தலைமை பூசாரி யோகி ஆதித்யநாத் ஆளும் உபி மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 20,000 இணையதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, அதில் 181 யூடியூப் புரோபைல்களை முற்றிலுமாக அழித்துள்ளது. இதுவரை 9,372 ட்விட்டர் பதிவுகளும், 9,856 முகநூல் பதிவுகளும் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளன. போராட்டகாரர்களுக்கு ஆதரவாகவும் அரசுக்கு எதிராகவும் பதிவிட்டதால் 124 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இன்னும் 93 பேர் மீது FIR பதிந்துள்ளது.
19,000 சமூகவலைதள கணக்குகள் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளது. யோகியின் தலைமையிலான போலீசாரால் இதுவரை 21 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அனைவரும் முஸ்லிம்கள். அவர்களை உள்ளூரில் அடக்கினால் மதக்கலவரம் வரும் என்று காரணம் காட்டி 20-70 கிலோமீட்டர்கள் தள்ளியுள்ள இடங்களில் கொண்டுபோய் அடக்கம் செய்யுமாறு உள்ளூர் மாஜிஸ்திரேட்டை விட்டு அறிவிப்பு செய்ய வைத்துள்ளனர்.
அரசுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பாக தெரிவிக்குப்பட்டுள்ளது.
எனினும் கலவரத்தை நடத்துவதே யோகி அரசு தான். மற்ற மாநிலங்களில் இல்லாத கலவரங்கள் உபியில் மட்டும் நடக்க காரணமென்ன என கூறி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்