பாலத்தின் இரு புறத்திலும் சி.ஆர்.பி.எஃ ப் படையினரால் துரத்தப்பட்டதில் நதியில் குதித்து மரணமடைந்த 17 வயது காஷ்மீர் சிறுவன். கடந்த திங்களன்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மக்களவையில் அறிவித்தார். அறிவிப்பதற்கு முன்பாகவே கஷ்மீரில் 144 தடை உத்தரவு, மேலும் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மக்கள் பெரும் அச்சத்திலும் மூழ்கியிருந்தனர். இந்த நாளில் தான் 17 வயது சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமித்ஷா அறிவிப்பை […]
Tag: death
காவலர் அப்துல் கனி ராஜஸ்தானில்,கொடூர கும்பலால் அடித்து கொலை !
நேற்று (13-7-19) ராஜஸ்தானின் ராஜ்சமண்ட் மாவட்டத்தின் பத்மேலா கிராமத்தில் நில தகராறு வழக்கை விசாரிக்கும் போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஒரு கும்பலால் அடித்து கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கட்டைகள் மற்றும் கம்பிகளால் அடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர், இதனால் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 48 வயதான அப்துல் கனி, நில அபகரிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்காக பீம் தொகுதியின் ப்ரார் கிராம பஞ்சாயத்து கிராமத்திற்குச் சென்றிருந்தார். அங்கு […]
அசாம் வெள்ளத்தில் 6 பேர் இறப்பு,8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு !
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் பருவமழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் மிகப் பெரிய நகரமான குவஹாத்தி வழியாக செல்லும் உலகின் மிகப்பெரிய பிரம்மபுத்ரா நதியும், மேலும் ஐந்து இடங்களும் அபாய அடையாளத்திற்கு மேலே பாய்ந்து செல்கின்ற என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 27,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளநீருக்கு அடியில் இருப்பதாகவும், அசாம் முழுவதும் 68 நிவாரண […]