Indian Economy

கொங்கு முதலாளிகளுக்கு கடன் மூட்டை, குஜராத்தி மார்வாடிகளுக்கு 68,000 கோடி கடன் தள்ளுபடி..

”…வாருங்கள் தமிழகத்து இந்துக்களே!!

மார்வாடிகளை வாழவைப்போம், முஸ்லீம் தமிழர்களை விரட்டுவோம், பிற தமிழன் தலையிலே மிளகாய் அரைப்போம்..பாரத் மாதாக்கீ ஜே!!!” என பாஜக-இந்துத்துவ அமைப்புகள் அழைக்கின்றன. நீங்கள் தயாரா..?
வட இந்தியா மார்வாடி-பனியா முதலாளிகளுக்கு ரூ68,000 கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன வங்கிகள். இன்று வெளியான அர்.டி.ஐ செய்தி அம்பலப்படுத்துகிறது. கடந்த வாரம் கோவையின் கொடீசியா எனும் சிறு-குறு தொழில் வர்த்தகக் கழகம் இந்தியா முழுவதுமுள்ள சிறு-குறு தொழில்களுக்கான கடனில்/ வரியில்/வட்டியில் சலுகை கேட்டிருந்தனர்.

நடுத்தர குடும்பத்தினர் ஈ.எம்.ஐ/ வங்கிக்கடன்/கல்விக்கடன்/வீட்டுக்கடன் கட்ட கால அவகாசம் கேட்டிருந்தனர். ஏழைகள் தமது தொழில்களுக்கான உதவியை கேட்டிருந்தனர். ஆனால் இதுவரை பாஜக இந்துத்துவ மோடி அரசு இதற்கு பதில் சொல்லவில்லை. ஆனால் சத்தமில்லாமல் மார்வாடி-பனியா குஜராத்தி முதலாளிகளுக்கு கடனை தள்ளுபடியே செய்திருக்கின்றன என ரிசர்வ் வங்கியின் ஆர்.டி.ஐ செய்தி சொல்லுகிறது.

‘இந்துக்களே ஒன்று திரள்’ என கொம்பு சீவும் கொங்குப் பகுதி பாஜக/ஆர்.எஸ்.எஸ்/இந்துமுன்னனிக்கு பணமும், பொருளும் கொடுத்து உதவும் தமிழகத்தின் முதலாளிகள் என்ன செய்யப்போகிறார்கள்? ஜி.எஸ்.டி கட்டி, வருமான வரி கட்டி, கடன் கட்டி, கடனுக்கான வட்டிகட்டி தொழில் நசிவடைந்து இருந்தாலும், ‘நான் இந்து’ என நெஞ்சு நிமிர்த்தி நின்று இனிமேலும் நட்டப்படப் போகிறார்களா? அல்லது புத்திசாலித்தனமாக தமிழர் அரசியலில் இணைந்து உரிமையை மீட்கப் போகிறார்களா?

உங்களைக் காப்பாற்ற பொன்னாரோ, சிபி.ராதாகிருஸ்னனோ, வானதி மேடமோ, குருமூர்த்தி/சேகர்/நாராயணன் வகையறாக்கள் வரப்போகிறார்களா? வாய்ப்பே இல்லை நண்பர்களே. இதை அம்பலமாக்கி எதிர்த்து மே17 இயக்கமும், பெரியாரிய-தமிழ்த்தேசிய இயக்கங்களும் பேசி வருகின்றன.
ரிசர்வ் வங்கியின் தகவல்உயர் அதிகாரி அபெய்குமார் இத்தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இதில் 68,607 கோடி ரூபாயை செப்டம்பர் 2019லேயே தள்ளுபடி செய்துவிட்டதான தகவல் வெளியிட்டிருக்கிறார். இது பற்றி 2020இல் பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் கேட்டதற்கு நிர்மலா சீதாராமன் பதில் சொல்ல மறுத்திருக்கிறார். இதை ஒரு ஆர்.டி.ஐ மூலம் விசரித்ததில் உண்மை அம்பலமாகி இருக்கிறது. விவரத்தை பார்ப்போமே.

எவர் வீட்டு பணம் ?

பல ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றிய முகுல் சோக்சியின் (தற்போது இந்தியாவிலிருந்து தப்பி வெளிநாட்டில் இருக்கிறார்) கீதாஞ்சலி நிறுவனத்திற்கு 5, 492 கோடியும், அவரது பிற நிறுவனமான கிலி, நட்சத்திராவிற்கு ரூ1109 கோடி,சந்தீப் ஜுன்ஜிுன்வாலா, சஞ்சய் ஜுன்ஜிுன்வாலாவின் ரேய் அக்ரோவிற்கு ரூ. 4314 கோடி(இவர்கள் தேடப்படும் குற்றவாளிகள்), ஜத்தின் மேத்தாவிற்கு 4,076 கோடி ரூபாய் (இவர் சிபிஐயால் விசாரிக்கப்படுகிறவர்), ரோட்டோமேக் பேனா நிறுவனத்தின் கோத்தாரி குடும்பத்திற்கு 2850 கோடி ரூபாய்,
பாபா ராம் தேவ், பால்கிருஸ்சனின் ருச்சி சோயாவிற்கு 2212 கோடி ரூபாய், குவாலியரின் ஜீம் டெவலப்பர்ஸ் 2012 கோடி ரூபாய், அகமதாபாத்தின் ஹரிஷ் மேத்தாவின் வைர வியாபார நிறுவனத்திற்கான 1962 கோடி ரூபாய்.

இதுமட்டுமல்லாமல் விஜய் மல்லாயாவிற்கு 1943 கோடி ரூபாய்
என பட்டியல் நீளமானது. இதில் அதிகமாக வைர வியாபாரிகள். பெரும்பாலோனொர் தேடப்படும் குற்றவாளிகள்
தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகள், பாஜக, ஆர்,எஸ்.எஸ். இந்து முன்னனிக்கு ஆதரவளிக்கும் தமிழர்களே என்ன செய்யப் போவதாக திட்டம் வைத்திருக்கிறீர்கள்?.

சிந்திக்காவிடில் தமிழர்களாகிய நாம் சிதைக்கப்படுவோம். விழித்தெழுவீர்களா!

இந்தத் தகவலை சிறு-குறு தொழிலில் ஈடுபட்டிருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், பிற மக்களுக்கும் பகிர்ந்து/அனுப்பி இந்துத்துவ அரசியலை அம்பலப்படுத்த உதவுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார் திருமுருகன் காந்தி.