இன்று வரை இவர் மீது ஒரு FIR அல்லது எந்த வித கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இத்தனை கேவலமான பதிவு செய்த பிறகும் இதுவரை சம்பந்தப்பட்ட பெண்மணி எந்தவிதமான மன்னிப்போ, வருத்தத்தையோ தெரிவிக்காமல் உள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.